சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் பணியில் இருந்தபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஆமொக வெற்றி பெற்ற திமுக கூட்டணி தனி பெரும்பாண்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து முதல்வராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின், தலைமை செயலாளர் மற்றும் போலீஸ் கமிஷ்னர் ஆகிய முக்கிய பதவிகளுக்கு புதியவர்களை நியமனம் செய்தார்.
அந்த வகையில் சென்னை கமிஷ்னராக இருந்த மகேஷ்குமார் அகர்வால் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக சங்கர் ஜிவால் புதிக கமிஷ்னராக நியமனம் செய்யப்பட்டார். உத்திரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த இவர்உளவுத்துறையில் முக்கிய அதிகாரியாக பணியாற்றியுள்ளார். மேலும் பணியில் திறம்பட செயல்பட்ட சங்கர் ஜிவால் இருமுறை ஜனாதிபதி விருது பெற்றுள்ளார்.
இந்நிலையில் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இன்று வழக்கம்போல் வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து காவல் அதிகாரிகள், உடனடியாக அவரை அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நலம் குறித்து இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil