Advertisment

சென்னை தொழிலதிபர் வீட்டில் கொள்ளை : 2 பெண்கள் உட்பட 6 பேர் கைது... 65 சவரன் நகைகள் பறிமுதல்

Chennai News In Tamil : சென்னயில் தொழிலதிபர் வீட்டில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய 6 பேர் கைது செய்யப்பட்டுளளனர்.

author-image
WebDesk
New Update
சென்னை தொழிலதிபர் வீட்டில் கொள்ளை : 2 பெண்கள் உட்பட 6 பேர் கைது... 65 சவரன் நகைகள் பறிமுதல்

Tamilnadu News Update : சென்னை அண்ணாநகரில் கடந்த அக்டோபர் 1-ந் தேதி தொழிலதிபர் வீட்டில் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக 2 பெண்கள் உள்பட 6 பேரை சென்னை மாநகர போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடமிருந்து 65 சவரன் தங்கம், ரூ.2 லட்சம் மதிப்புள்ள வைரங்கள், ரூ.2.5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

Advertisment

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக புகார் அளித்த இளங்கோவன் (54)  தனது மனைவி மற்றும் மகனுடன் அண்ணாநகர் மேற்கு பகுதியில் வசித்து வருகிறார். சம்பத்தன்று அவர் தனது வீட்டில் முதல் மாடியில் குடும்பத்துள் தூங்கிக்கொண்டிருந்தபோது,  ​வீட்டின் தரைத் தளத்தை உடைத்த கொள்ளையர்கள், 100 சவரன் தங்கம், வைரம், வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரூ.85,000 ரொக்க பணத்தை கொள்ளையடித்துச்சென்றதாக இளங்கோவன் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

இந்த புகாரை பெற்றுக்கொண்ட திருமங்கலம் காவல் நிலைய போலீசார் குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்தனர். மேலும் இது தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக இளங்கோவனின் வீட்டில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். இதில் அவர் வீட்டின் சிசிடிவி கேமராக்கள் பழுதடைந்ததால், அக்கம் பக்கத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து கொள்ளையர்கள் குறித்து விவரங்களை சேகரித்து வந்தனர்.

மேலும் கொள்ளை சம்பவம் நடந்த இடத்தில், குறிப்பிட்ட நேரத்தில் அப்பகுதியில் வந்த தொலைபேசி அழைப்புகள் மற்றும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீஸார், இந்த வழக்கில் தொடர்புடைய திருநெல்வேலியைச் சேர்ந்த தினகரன் (35) என்பவரை ககைது செய்தனர்.

இவர் தகடந்த 2019-ம் ஆண்டு திருச்சியில் லலிதா ஜூவல்லரி நடந்த கொள்ளை சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட திருவாரூர் முருகனின் கூட்டாளி என்றும், இவர் மீது 17 கொள்ளை சம்பவ வழக்குகளை பதிவு செய்துள்ளதாகவும், போலீஸார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதில் திருவாரூர் முருகன் உடல்நலக்குறைவு காரணமாக அக்டோபர் 2020 மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது தினகரனுடன் சேர்த்து அவரது மனைவி உஷாராணி (27), கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சிவா (32), திருப்பத்தூரைச் சேர்ந்த லோகேஷ் (25), மோகன் (55), சென்னையைச் சேர்ந்த ராணி (48) ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். .

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment