Advertisment

ரயில் பிடிபட்ட ரூ4 கோடிக்கும் பா.ஜ.க.,வுக்கும் தொடர்பில்லை; சி.பி.சி.ஐ.டி விசாரணைக்குப் பின் எஸ்.ஆர்.சேகர் பேட்டி

எனக்கும் சிபிசிஐடி விசாரணை மேற்கொண்ட விசாரணைக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என்பதை தெளிவாக கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
SR Sekar Coimbatore

பா.ஜ.க.வின் மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்

கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் எஸ்.ஆர்.சேகர். பா...வின் மாநில பொருளாளராக இருந்து வருகிறார். இதனிடையே சமீபத்தில் தேர்தலுக்கு முன்னதாக, தாம்பரம் ரயில் நிலையத்தில் தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்த ரூ4 கோடி ரூபாய் பணம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் மற்றும் பல்வேறு அரசியல் பிரமுகர்களுக்கு சி.பி.சி.ஐ.டி போலீஸ்சார் சம்மன் அனுப்பி வந்தனர்.

Advertisment

அதன்படி எஸ்.ஆர்.சேருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. நேற்று சம்மனை பெற்றுக் கொண்ட எஸ்.ஆர்.சேகர் தான் ஆஜராக, தனக்கு பத்து நாட்கள் கால அவகாசம் வேண்டும் என்று சிபிசிஐடி அதிகாரிகளிடம் அனுமதி கேட்டு கடிதம் எழுதி கொடுத்திருந்தார். இதனிடையே இன்று காலை 9 மணி அளவில் சென்னை கோவை சேர்ந்த சிபிசிஐடி அதிகாரிகள் மாநில பொருளாளர் எஸ்.ஆர் சேகர் வீட்டிற்கு நேரடியாக சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அவர்கள் கேட்ட அனைத்து விசாரணைக்கும் தகுந்த பதில் கொடுத்திருப்பதாகவும் 9 மணியிலிருந்து 11 மணி வரை விசாரணை மேற்கொண்டதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.ஆர்.சேகர், "4 கோடி ரூபாய் பணம் பிடிபட்டது தொடர்பாக நேற்று விசாரிக்க வேண்டும் என்று சி.பி.சி.ஐ.டி. சார்பில் சம்மன் கொடுக்கப்பட்டது. கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க, பத்து நாட்கள் அவகாசம் தேவை என சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு கடிதம் கொடுக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட சி.பி.சி.ஐ.டி போலீசார், இன்று நான் வெளியூருக்கு கிளம்பிக் கொண்டிருந்தபோது திடீரென வந்து, நோட்டீஸ் கொடுக்காமல் விசாரிக்க முயன்றனர். அவர்களை வரவேற்று அவர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தேன். தமிழக அரசின் அழுத்தம் காரணமாக, பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, காவல்துறை ஆயுதமாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் விசாரணை கூடாது என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருக்கிறோம். அதற்கான உத்தரவு நாளை வந்துவிடும். அதற்குள் பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும், பா.ஜ.க மீது களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும் போலீசார் அனுப்பப்பட்டுள்ளனர். விசாரணையை எதிர்கொள்ள நாங்கள் தயங்கவில்லை. நான்கு கோடி ரூபாய் பணத்துக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என்று சொல்லிவிட்டோம். தி.மு.க அரசு பா.ஜ.க-வை களங்கப்படுத்துவதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகிறது. அந்த அளவில் மிகப்பெரிய தோல்வியையும், அவமானத்தையும் சந்திக்கும் என்று எஸ்ஆர்.சேகர் தெரிவித்தார்.

பி.ரஹ்மான் கோவை மாவட்டம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment