தமிழக துணை முதல்வரும் நிதித்துறை இலாகாவை வைத்திருக்கும் ஓ.பன்னீர் செல்வம் இன்று (பிப்ரவரி 14) 2020-21ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டைதாக்கல் செய்து உரையாற்றினார். ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்யும் 10ஆவது பட்ஜெட் இதுவாகும். இதன் மூலமாக தமிழக பட்ஜெட்டை அதிகமுறை தாக்கல் செய்தவர் என்ற பெருமையை ஓ. பன்னீர்செல்வம் பெற்றுள்ளார்.
துணை முதலவர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்த பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அவற்றில் எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்த முழு விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
* நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ.18,540.12 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
* 2020-21ம் நிதியாண்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.34,181 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* உயர் கல்வித்துறைதுக்கு ரூ.5,052.84 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* வேளாண்மைத் துறைக்கு ரூ.11,894.48 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
* தமிழக அரசு போக்குவரத்து துறைக்கு ரூ 2,716.26 கோடி நிதி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது.
*ஆதிதிராவிடர் முன்னேற்றத்திற்காக ரூ.4,109.53 கோடி ஆதி திராவிடர் நலத்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
* தமிழ் வளர்ச்சி துறைக்கு ரூ.74 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* காவல்துறைக்கு ரூ.8876.57 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
* சிறைச்சாலை துறைக்கு ரூ.392 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* நீதி நிர்வாகத்திற்கு ரூ.1,403 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.
* தமிழக அரசு உணவுத்துறைக்கு ரூ.6,500 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
* கால்நடைத்துறைக்கு 199 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
* மீன்வளத்துறைக்கு 1,229.85 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
* ஊரக வளர்ச்சித் துறைக்கு ரூ.23,161.54 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
* ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 6,754 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
* நீர் பாசனத்திற்காக ரூ.6,991 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 5,306 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
* நகராட்சி நிர்வாகத்திற்கு மொத்தமாக ரூ.18,540 கோடி ஒதுக்கீடு.
* சுகாதாரத்துறைக்கு ரூ.15,863 கோடி ரூபாய் ஒதுக்கீடு
* தொழிலாளர் நலத்துறைக்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு.
* தொழில்துறைக்கு ரூ.2,500 கோடி ஒதுக்கீடு.
* தகவல் தொழில்நுட்பத்துறைக்கு ரூ.153 கோடி ஒதுக்கீடு.
* கைத்தறி துறைக்கு ரூ.1,224.24 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* நெடுஞ்சாலைத் துறைக்கு ரூ.15,850.54 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
* பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு ரூ.1064 கோடி ஒதுக்கீடு.
* இந்து சமய அறநிலைய துறைக்கு ரூ.281 கோடி ஒதுக்கீடு.
* ஜவுளித் துறைக்கு ரூ.1224 கோடி ஒதுக்கீடு.
*விளையாட்டு துறைக்கு ரூ.218.66 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.