நீண்ட ஆயுளோடு, ஓங்கு புகழோடு வாழ வேண்டும்; ஸ்டாலினுக்கு பிரபலங்கள் வாழ்த்து

மக்களுக்கு “தி”னமும் “மு”ழு உடல் நலத்துடன் “க”டமையாற்ற பிரார்த்தித்து வாழ்த்துகிறேன்- முதல்வர் ஸ்டாலினுக்கு தெலுங்கானா ஆளுனர் தமிழிசை சௌந்தரராஜன் பிறந்த நாள் வாழ்த்து

Tamil News
Tamil news Updates

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மார்ச் 1 ஆம் தேதி தனது 70 ஆவது பிறந்தநாளைக் கொண்டாட உள்ள நிலையில், பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தெலுங்கானா ஆளுனர் தமிழிசை சௌந்தரராஜன், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அண்ணன் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்… மக்களுக்கு “தி”னமும் “மு”ழு உடல் நலத்துடன் “க”டமையாற்ற பிரார்த்தித்து வாழ்த்துகிறேன்…. என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: மோடியை சந்தித்து பேசியது என்ன? டெல்லியில் உதயநிதி விளக்கம்

இசையமைப்பாளரும் மாநிலங்களை எம்.பி.யுமான இளையராஜா, ”தனது 70 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட ஆயுளோடு, நிறைவான செல்வங்களோடு, ஓங்கு புகழோடு வாழ வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்” என வீடியோ வாழ்த்தில் கூறியுள்ளார்.

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ”எனது இனிய நண்பர், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நீண்ட நாள் நல்ல ஆரோக்கியத்துடனும், மன நிம்மதியுடன் இருந்து மக்கள் சேவை செய்யவேண்டும் என்று அவரது 70-வது பிறந்தநாளில் மனதார வாழ்த்துக்கிறேன்”  எனக் கூறியுள்ளார். 

சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ”முதல்வருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். சென்னை மேயராக, சட்டமன்ற உறுப்பினராக, முதல்வராக பொறுப்பேற்று நிர்வாக பணிகளை சீரும், சிறப்புமாக மேற்கொண்டு வரும் தாங்கள், இந்தியாவின் தலைசிறந்த முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை முன்னேற்றம் அடையச் செய்ய எடுக்கும் முயற்சிகள் வெற்றி காண வாழ்த்துகிறேன். மேலும், வாழ்வின் அனைத்து வளமும், நலமும் பெற்று, நீண்ட ஆயுளோடும், பூரண ஆரோக்கியத்தோடும், தாங்கள் நீடுடி வாழ நல்வாழ்த்துக்களை பகிர்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu celebrities wishes to mk stalin birthday

Exit mobile version