Advertisment

கர்நாடகாவுக்கு சட்டப்படி உரிமை இல்லை: தமிழக அரசே விழித்துக்கொள்ள வேண்டும்; பி.ஆர். பாண்டியன்

மத்திய அரசு உதவியோடு தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய தண்ணீரை கர்நாடகாவிடம் பெற்று தருவதற்கான நடவடிக்கையை ஆணைய தலைவர் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்

author-image
WebDesk
New Update
PR Pandian announce Thanjavur candidate on behalf of Cauvery Farmers Union Tamil News

தண்ணீரை தர மறுப்பதற்கு கர்நாடகாவிற்கு சட்டப்படி உரிமை இல்லை என தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில்,

Advertisment

காவிரி நீர் பங்கிட்டு ஒழுங்காற்று குழு கூட்டம் நேற்று ஜூலை11 ம் தேதி டெல்லியில் நடைபெற்றது தமிழ்நாட்டிற்கு நாள் ஒன்றுக்கு 1 டிஎம்சி வீதம் ஜூலை 30ஆம் தேதி வரையிலும் திறந்து விடுவதற்கு பரிந்துரை செய்துள்ளது. இப்பரிந்துறை உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலுக்கு முரணானதாக உள்ளது. குறிப்பாக ஜூன் ஜூலை மாதத்திற்கு 44 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் தமிழகத்திற்கு வழங்க வேண்டும்.

தற்போதைய நிலையில் கபினி அணை ஒரு வாரத்திற்கு முன்னதாகவே நிரம்பிவிட்டது. கிருஷ்ணராஜ சாகர் அணை  ஓரிரு நாட்களில் அணை நிரம்பி விடும். இந்நிலையில் நாள் ஒன்றுக்கு 2.1/2 டிஎம்சி வீதம் தண்ணீரை திறப்பதற்கு பரிந்துரை செய்திருக்க வேண்டும். தற்போதைய பரிந்துரை தமிழ்நாட்டிற்கு போதுமானதாக இல்லை.

இந்நிலையில் ஒழுங்காற்று குழு பரிந்துரையை ஏற்க மாட்டோம் என கர்நாடக முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக அறிவித்துள்ளது உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். கர்நாடகம் அவ்வாறு அறிவிப்பதற்கு சட்டப்படி உரிமை இல்லை.காரணம் காவிரி மேலாண்மை ஆணையம் காவிரி நீர் பங்கீட்டு ஒழுங்காற்று குழு அமைக்கப்பட்ட பிறகு காவிரியில் வரக்கூடிய தண்ணீர் முழுமையும் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் உரிமை கொர முடியாது.

நீர் நிர்வாக முறை முழுமையும் ஒழுங்காற்று குழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஒழுங்காற்றுக்குழு அலுவலகம் பெங்களூர் நகரத்தில் செயல்பட்டு அன்றாடம் கர்நாடகா அணைகளுக்கு வரக்கூடிய தண்ணீர் அளவினை கணக்கிட்டு தமிழ்நாட்டிற்கு விடுவிக்க வேண்டிய தண்ணீர் குறித்து முடிவெடுக்கிற நீர் நிர்வாக அதிகாரம் ஒழுங்காற்று குழுவிடம் வழங்கப்பட்டுள்ளது.

கர்நாடகத்திற்கு பரிந்துரை செய்வதும் அவர்கள் ஏற்க மறுப்பதும் ஒரு நாடக செயலாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு மட்டுமே நீர் நிர்வாக அதிகாரம் உள்ளபோது தண்ணீரை திறப்பதற்கு கர்நாடக மறுக்கும் பட்சத்தில் மத்திய அரசின் உதவி கோர வேண்டும். மத்திய அரசு உதவியோடு தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய தண்ணீரை கர்நாடகாவிடம் பெற்று தருவதற்கான நடவடிக்கையை ஆணைய தலைவர் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். அதற்கான நிர்ப்பந்தத்தை தமிழ்நாடு அரசு கொடுக்க வேண்டும்.

இதனை மத்திய அரசும்,ஆணையமும் ஏற்க மறுத்தால் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரலாம். நிலைமை இவ்வாறு இருக்க தமிழ்நாடு அரசு விழித்துக் கொள்ள வேண்டும். மத்திய அரசுக்கு நிர்பந்தம் கொடுத்து தலையிடுவதற்கான நடவடிக்கையை ஆணையம் மூலம் அவசரகாலமாக மேற்கொள்ள முதலமைச்சர் அனைத்து கட்சி விவசாயிகள். கூட்டத்தை கூட்ட முன்வர வேண்டும். என வலியுறுத்துகிறோம்.

அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்பதற்காக நாளை 13ஆம் தேதி தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் அவசரக் கூட்டம் மன்னார்குடி அருகே இருள்நீக்கியில் நடைபெற உள்ளது. அக்கூட்டத்தில் அடுத்த கட்ட போராட்டம் குறித்து அறிவிப்புகளை வெளியிடுவோம் என்றார்.

க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

PR Pandian Cauvery River
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment