உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த கேப்டன் விஜயகாந்த் நேற்று காலை மரணமடைந்த நிலையில், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள தேமுதிக அலுவலக வளாகத்தில் நல்லடக்கம் செய்யகப்பட்டது.
தமிழ் திரையுலகில் கேப்டன் என்று அன்போடு அழைக்கப்படும் நடிகர் விஜயகாந்த், உடல்நலக்குறைவு காரணமாக இன்று மரணமடைந்தார். அவரது மரணம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டது. அதன்பிறகு வெளியூர்களில் இருந்து வரும் ரசிகர்கள் தொண்டர்கள் மற்றும் பல தரப்பட்ட மக்களின் வசதிக்காக விஜயகாந்த் உடல் சென்னை தீவுதிடலில் வைக்கப்பட்டது.
திரைத்துறை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என பலரும் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து, பிற்பகல் 1 மணிக்கு விஜயகாந்த் இறுதி ஊர்வலம் தொடங்கியது. ஆயிரக்கணக்கான மக்கள் சூழ, விஜயகாந்த் உடல் வைக்கப்பட்ட வாகனம் முன்னே செல்ல, பின்னால் பலரும் நடந்தே வந்தனர். இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வெளியாகியது. வாகனத்தின் மீது இருந்த விஜயகாந்த் மகன்கள் விஜயபிரபாகரன், சண்முக பாண்டியன் இருவரும் அழுதபடியே மக்களுக்கு நன்றி தெரிவித்து வந்தனர்.
இந்த இறுதி ஊர்வலத்தில் மக்களுடன் சேர்ந்து, மத்திய மாநில அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர். கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தை நெருங்க நெருங்க, விஜயகாந்தின் மனைவி பிரேமலதா நிலை குலைந்த நிலையில், 72 குண்டுகள் முழங்க விஜயகாந்தின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. கணவரின் கால்களை பிடித்துக்கொண்டு கதறி அழுத பிரேமலதா இறுதியாக அவரது காலை தொட்டு வணங்கிக்கொண்டார்.
அவரது குடும்ப வழக்கத்தின் படி இறுதிச்சடங்கு செய்யப்பட்டதை தொடர்ந்து, விஜயகாந்த் அணிந்திருந்த மோதிரம், தங்க செயின், மற்றும் கண்ணாடி ஆகியவை எடுக்கப்பட்டது. அதன்பிறகு விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட தயார் செய்யப்பட்ட சந்தன பேழையில் அவரது உடல் வைக்கப்பட்டு இறுதி மரியாதை செய்யப்பட்டது. தேமுதிக தொண்டர்கள், ரசிகர்கள், சினிமா நட்சத்திரங்கள் என ஆயிரக்காணக்கானோர் விஜயகாந்த் இறுதிச்சடங்களில் பங்கேற்று கண்ணீர் மல்க அவருக்கு பிரியா விடை கொடுத்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“