Tamilnadu Budget Highlights : தமிழக சட்டப்பேரவையில், 2022 -23 ம் ஆண்டுக்காக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்த இந்த பட்ஜெட்டில், உள்ள முக்கிய அம்சங்கள் குறித்து விளக்கி வருகிறார். கடந்த ஆண்டு தொடக்கத்தில் ஆட்சிக்கு வந்த திமுக அரசு கடந்த ஆண்டு இறுதியில் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்ததுஇ அதனைத்தொடர்ந்து தற்போது 2-வது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதற்காக சட்டப்பேரவை கூடியதும் பேச வாய்ப்பளிக்குமாறு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தார். ஆனால் பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு அதுகுறித்து பிரிசீலிப்பதாக சபாநாயகர் கூறியதை தொடர்ந்து அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். இந்த அமளிக்கு மத்தியில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பட்ஜெட் குறித்தும் அதன்சிறப்பு அம்சங்கள் குறித்து விளக்கி பேசினார்.
இந்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் :
பெரியாரின் சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு 21 இந்திய மற்றும் உலகமொழிளில் அச்சு மற்றும் மின்னூல் பதிப்புகளாக வெளியிடப்படும். இந்த பணிகள் ரூபாய் 5 கோடி செலவில் மேற்கொள்ளப்டும்.
தமிழ் வழிக்கல்வியை ஊக்குவிக்கும் வண்ணம், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பாடநூல் நோட்டு புத்தகம் போன்ற நலத்திட்ட உதவிகள் அரசு நிதியுதவியின்றி செயல்பட்டுவரும், தமிழ் வழியில் மட்டுமே பாடங்கள் கற்பிக்கும் பள்ளிகளில் இலவசமாக 1 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்படும்
கொற்கையில் ஆழ்கடலாய்வு மேற்கொள்வதற்கு உகந்த இடத்தினை கண்டறிவதற்கு, இந்திய கடல்சார் பல்கலை கழகம், மற்றும் தேசிய கடல்சார் தொழில்நுட்ப கழகத்துடன் இணைந்து இந்த ஆண்டு முன்கள ஆய்வு மேற்கொள்ளப்படும் 7 இடங்களில் அகழாய்வு பணிகள், 2 .இடங்களில் முன்கள ஆய்வு பணிகள் 5 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்
விழுப்புரம், இராமநாதபுரம் மாவட்டங்களில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய அரசு அருங்காட்சியகங்கள் அமைக்கப்படும். தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள பழங்குடியினர் அகழ்வைப்பகம், திருவள்ளூர் மாவட்டம் பூண்டியில் உள்ள தொல் பழங்கால அகழ்வைப்பகம், தர்மபுரியில் உள்ள நடுகற்கள் ஆகியவை 10 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
#TNBudget2022 || தமிழக பட்ஜெட் தாக்கல் 2022 - நிதி ஒதுக்கீடு விபரம்!https://t.co/gkgoZMIuaK | #TNBudget2022 | #PalanivelThiagarajan | #CMStalin | #DMK pic.twitter.com/ItPiJSb29G
— Indian Express Tamil (@IeTamil) March 18, 2022
மாநிலத்தில் உள்ள பழமையாக பொதுக்கட்டிடங்கள் அவற்றின் தனித்துவம் மாறாமல், புனரமைத்து பாதுகாக்கும் பொருட்டு இக்கட்டிடங்களை சீரமைப்பதற்கு இவ்வாண்டு சிறப்பு ஒதுக்கீடாக 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ் வளர்ச்சித்துறைக்கு 82.86 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அரசு நில அளவை பணிகள் துல்லியமாகவும் எளிமையாகவும் மேற்கொள்வதற்காக தொடர்ந்து இயங்கும் தொடர்புநிலையங்களின் அமைப்பு வலுப்படுத்தப்படும். நவீன முறையில் நில அளவை மேற்கொள்ள நில அளவையர்கள் ரோவர் கருவிகள் வழங்கப்படும் இத்திட்டத்திற்காக ரூபாய் 15 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
அரசு நிலங்களை பராமரிப்பதற்கும் பாதுகாப்பதற்கும், ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்கும் பணிகளை மேற்கொள்வதற்கும், சிறப்பு நிதியாக ரூ 50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
#TNBudget2022 || தமிழக பட்ஜெட் தாக்கல் 2022 - நிதி ஒதுக்கீடு விபரம்!https://t.co/gkgoZMIuaK | #TNBudget2022 | #PalanivelThiagarajan | #CMStalin | #DMK pic.twitter.com/WrwQ8dipKL
— Indian Express Tamil (@IeTamil) March 18, 2022
சென்னை பெருநகர பகுதிகளில் வெள்ள பாதிப்பை தடுப்பதற்கும், தக்க பரிந்துரைகளை வழங்க ஆலோசனை குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது இக்குழுக்களின் பரிந்துரைப்படி வெள்ளத்தடுப்பு பணிகள் முதற்கட்டமாக ரூ1000 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும் என முதல்வர் அறிவித்தார். இதற்காக தற்போது 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
முதியோர் ஓய்வூதிய திட்டம், ஆதரவற்ற விதவை ஓய்வூதிய திட்டம், மாற்றுத்திறனாளி ஓய்வூதிய திட்டம், உள்ளிட்ட பல்வேறு சமூக பாதுகாப்பு ஓய்வூதியர்களுக்காக 4816 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பயிற்கடன் தள்ளுபடிக்காக 2531 கோடி, நகைகடன் தள்ளுபடிக்காக 1000 கோடி, சுய உதவி குழுக்களின் தள்ளுபடிக்காக 600 கோடி என மொத்தம் 4131 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
#TNBudget2022 || தமிழக பட்ஜெட் தாக்கல் 2022 - நிதி ஒதுக்கீடு விபரம்!https://t.co/gkgoZMIuaK | #TNBudget2022 | #PalanivelThiagarajan | #CMStalin | #DMK pic.twitter.com/Shx4QE024S
— Indian Express Tamil (@IeTamil) March 18, 2022
நடப்பு நிதியாண்டில் இதுவரை 1415916 விவசாயிகளுக்கு 9773 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் 1076096 குறு சிறு விவசாயிகளுக்கு 7428 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்பட்ட பயிர்கடன்களும் அடங்கும்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் அறிமுக்கப்படுத்தப்பட்ட வட்டியில்ல பயிர்கடன் திட்டத்திற்காக ரூ 200 கோடி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது. பொது விநியோக திட்டத்தை செயல்படுத்த உணவு மானியமாக ரூ 7500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறைக்கு 13176.34 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கால்வாய்கள், ஏரிகள் நீர் வழித்தடங்கள், நீர்நிலைகள், தடுப்பனைகள் மறுநீரமைத்தல் பணிகளுக்காக 2787 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நீர்வளத்துறைக்கு 7338.36 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டள்ளது.
#TNBudget2022 || தமிழக பட்ஜெட் தாக்கல் 2022!https://t.co/gkgoZMqkWC | #TNBudget2022 | #PalanivelThiagarajan | #CMStalin | #DMK pic.twitter.com/G0RFwjUVGC
— Indian Express Tamil (@IeTamil) March 18, 2022
கால்நடை பராமரிப்புத்துறைக்கு 1314.84 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டள்ளது.
சுற்றுச்சூழல் மற்றும் கால்நடை மாற்றம் மற்றும வனத்துறைக்கு 849.21 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பள்ளி கல்வித்துறைக்கு, 36895.89 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.