Advertisment

ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம் நடந்த இடம் யாருக்கு சொந்தம்? புதிய தகவல்

படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடம் யாருடையது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
BSP Armstrong Murder

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்

பகுஜன் திராவிட கட்சியின் மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடம் யாருடையது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் முக்கிய தலித் தலைவராக வலம் வந்தவர் தான் ஆம்ஸ்ராங். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த இருந்த இவர், சென்னை பெரம்பூர் பகுதியில் வசித்து வந்த வந்த நிலையில்நேற்று (ஜூலை 5) இரு சக்கர வாகனத்தில் வந்த பேர் கொண்ட மர்ம கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.

இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த ஆம்ஸ்ட்ராங் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஆம்ஸ்ட்ராங் மறைவுக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி சென்னை வந்து அஞ்சலி செலுத்தினார். இந்த படுகொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இதனிடையே ஆம்ஸ்ராங் கொலை வழக்கில்8 பேர் நீதிமன்றத்தில் சரணமடைந்துள்ளனர்.

இதனிடையே பிரேத பரிசோதனைக்கு பின் ஆம்ஸ்ட்ராங்கின் உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக பெரம்பூர் மாநகராட்சி பள்ளியில் வைக்கப்பட்டது. பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் அவரது உடலக்கு அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து பகுஜன் சமாஜ் கட்சியின் அலுவலகத்திலேயே ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்ய அவரது கட்சியின் சார்பில், நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்து மனு தாக்கல் செய்யப்பட்டது.

மேலும் ஆம்ஸ்ராங்கின் மனைவியும் வழக்கறிஞருமான பொற்கொடி சார்பில், சென்னை மாநகராட்சி அலுவலகத்திலும் இது தொடர்பாக கோரிக்கை வைக்கப்பட்டது. மாநகராட்சி தரப்பில் எவ்வித பதிலும் தெரிவிக்காத நிலையில், இது குறித்து நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. கட்சி அலுவலக பகுதியில் 15 அடி சாலை தான் உள்ளது. கூட்ட நெரிசல் ஏற்பட்டு, விபத்துக்கு காரணமாக அமையும். சட்டம் ஒழுங்கு பிரச்சனை வர வாய்ப்பு உள்ளது. இதை விட பெரிய இடமாக இருந்தால் சொல்லுங்கள் உத்தரவு கொடுக்கிறேன் என்று நீதிபதி கூறியிருந்தார்.

தற்போது லதா என்பவர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனு அளித்து, ஆம்ஸ்ட்ராங்கின் இறுதிச்சடங்கை செய்யுமாறு கேட்டுக்கொண்டார். அந்த கோரிக்கையை திருவள்ளூர் மாவட்டம் கொத்தூர் ஊராட்சி தலைவருக்கு அனுப்பியதை தொடர்ந்து, அவர்கள் வார்டு உறுப்பினர்கள் மற்றும் தலைவர் என அனைவரும் இணைந்து தீர்மானம் நிறைவேற்றி, ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்ய அந்த இடத்தை வாழங்கியுள்ளனர். இந்த இடத்தின் அளவு ஒரு ஏக்கர் என்று கூறப்படுகிறது.

இந்த இடத்தில் ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், எதிர்காலத்தில் நினைவிடம் அமைக்கப்பட உள்ளதாகவும், கட்சியின் மாநில மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் என அனைவரும் கூடி அதற்கான முடிவை எடுக்க உள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment