சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு திடீர் நெஞ்சுவலி : தனியார் மருத்துவமனையில் அனுமதி

Tamilnadu News Update : சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் திடீர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் பணியில் இருந்தபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஆமொக வெற்றி பெற்ற திமுக கூட்டணி தனி பெரும்பாண்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து முதல்வராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின், தலைமை செயலாளர் மற்றும் போலீஸ் கமிஷ்னர் ஆகிய முக்கிய பதவிகளுக்கு புதியவர்களை நியமனம் செய்தார்.

அந்த வகையில் சென்னை கமிஷ்னராக இருந்த மகேஷ்குமார் அகர்வால் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக சங்கர் ஜிவால் புதிக கமிஷ்னராக நியமனம் செய்யப்பட்டார். உத்திரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த இவர்உளவுத்துறையில் முக்கிய அதிகாரியாக பணியாற்றியுள்ளார்.  மேலும் பணியில் திறம்பட செயல்பட்ட சங்கர் ஜிவால் இருமுறை ஜனாதிபதி விருது பெற்றுள்ளார்.

இந்நிலையில் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இன்று வழக்கம்போல் வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து காவல் அதிகாரிகள், உடனடியாக அவரை அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நலம் குறித்து இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை.    

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu chennai commissioner shankar jiwal admitted in hospital

Next Story
சிங்களத் தளபதி மகளை தமிழில் பாட வைப்பதா? ஹாரிஸ் ஜெயராஜ்- மதன் கார்க்கி மீது புகார்tamil nationalists appose to sinhala singer Yohana de silva, singer Yohana de silva, tamil cinema, harris jayaraj, சிங்கள பாடகி யோஹானி டி சில்வா, பிரசன்ன டி சில்வா, தமிழ் சினிமா, இலங்கை தமிழர்கள், மதன் கார்க்கி, madhan karky, prasanna de silva, srilanka, sri lankan tamileans
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com