தமிழக பட்ஜெட் மார்ச் 14 ஆம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்ய உள்ள நிலையில் 100 இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
நாளை தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ளிட்ட 100 இடங்களில் நேரலை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மார்ச் 15ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள வேளாண் பட்ஜெட்டும் நேரலை செய்யப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சட்டசபையில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ள தமிழக பட்ஜெட்டை மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில், சென்ட்ரல் ரயில் நிலையம், அண்ணாநகர் டவர் பூங்கா, கோயம்பேடு பஸ் நிலையம், மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர் ஆகிய கடற்கரை உள்ளிட்ட 100 இடங்களில் காலை 9:30 மணி முதல் ஒளிப்பரப்பு செய்யப்பட உள்ளது.
மேலும், 15ம் தேதி வேளாண் பட்ஜெட்டும், எல்.இ.டி., திரையில் ஒளிபரப்பு செய்யப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
அசுத்த நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை மார்ச் 14 ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. மேலும் முன்பண மானியக் கோரிக்கைகள், கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகளும் பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
வரும் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் பல முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.