Advertisment

ரூ4 கோடி பறிமுதல் வழக்கு; பா.ஜ.க நிர்வாகி கேசவ விநாயகத்திடம் 2-வது முறையாக சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை

தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ 4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு; பா.ஜ.க நிர்வாகி கேசவ விநாயகம் 2 ஆவது முறையாக ஆஜர்; 6 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி போலீசார்

author-image
WebDesk
New Update
kesava vinayagam

தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் பா.ஜ.க. அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் 6 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தப்பட்டது.

Advertisment

2024 மக்களவைத் தேர்தலின் போது, சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணமானது தேர்தல் பணப்பட்டுவாடா செய்ய எடுத்து செல்லப்பட்டதா? இதில் சம்பந்தப்பட்டவர்கள் யார்? என்ற கோணத்தில் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாடாளுமன்றத் தேர்தலின் போது நெல்லை நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தொடர்புடைய நபர்கள் பணத்தை எடுத்துச் சென்ற காரணத்தினால், இதில் தமிழக பா.ஜ.க நிர்வாகிகளுக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. குறிப்பாக, பா.ஜ.க.,வின் முக்கிய நிர்வாகிகளான நயினார் நாகேந்திரன், கேசவ விநாயகம், எஸ்.ஆர்.சேகர், முரளி ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதற்கிடையில் தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரு.4 கோடி பணம் என்னுடையது என ரயில்வே கேன்டீன் உரிமையாளரான முஸ்தபா, வருமானவரித்துறை அலுவலகத்தில் கூறியிருந்தார். இதையடுத்து முஸ்தபாவிடம் விசாரணை நடத்தியதில் அவருக்கும் இந்த பணத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிய வந்தது. 

இந்த நிலையில் பா.ஜ.க நிர்வாகி கேசவ விநாயகம் ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் 5 ஆம் தேதி விசாரணைக்காக ஆஜரானார். அப்போது 5 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் தன்னிடம் விசாரிக்கக் கூடாது என கேசவ விநாயகம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்போது, 'நீதிமன்ற முன் அனுமதியின்றி அவரிடம் சி.பி.சி.ஐ.டி விசாரணை நடத்தக்கூடாது' என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து சி.பி.சி.ஐ.டி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.

இதையடுத்து வரும் அக்டோபர் 7 ஆம் தேதி காலை 11 மணியளவில் சென்னை எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி 2 ஆவது முறையாக கேசவ விநாயகத்துக்கு சி.பி.சி.ஐ.டி போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். 

இந்தநிலையில், சென்னையில் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு 2-வது முறையாக கேசவ விநாயகம் ஆஜரானார். அவரிடம் 6 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamilnadu Bjp
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment