Advertisment

TN Agri Budget Highlights: ரூ. 16,500 கோடி பயிர் கடன் வழங்க இலக்கு - பட்ஜெட்டில் அறிவிப்பு

TN Agri Budget 2024 Updates: தமிழ்நாடு அரசின் வேளாண் பட்ஜெட் தொடர்பான செய்திகளை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
MRK Budget.jpg

Tamilnadu: 2024-25-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை சட்டப் பேரவையில் இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்கிறார். 

Advertisment

இதில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக நேற்று நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 

  • Feb 20, 2024 15:52 IST
    திமுக அரசு உழவர்களை உயிராக நினைக்கிறது : முதல்வர் ஸ்டாலின்

    உழவர் பெருமக்களை திமுக அரசு உயிராக நினைக்கிறது என்பதை வேளாண் நிதிநிலை அறிக்கை உணர்த்துகிறது மக்களை மட்டுமல்ல, மண்ணுயிர் அனைத்தையும் மேம்படுத்தும் ஆட்சி என முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.



  • Feb 20, 2024 15:51 IST
    சண்டிகர் மேயர் தேர்தல் - உச்சநீதிமன்றம் உத்தரவு

    சண்டிகர் மேயர் தேர்தல் விவகாரத்தில், மீண்டும் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, செல்லாத 8 வாக்குகளையும் சேர்த்து மீண்டும் எண்ணி தேர்தல் முடிவுகளை அறிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.



  • Feb 20, 2024 14:46 IST
    'தி.மு.க அரசு உழவர் பெருமக்களை உயிராக நினைக்கிறது' - ஸ்டாலின் அறிக்கை

    “உழவர் பெருமக்களது வாழ்வுக்கும் மேன்மைக்குமான அனைத்துத் திட்டங்களையும் தீட்டியிருக்கிறோம்: தி.மு.க அரசு உழவர் பெருமக்களை உயிராக நினைக்கிறது என்பதை வேளாண் நிதிநிலை அறிக்கை உணர்த்துகிறது” என தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2024-25 குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். 



  • Feb 20, 2024 14:44 IST
    'வரலாற்று சிறப்புமிக்க வேளாண்நிதி நிலை அறிக்கை': செல்வப்பெருந்தகை

    "வரலாற்று சிறப்புமிக்க வேளாண்நிதி நிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கொப்பரை தேங்காய் அதிக விலை கொடுத்து விவசாயிகளிடம் வாங்க வேண்டும் என்பதுதான் காங்கிரஸ் கோரிக்கை.நியாய விலை கடைகளில் தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் கொடுப்பது குறித்து விவசாயிகள் கோரிக்கைக்கு, நிதிநிலை அறிக்கை மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

    இது தொடர்பான வாதம் தொடர்ந்து நடைபெறும். விவசாயிகளின் கோரிக்கையை காங்கிரஸ் முன் வைக்க உள்ளது.மோடி அரசு வந்ததில் இருந்து விவசாயிகளை வஞ்சிக்கிறது. தமிழ்நாட்டுக்கு உரிய நிதியை மத்திய அரசு தரவில்லை." என்று சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார். 



  • Feb 20, 2024 14:29 IST
    'பேரிடரை பரிசாக தந்திருக்கும் வேளாண் பட்ஜெட்': டி.டி.வி தினகரன் விமர்சனம்  

    "இயற்கை பேரிடர்களால் தொடர்ந்து பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு செயற்கை பேரிடரை பரிசாக தந்திருக்கும் தி.மு.க அரசின் வேளாண் பட்ஜெட்" அம்மா மக்கள் முன்னேற கழக தலைவர் டி.டி.வி தினகரன் விமர்சனம்  செய்துள்ளார்.



