Advertisment

பெண் விருந்தினர்களை குறி வைத்து பொய்யான தகவல்... பப் விவகாரத்தில் காவல்துறை தகவல்

பப்பில் வரும் பெண் விருந்தினர்களை வலுக்கட்டாயமாக படம்பிடிக்க முயற்சிப்பதாகவும், அவர்களின் உடைகள் குறித்து 'பெண் வெறுப்பு' கருத்துகளை தெரிவித்ததாகவும் டிவி சேனல்கள் விமர்சிக்கப்பட்டுள்ளன.

author-image
WebDesk
New Update
PUP

சென்னை பப் விவகாரம்

அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து சென்னையில் பிரபல பப் ஒன்று இயங்கியதால், காவல்துறையினர் ரெய்டு நடத்திய நிலையில், ஊடகவியலாளர்கள் பெண் விருந்தினர்களை வலுக்கட்டாயமாக புகைப்படம் எடுத்துள்ளனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க : False narrative peddled to target Chennai pub, women guests: Police

சென்னையில் அதிநவீன வசதிகள் கொண்ட பல பப்கள் இயக்கி வருகிறது. இந்த பப்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் மூட வேண்டும் என்ற உத்தரவு இருந்து வரும் நிலையில், சென்னையில் பிரபல பப் ஒன்று அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி இயங்கியதாகக் கூறி, ஞாயிற்றுக்கிழமை இரவு காவல்துறையினரால் ரெய்டுசெய்யப்பட்டது. இந்த ரெய்டு தொடர்பான வீடியோக்கள் தந்தி டிவி மற்றும் பாலிமர் செய்திகள் உட்பட பல உள்ளூர் செய்தி சேனல்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே ஊடகத்தின் ஒரு பகுதியினரின் உதவியுடன் பப் நிர்வாகத்துடன் பிரச்சனைகளை தீர்க்க விரும்பிய சிலர் காவல்துறையின் நடவடிக்கையைத் தூண்டியிருக்கலாம் என்பது இப்போது வெளிப்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறையினரின் கூற்றுப்படி, ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரு சிலர் குடிபோதையில் பப்பிற்குச் சென்றுள்ளனர். ஆனால் ஏற்கனவே இரவு 11:30 மணியாகிவிட்டதால், இது நகரத்தில் இயங்கும் பப்களுக்கான கட்-ஆஃப் நேரம் என்று பப் நிர்வாகம் அவர்களின் ஆர்டரை எடுக்க மறுத்துள்ளது.

இதனால் அந்த குழுவினர் பப்பில் இருந்த மற்ற விருந்தினர்கள் குறித்து குழு கேள்வி எழுப்பியதாகக் எழுப்பிய நிலையில், அவர்கள் தங்கள் வண்டிகளுக்காகக் காத்திருப்பதாகவும், ஒரு  சிலர் இரவு 11:30 மணிக்கு முன்னதாக ஆர்டர் செய்யப்பட்ட கடைசி பானங்களுககாக காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். ஆனால் இதை ஏற்றுக்கொள்ளாத அக்குழுவினர் கூச்சலிட்டதை தொடர்ந்து, அவர்களுக்கும் பப் ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் தொடங்கியது, இதன் காரணமாக 'அச்சுறுத்தல்' மோசமான விளைவுகளை ஏற்படுத்தியது.

குடிபோதையில் இருந்த குழுவின் வழிகாட்டுதலின் அடிப்படையில் ஒரு சில உள்ளூர் தொலைக்காட்சி சேனல் குழுவினர் அந்த இடத்திற்கு வருவதைக் கண்ட பப் நிர்வாகம் பாதுகாப்பு கோரி காவல்துறையை அழைத்ததாக ஆதாரங்கள் தெரிவித்தன. அதேசமயம், அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கும் மேலாக பப் இயங்கியதாக ஊடகவியலாளர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் தொலைக்காட்சி சேனல்கள் பப்பில் பெண் விருந்தினர்களை வலுக்கட்டாயமாக படம்பிடிக்க முயற்சிப்பதாகவும், அவர்களின் உடைகள் குறித்து பெண் வெறுப்புகருத்துகளை தெரிவித்ததாகவும் விமர்சிக்கப்பட்டது.

தொலைக்காட்சிகளில் வெளியான வீடியோக்களில், சில பெண்கள் கர்சீஃப் மற்றும் ஹெல்மெட்களால் முகத்தை மூடிக்கொண்டு பப்பிலிருந்து வெளியே ஓடுவதைக் காணலாம். தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்காக ஊடக அதிகாரத்தைதுஷ்பிரயோகம் செய்வதை அனுமதிக்க முடியாது என்பதால், இந்த பிரச்சினையை நகர போலீஸ் கமிஷனரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம் என்று அதிகாரி ஒருவர் கூறினார்.

ஊடகவியலாளர்களால் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படும் எந்தவொரு பெண்ணிடமிருந்தும் புகார் வரவில்லை, ஆனால் புகார் அளிக்கப்பட்டால் அவர்கள் நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை கூறியது.சில சேனல்கள் தெரிவித்தது போல் பப் இன்சார்ஜ் யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் அவர்கள் indianexpress.com க்கு தெரிவித்தனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment