தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி கோவில் திருவிழாக்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை ஏற்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் தமிழ் ஆண்டின் முதல் மாதமான சித்திரை தொடங்கிய அடுத்த 4 மாதங்கள் பல்வேறு இடங்களில் கோவில் திருவிழாக்கள் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாக்களில் தேரோட்டங்கள் மட்டுமல்லமல் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்படும். இதில் ஆடலும் பாடலும் நிகழ்ச்சி மக்கள் அதிகம் கண்டுகளிக்கும் ஒரு நிகழ்ச்சியாக உள்ளது.
இந்த திருவிழா காலங்களில் ஆடலும் பாடலும் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தும் குழுவினரும் அதிமான வருமானம் ஈட்டும் காலமாகவும் இருக்கும். அதே சமயம் ஆடலும் பாடலும் நிகழ்ச்சியில் ஆபாச நடனம் ஆடப்படுவதாக எழுத புகாருக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்த நிலையில், கடுமையான கட்டுப்பாடுகளையும் விதித்தது. மேலும் உள்ளூர் காவல் நிலையத்தில் அனுமதி பெற்றே நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் பகுதியில் பழைய மரக்காணம் என்ற கிராமத்தில் கடந்த 18-ந் தேதி கூழ்வார்த்தல் விழா நடைபெற்றது. இந்த விழாவுக்காக ஆடலும் பாடலும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில்,தமிழகத்தில் தேர்தல் விதிகள் அமலில் உள்ளதால், இந்த விதிகளை காரணம் காட்டி ஆடலும் பாடலும் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, தமிழகத்தில் ஏற்கனவே மக்களவை தேர்தவுலுக்கான வாக்குப்பதிவு முடிந்துவிட்டதாக சுட்டிக்காட்டிய நிலையில், தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி ஆடலும் பாடலும் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பை ஏற்க முடியாது என்று கூறி மனுதாரரின் மனு மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“