scorecardresearch

கமிஷனரே நேரில் வந்து அஞ்சலி; 21 குண்டு முழங்க அரசு மரியாதை: சென்னையில் மோப்ப நாய் டோனிக்கு கவுரவம்

சென்னை காவல்துறையில் டோனி என்ற பெயரில் பணியாற்றி வந்த டாபர்மேன் மோப்பநாய் கடந்த 2014-ம் ஆண்டு பிறந்த 45 நாட்களில் காவல்துறையில் சேர்க்கப்பட்டது.

கமிஷனரே நேரில் வந்து அஞ்சலி; 21 குண்டு முழங்க அரசு மரியாதை: சென்னையில் மோப்ப நாய் டோனிக்கு கவுரவம்

 கடந்த 8 ஆண்டுகளாக காவல்துறையில் பணியாற்றி வந்த டோனி என்ற டாபர்மேன் மோப்ப நாய் உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை காவல்துறையில் டோனி என்ற பெயரில் பணியாற்றி வந்த டாபர்மேன் மோப்பநாய் கடந்த 2014-ம் ஆண்டு பிறந்த 45 நாட்களில் காவல்துறையில் சேர்க்கப்பட்டது. தொடர்ந்து பல வழங்குகளில் காவல்துறைக்கு உதவி செய்த இந்த நாய் கடந்த மே மாதம் ஆவர் ஆவடி கமிஷ்னர் அலுவலகத்தில் சேர்க்கப்பட்டது.

தொடர்ந்து அங்கு பணியாற்றிய டோனி கொலை, கொள்ளை, திருட்டு உள்ளிட்ட வழக்குகளில் காவல்துறைக்கு தனது சிறந்த பணியை வழங்கியுள்ளது. மேலும் கடந்த 2017-ம் ஆண்டு காவல்துறையில் நடைபெற்ற மாநில அளவிலாள திறன்போட்டியில் வெள்ளிப்பக்கம் வென்ற டோனி, கடந்த 2020-ம் ஆண்டு கெனல் கிளப் மீட்டில் 2-வது இடம் பிடித்து சாதித்தது.

இதனிடையே கடந்த சில தினங்களாக கடுமையாக உடல்நல பாதிக்கப்பட்ட டோனி நேற்று மரணமடைந்தது. இதய கோளாறு காரணமாக இறந்ததாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஆவடி கமிஷ்னர் சந்தீப் ராய் ரத்தோர், பயிற்சி காவல் அதிகாரி உள்ளிட்ட பல அதிகாரிகள் மோப்ப நாய் டோனிக்கு அஞ்சலி செலுத்தினர்.

அதன்பிறகு 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க மோப்ப நாய் டோனிக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. பிறந்து 45 நாள் முதல் கடந்த 8 ஆண்டுகளாக டோனி காவல்துறைக்கு பல வழக்குகளில் உதவி செய்துள்ளதாக காவல்துறையினர் பலர் நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu chennai avadi police dog tony death police tribute