  • Feb 20, 2024 14:24 IST
    'தென்னை விவசாயிகளுக்கு எந்த அறிவிப்பும் இல்லை': இ.பி.எஸ் விமர்சனம்

    "பல்வேறு துறைகளை ஒன்றிணைத்து வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல். நெல், கரும்பு குறித்து தி.மு.க வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கையால் விவசாயிகளுக்கு பலனில்லை

    குறுவை சாகுபடி விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை பட்ஜெட்டில் அறிவிக்காதது வேதனை அளிக்கிறது. காவிரி நதிநீர் பங்கீடு முறையாக பெறாத காரணத்தால் டெல்டா விவசாயிகள் பாதிப்பு. நீரின்றி காய்ந்த சம்பா, தாளடி சாகுபடி பயிரால் விவசாயிகள் பாதிப்பு

    பாதிப்புக்குள்ளான விளைநிலங்களை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை முழுமையாக இயக்க நடவடிக்கை தேவை. பாதிக்கப்பட்ட சம்பா, தாளடி சாகுபடி விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35,000 வழங்க வேண்டும். வேளாண் பட்ஜெட்டில் தென்னை விவசாயிகளுக்கு எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை" என்று சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 



  • Feb 20, 2024 13:46 IST
    பயிர்க்கடன் நிதி ஒதுக்கீடு

    "கூட்டுறவு பயிர்க்கடன் வழங்க ரூ.16,500 கோடி இலக்கு. பயிர்க்கடன் வட்டி மானியத்திற்கு ரூ.700 கோடி ஒதுக்கீடு"என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். 



  • Feb 20, 2024 13:20 IST
    விவசாயிகளுக்கு பலனில்லாத பட்ஜெட் - இ.பி.எஸ் விமர்சனம்

    "குவிண்டால் நெல்லுக்கு ரூ.2,500 வழங்கப்படும் என்ற அறிவிப்பை செயல்படுத்தவில்லை. குறுவை சாகுபடியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.35,000 இழப்பீடு வழங்க வேண்டும். 

    காலம் தாழ்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் டெல்டா பயிர்கள் பாதிப்பு. அ.தி.மு.க ஆட்சியில் விவசாயிகளிடம் இருந்து கரும்பு முழுவதும் கொள்முதல் செய்யப்பட்டது. 

    தென்னை, பனை விவசாயிகளுக்கு எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை.  ஆன்லைன் நெல் கொள்முதல் முறையை ரத்து செய்ய வேண்டும். மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சிக்கும் நிலையில், எந்த அறிவிப்பையும் அரசு வெளியிடவில்லை" என்று சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 

     



  • Feb 20, 2024 12:52 IST
    குமரியில் 2 கோடி மதிப்பீட்டில் முல்லைப்பூங்கா 

    "கன்னியாகுமரியில் 2 கோடி மதிப்பீட்டில் முல்லைப்பூங்கா அமைக்கப்படும். சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கன்னியாகுமரியில் 2 கோடி மதிப்பீட்டில் சூரியத்தோட்டம் அமைக்கப்படும்" என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். 



  • Feb 20, 2024 12:25 IST
    நீரிழிவு நோயாளிக்கு ஏற்ற, சத்துகள் செறிவூட்டப்பட்ட நெல் ரகங்கள்

    நீரிழிவு நோயாளிக்கு ஏற்ற, சத்துகள் செறிவூட்டப்பட்ட நெல் ரகங்கள் உருவாக்கப்படும். அதிக ஊட்டசத்து உள்ள பாரம்பரிய நெல் ரகங்களை மேம்படுத்தவும், நேரடி நெல் விதைப்பிற்கு ஏற்ற நெல் ரகங்களை துரித இனம்பெருக்க முறை வாயிலாக உருவாக்கவும், தேவையான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும்- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

    மொத்தம் ரூ.42,281 கோடியில் வேளாண் பட்ஜெட் தாக்கல்  



  • Feb 20, 2024 12:07 IST
    10 பொருட்களுக்கு புவிசார் குறியீடு 

    சத்தியமங்கலம் செவ்வாழை, கொல்லிமலை மிளகு, மீனம்பூர் சீரக சம்பா, ஐயம்பாளையம் நெட்டைத் தென்னை, உரிகம்புளி, புவனகிரி மிதிபாகற்காய், செஞ்சோளம், நெல்வேலி அவுரி, ஓடைப்பாடி விதையில்லா திராட்சை, செங்காந்தள் விதை ஆகிய 10  பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற ரூ.30 இலட்சம் ஒதுக்கீடு



  • Feb 20, 2024 11:55 IST
    ரூ.16,500 கோடி பயிர் கடன் வழங்க இலக்கு 

    விவசாயிகளுக்கு ரூ.16,500 கோடி பயிர் கடன் வழங்க இலக்கு 



  • Feb 20, 2024 11:50 IST
    சூரிய சக்தி மின்வேலிகள் அமைத்திட நிதி

    விவசாயிகள் சூரிய சக்தி மின்வேலிகள் அமைத்திட ₹2 கோடி நிதி ஒதுக்கீடு!



  • Feb 20, 2024 11:49 IST
    பந்தல் காய்கறிகள் பயிரிடுவதை ஊக்குவிக்க நிதி

    பந்தல் காய்கறிகள் பயிரிடுவதை ஊக்குவிக்க ரூ. 9.40 கோடி நிதி ஒதுக்கீடு - வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்



  • Feb 20, 2024 11:49 IST
    தோட்டக்கலை பண்ணைகள், பூங்காக்கள் அமைக்க ரூ.10 கோடி நிதி

    புதிய அரசு தோட்டக்கலை பண்ணைகள், பூங்காக்கள் அமைத்திட ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்



  • Feb 20, 2024 11:48 IST
    வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்கப்படும்

    ரூ.32.90 கோடி மானியத்தில் 207 தனியார் வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்கப்படும் - வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்



  • Feb 20, 2024 11:47 IST
    நுண்ணீர்ப் பாசனம் அமைக்க ரூ.773.23 கோடி ஒதுக்கீடு

    2.22 லட்சம் ஏக்கரில் நுண்ணீர்ப் பாசனம் அமைக்க ரூ.773.23 கோடி ஒதுக்கீடு - வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்



  • Feb 20, 2024 11:47 IST
    நுண்ணீர்ப் பாசனம் அமைக்க ரூ.773.23 கோடி ஒதுக்கீடு

    2.22 லட்சம் ஏக்கரில் நுண்ணீர்ப் பாசனம் அமைக்க ரூ.773.23 கோடி ஒதுக்கீடு - வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்



  • Feb 20, 2024 11:29 IST
    பசுந்தாள் உரப் பயிரிட, ரூ.20 கோடி நிதி

    2 லட்சம் ஏக்கரில் பசுந்தாள் உரப் பயிரிட, ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு -அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்



  • Feb 20, 2024 11:18 IST
    நம்மாழ்வார் விருது: ரூ. 5 லட்சம் ஒதுக்கீடு

    சிறந்த உயிர்ம விவசாயிக்கான நம்மாழ்வார் விருதுகளை வழங்க ₹5 லட்சம் ஒதுக்கீடு. முதல் 3 விருது பெறும் விவசாயிகளுக்கு பாராட்டு பத்திரத்துடன் பணப் பரிசும் வழங்கப்படும்- எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்



  • Feb 20, 2024 10:52 IST
    குளங்கள், ஊரணிகள் சீரமைப்பு

    4,773 குளங்கள், ஊரணிகள், வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டுள்ளன 



  • Feb 20, 2024 10:52 IST
    சூரியகாந்தி சாகுபடி விரிவாக்க திட்டம்

    12.500 ஏக்கர் பரப்பளவில் சூரியகாந்தி சாகுபடி விரிவாக்க திட்டம்!



  • Feb 20, 2024 10:51 IST
    பாரம்பரிய நெல் ரகங்கள் உற்பத்தி செய்ய நிதி

    பாரம்பரிய நெல் ரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு 10,000 ஏக்கரில் சாகுபடி மேற்கொள்ள ₹50 லட்சம் நிதி ஒதுக்கீடு



  • Feb 20, 2024 10:46 IST
    விதை மரபணு தூய்மையை உறுதி செய்ய ஆய்வகம்

    விதை மரபணு தூய்மையை உறுதி செய்ய கோவையில் ஆய்வகம்
     
    கோவையில் விதை மரபணு தூய்மையை உறுதி செய்வதற்காக விரைவில் ஆய்வகம் அமைக்கப்படும்- எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்



  • Feb 20, 2024 10:43 IST
    வேப்ப மரக்கன்றுகள் இலவசமாக வழங்கிட நிதி ஒதுக்கீடு

    வேப்ப மரக்கன்றுகள் இலவசமாக வழங்கிட ₹2 கோடி நிதி ஒதுக்கீடு!



  • Feb 20, 2024 10:42 IST
    உயிரி பூச்சிக்கொல்லி தாவரங்களை வளர்த்திட ரூ.1 கோடி

    ஆடாதொடா, நொச்சி போன்ற உயிரி பூச்சிக்கொல்லி தாவரங்களை வளர்த்திட ₹1 கோடி ஒதுக்கீடு!



  • Feb 20, 2024 10:41 IST
    ‘மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்’ - புதிய திட்டம் அறிமுகம்

    மண் வளத்தைக் காக்க ‘மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்’ என்ற புதிய திட்டம் அறிமுகம்,

    தமிழ்நாட்டில் உள்ள விளை நிலங்களின் மண் வளத்தை காக்க 22 இனங்களுடன் ரூ.206 கோடி நிதியில் செயல்படுத்தப்படும் என பட்ஜெட்டில் தகவல் 



  • Feb 20, 2024 10:40 IST
    மண் பரிசோதனைக்கு 6.27 கோடி நிதி

    2 லட்சம் விவசாயிகளின் நிலத்தில் மண் பரிசோதனைக்கு ₹6.27 கோடி நிதி ஒதுக்கீடு 



  • Feb 20, 2024 10:39 IST
    மண்புழு உரப்படுக்கைகள் வழங்கிட மானியம்

    "10,000 விவசாயிகளுக்கு தலா இரண்டு மண்புழு உரப்படுக்கைகள் வழங்கிட ₹6 கோடி மானியம்" -எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வேளாண்மைத்துறை அமைச்சர்



  • Feb 20, 2024 10:33 IST
    இலக்கியங்களை மேற்கோள்காட்டி வேளாண் பட்ஜெட் தாக்கல்

    திருக்குறள், சிலப்பதிகாரம் உள்ளிட்ட இலக்கியங்களை மேற்கோள்காட்டி வேளாண் பட்ஜெட் தாக்கல்



  • Feb 20, 2024 10:26 IST
    உழவர்களை உச்சத்தில் வைத்து திட்டங்கள்

    உழவர்களை உச்சத்தில் வைத்து சிறப்பான திட்டங்களை செயல்படுத்தும் திமுக அரசு - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்



  • Feb 20, 2024 10:16 IST
    கடந்த 2 ஆண்டுகளில் 1.50 லட்சம் மின் இணைப்புகள்

    வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

    2022-23ம் ஆண்டில் உணவு தானிய உற்பத்தி 116 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது.

    கடந்த 10 ஆண்டுகளில் நிறைவேற்றப்படாமல் இருந்த பாசன மின் இணைப்பிற்கான விண்ணப்பங்களில், கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 1.50 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

    மேலும் நடப்பாண்டிலும் 50,000 மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன



  • Feb 20, 2024 10:13 IST
    பச்சைத் துண்டு அணிந்து பேரவைக்கு வந்த பாமக எம்.எல்.ஏ.க்கள்

    தமிழ்நாடு அரசின் வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படும் நிலையில் பச்சைத் துண்டு அணிந்து சட்டப்பேரவைக்கு வந்த பாமக எம்.எல்.ஏ.க்கள்



  • Feb 20, 2024 10:12 IST
    வேளாண் பட்ஜெட் தாக்கல்

    வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து  எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உரை. உழவர்களை உச்சத்தில் வைத்து திட்டங்கள் கொண்டு வரப்படுகிறது என்றும் பேச்சு 



  • Feb 20, 2024 09:19 IST
    வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல்

    தமிழ்நாடு அரசின்  வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. . வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.



  • Feb 19, 2024 17:16 IST
    2024-25 பட்ஜெட்டில் துறை ரீதியாக நிதி ஒதுக்கீடு விபரம்

    நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் - ரூ. 25,858 கோடி

    மகளிர் நலன், சமூக நலத்துறை - ரூ. 13,720 கோடி

    பள்ளிக்கல்வி - ரூ.44,042 கோடி

    மருத்துவம் - ரூ. 20,198 கோடி

    நீர் வளத்துறை - ரூ. 8,398 கோடி

     உயர் கல்வி - ரூ. 8,212 கோடி

    நெடுஞ்சாலைகள் - ரூ. 20,043 கோடி

    ஆதி திராவிடர், பழங்குடியினர் மேம்பாடு - ரூ. 3,706 கோடி

    போக்குவரத்து - ரூ. 6,371 கோடி

     தொழில் துறை - ரூ. 2,295 கோடி

    சிறு குறு நிறுவனங்கள் - ரூ. 1,557

    சிறுபான்மையினர் நலன் - ரூ.1429 கோடி

    இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு - ரூ. 440 கோடி



  • Feb 19, 2024 16:14 IST
    'தி.மு.க அரசின் பகல் கனவு': டி.டி.வி.தினகரன் அறிக்கை

    அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் “தமிழ்நாடு சட்டப்பேரவையில் ‘மாபெரும் தமிழ்க்கனவு’ எனும் பெயரில் தாக்கலாகியிருக்கும் நிதிநிலை அறிக்கை தமிழ்நாடு மக்களை மீண்டும் ஏமாற்றும் தி.மு.க அரசின் பகல் கனவு”

    தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கை ஏழை,  மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் ஏமாற்றமளிக்கும் தேர்தல் கால விளம்பர பட்ஜெட்டாகவே இருக்கிறது; சமூகநீதியை முதல் இலக்காக நிர்ணயித்திருக்கும் அதே  திமுக அரசு தான் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த தயங்குகிறது;

    அடுத்த 2 ஆண்டுகளில் 50 ஆயிரம் அரசுப்பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்படும் என அறிவித்திருப்பதன் மூலம் 3 லட்சம் அரசுப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்ற  தேர்தல் வாக்குறுதி நிறைவேறா  பகல் கனவாக மாறியிருக்கிறது;

    கவர்ச்சிகரமான அறிவிப்புகளின் மூலம் திமுக தனது நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சார களமாக தமிழக சட்டமன்றத்தை பயன்படுத்துகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது” என்று அவர் தெரிவித்துள்ளார். 



  • Feb 19, 2024 15:48 IST
    'மக்களை தி.மு.க அரசு ஏமாற்றியுள்ளது': அண்ணாமலை காட்டம்

    பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழக நிதிநிலை அறிக்கை தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழக பட்ஜெட்டில் அறிவித்திருந்த வெற்று அறிவிப்புகளையே இந்த ஆண்டு பட்ஜெட்டிலும் அறிவித்து, மீண்டும் ஒரு முறை தமிழக மக்களை ஏமாற்றி இருக்கிறது தி.மு.க. ஆறுகள் மறுசீரமைப்பு, புதிய பேருந்துகள் என்பவை போன்ற அறிவிப்புகள், ஆண்டுதோறும் பட்ஜெட் அறிக்கையில் மட்டுமே இடம்பெறும் அலங்கார வார்த்தைகள் ஆகிவிட்டனவே தவிர, கடந்த மூன்று ஆண்டுகளாக இவை எதுவும் செயல்படுத்தப்படவில்லை.

    மத்திய அரசின் நலத் திட்டங்களுக்குத் தங்கள் பெயரை சூட்டிக் கொள்வது திமுகவுக்குப் புதிதல்ல என்றாலும், தற்போது பட்ஜெட்டில் அறிவித்திருக்கும் திட்டங்கள் பெரும்பாலும் மத்திய அரசின் திட்டங்கள் மட்டுமே. உண்மையில் திமுக அரசு தமிழக மக்களுக்காகக் கொண்டு வந்த நலத் திட்டங்கள் என்னென்ன என்ற கேள்வி எழுகிறது. மத்திய அரசின் திட்டங்களின் பெயரை மட்டும் மாற்றி விட்டால் போதும் என்று நினைக்கிறதா தி.மு.க? 

    தி.மு.க தனது தேர்தல் வாக்குறுதிகளில் அறிவித்த பெரும்பாலான திட்டங்களைச் செயல்படுத்த எந்த நிதியும் ஒதுக்கியதாகத் தெரியவில்லை. மாறாக, மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதி பெயர் வைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் பல வீண் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. விளம்பர ஆட்சி நடத்துவதற்காக, பொதுமக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதைத் தவிர, பொதுமக்களுக்குத் தேவையான திட்டங்கள் எதையும் புதிதாக அறிவிக்கவில்லை.இந்த ஆண்டாவது, மக்கள் நலன் சார்ந்த திட்டங்களைச் செயல்படுத்தும் என்று நம்பியிருந்த பொதுமக்களை, திமுக அரசின் பட்ஜெட் நட்டாற்றில் விட்டிருக்கிறது." என்று பதிவிட்டுள்ளார்.



  • Feb 19, 2024 14:54 IST
    நன்றி தெரிவித்த கனிமொழி எம்.பி 

    “மாற்றுப் பாலினத்தவரின் உயர்கல்விச் செலவுகள் முழுவதும் தமிழ்நாடு அரசே ஏற்கும் திட்டம்;பெண் கல்வியை ஊக்கபடுத்தும் ‘புதுமைப்பெண் திட்டத்தை’ அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் விரிவுப்படுத்தியது;

    அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களின் உயர்கல்வி கனவுகளுக்கு உறுதுணையாக ‘தமிழ்ப் புதல்வன் திட்டத்தின்’ மூலம் மாதம் ரூ.1000 வழங்குவது போன்ற  திட்டங்களை நிதிநிலை அறிக்கையில் அறிவித்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும் நன்றி" என்று தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி தனது எக்ஸ் வலைதள தளத்தில் பதிவிட்டுள்ளார். 

     



  • Feb 19, 2024 14:45 IST
    'கனவு பட்ஜெட் கானல் நீர்; மக்களுக்கு பயன் தராது': இ.பி.எஸ் விமர்சனம்

    சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், “இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கும் மாநிலமாக தமிழ்நாடு மாறியுள்ளது; தி.மு.க-வின் கனவு பட்ஜெட், கானல் நீர் பட்ஜெட்டாக உள்ளது;

    மக்களின் வளர்ச்சிக்கான திட்டங்கள் பட்ஜெட்டில் இல்லை; தமிழ்நாடு பட்ஜெட்டில் திட்டங்கள் எதுவும் இல்லை; தி.மு.க ஆட்சி வந்ததில் இருந்தே நிதி பற்றாக்குறை அதிகரித்துள்ளது; தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தது போல, தடுப்பணை கட்டும் திட்டங்கள் எதுவும் இல்லை” என்று கூறினார். 



  • Feb 19, 2024 14:10 IST
    'பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது': நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன் பேச்சு 

    “தேசிய பணவீக்கத்தை விட தமிழ்நாட்டில் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது; நிதி பற்றாக்குறை 3.5% ஆக இருக்க வேண்டும்; அந்த வரம்பிற்குள் தமிழ்நாடு அரசு உள்ளது.  தமிழ்நாட்டில் மோட்டார் வாகன விற்பனை சட்டம் மிகவும் திருப்திகரமாக உள்ளது, 4 சக்கர வாகன விற்பனை உயர்ந்துள்ளது. மகளிர் நலன் காக்க புதிய திட்டங்கள் தமிழ்நாடு பட்ஜெட்டில் உள்ளன. 

    இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் தொழிலாளர் பங்கேற்பில் பெண்கள் அதிகம் உள்ளனர். மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ்நாடு இளைஞர்கள் பணிபுரிவதை அதிகரிக்கும் வகையில் 1,000 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். தமிழ்நாட்டின் பொருளாதார நிலை ஆரோக்கியமாக உள்ளது. மத்திய அரசிடம் இருந்து வரும் நிதிப்பகிர்வு, மானியம் குறைந்துகொண்டே வருகிறது. 

    2024 - 25 நிதியாண்டில் வரி அல்லாத வருவாய் ரூ.30,728 கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வரிஏய்ப்பை குறைத்து வரி வருவாயை அதிகரித்து வருகிறோம். 2024 - 25 நிதியாண்டில் தமிழ்நாட்டின் வரி வருவாய் ரூ.1.95 லட்சம் கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம்" என்று தமிழ்நாடு நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன் கூறியுள்ளார். 



  • Feb 19, 2024 14:07 IST
    தமிழ்நாடு பட்ஜெட்: காங்கிரஸ் வரவேற்பு 

    "தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையை காங்கிரஸ் சார்பில் வரவேற்கிறோம்; இதற்கு மேல் இந்த நிதிநிலை அறிக்கையில் எதுவும் செய்ய முடியாது;

    தமிழ்நாடு இந்தியாவிற்கு பல துறைகளில் வழிகாட்டி வருகிறது ஏற்றுமதியில் முதன்மையாக உள்ளது; பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்கு 65% நிதியை தமிழ்நாடு அரசு  தான் கொடுக்கிறது” என்று சட்டப்பேரவை வளாகத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ கூறியுள்ளார். 



  • Feb 19, 2024 14:05 IST
    'அரசின் கனவு நாளை முதல் நனவாக வேண்டும்': ஸ்டாலின் பேச்சு 

     

    "நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கை நமது அரசின் கனவு, அது நாளை முதல் நனவாக வேண்டும்; 

    இதனை மனதில் வைத்து அனைத்துத்துறை அமைச்சர்களும், மாவட்ட ஆட்சியர்களும், மாவட்ட நிர்வாகமும் திட்டங்களை மிகச் சிறப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும்" என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 



  • Feb 19, 2024 13:56 IST
    பட்ஜெட்டில் அறிவித்திருக்கும் திட்டங்கள் பெரும்பாலும் மத்திய அரசின் திட்டங்கள் மட்டுமே: பா.ஜ.க தலைவர் அண்ணாமலை



  • Feb 19, 2024 13:52 IST
    2024-24 பட்ஜெட் - மாநில சொந்த வரி வருவாயின் ஆதாரம்

    2024-24 பட்ஜெட் - மாநில சொந்த வரி வருவாயின் ஆதாரம் .வணிக வரி - ரூ.1.43 லட்சம் கோடி. பத்திரப்பதிவு - ரூ.23,370 கோடி. கலால் வரி - ரூ.12,247 கோடி. வாகனப்பதிவு - ரூ.11,560 கோடி. பிற வகையில் - ரூ.4,615 கோடி



  • Feb 19, 2024 13:33 IST
    தேசிய பணவீக்கத்தை விட தமிழ்நாட்டில் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது

    “தேசிய பணவீக்கத்தை விட தமிழ்நாட்டில் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது; நிதி பற்றாக்குறை 3.5% ஆக இருக்க வேண்டும்; அந்த வரம்பிற்குள் தமிழ்நாடு அரசு உள்ளது. 2024-25 நிதியாண்டில் நிதிப்பற்றாக்குறை 3.44%ஆக இருக்கும். மாநில அரசின் வருவாய் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.- தமிழ்நாடு நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன் 



  • Feb 19, 2024 13:24 IST
    தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையை காங்கிரஸ் சார்பில் வரவேற்கிறோம்

    தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையை காங்கிரஸ் சார்பில் வரவேற்கிறோம்; இதற்கு மேல் இந்த நிதிநிலை அறிக்கையில் எதுவும் செய்ய முடியாது; தமிழ்நாடு இந்தியாவிற்கு பல துறைகளில் வழிகாட்டி வருகிறது ஏற்றுமதியில் முதன்மையாக உள்ளது; பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்கு 65% நிதியை தமிழ்நாடு அரசு தான் கொடுக்கிறது” - சட்டப்பேரவை வளாகத்தில் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எம்எல்ஏ பேட்டி



  • Feb 19, 2024 13:11 IST
    குடிசையில்லா தமிழகம் திட்டத்தையும், காலை சிற்றுண்டி திட்டம் உள்ளிட்ட திட்டங்களை வரவேற்கிறோம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ தளி ராமச்சந்திரன்

    குடிசையில்லா தமிழகம் திட்டத்தையும், காலை சிற்றுண்டி திட்டம், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு ரூ. 1,000 வழங்குவதையும் வரவேற்கிறோம்; ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்டவை குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தும்” - சட்டப்பேரவை வளாகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ தளி ராமச்சந்திரன் பேட்டி



  • Feb 19, 2024 13:02 IST
    சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசே நடத்தாமல், மத்திய அரசு நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்திருப்பது வருத்தமளிக்கிறது

    "தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை, மிகப்பெரிய நிதிச்சுமையின் காரணமாக, ஓரளவுக்கு நிதி மேலாண்மையை கையாண்டுள்ளது; சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசே நடத்தாமல், மத்திய அரசு நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்திருப்பது வருத்தமளிக்கிறது" - சட்டப்பேரவையில் தமிழ்நாடு வாழ்வுரிமைக் கட்சி எம்எல்ஏ வேல்முருகன் பேட்டி



  • Feb 19, 2024 12:57 IST
    தங்கம் தென்னரசுவின் நல்ல தமிழ்நடையை தவிர பட்ஜெல் வேறு ஒன்றும் இல்லை- பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன்

    அமைச்சர் தங்கம் தென்னரசு, அவருக்கே உரித்தான தமிழ் நடையோடு தடையின்றி பட்ஜெட் உரையை படித்தார் அதைத்தவிர வேறு ஒன்றும் இல்லை" - பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன்



Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment