கோவில் மற்றும் மசூதி சொத்துக்களை பதிவு செய்வதில் இருந்து பாதுகாக்கும் பதிவுச் சட்டம் 1908 இன் பிரிவு 22 A இன் கீழ் தேவாலய சொத்துக்களை சேர்க்க வேண்டிய நேரம் இது என்று சென்னை உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது..
தமிழ்நாட்டில் உள்ள கோவில் சொத்துக்களை, தமிழ்நாடு இந்து சமய அறநிலையச் சட்டத்தின் கீழும், மசூதியின் சொத்துக்கள் 1995ஆம் ஆண்டு வக்ஃப் சட்டத்தின் கீழும் பாதுகாக்கப்பட்டு வரும் நிலையில், தேவாலய சொத்துகள் தொடர்பான எந்த சட்டமும் இல்லை என்று குறிப்பிட்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், இந்தியாவில், மதச்சார்பற்ற நாடாக இருப்பதால், அரசு அனைத்து மதத்தினரையும் ஒரே மாதிரியாக நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, பதிவுச் சட்டத்தின் 22A பிரிவின் கீழ் தேவாலய சொத்துக்களை கொண்டு வர வேண்டும் என்று நீதிமன்றம் பரிந்துரை செய்வதாக கூறியுள்ளார். ஒருவரின் சொத்துக்களை பதிவு செய்ய மறுத்த துணைப் பதிவாளர் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மது இன்று விசாரணைக்கு வந்தது. இதில் உயர் நீதிமன்றத்தின் அனுமதியின்றி தமிழ் சுவிசேஷ லூத்தரன் தேவாலயத்திற்கு (TELC) ஆதரவாக உள்ள சொத்துக்களை பதிவு செய்யக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவின் காரணமாக பதிவு மறுக்கப்பட்டதாக பதிவு ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.
உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவைத் தொடர்ந்து சொத்துக்களை பதிவு செய்யக் கூடாது என்று அதிகாரிகளுக்கு பதிவுத்துறை ஐஜி சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்ட ரிட் மனு மூடப்பட்டுள்ளதாகவும், இதனால் இடைக்கால உத்தரவுக்கு ரிட் மனுவை முடிப்பதற்கு அப்பால் வேறு எதுவும் இல்லை என்றும் குறிப்பிட்ட நீதிமன்றம், இந்த சுற்றறிக்கை சட்டப்பூர்வ வழிகாட்டுதல் அல்ல, மாறாக மாவட்ட பதிவாளர் (வழிகாட்டி) அனைத்து துணை பதிவாளர்கள், மாவட்ட பதிவாளர்கள் மற்றும் பதிவுத்துறை துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல்களுக்கு உயர்நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து தெரிவிக்கும் தகவல் மட்டுமே என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
எனவே, தற்போது தேவாலய சொத்துக்களை பதிவு செய்வதற்கு தடை விதிக்கும் உத்தரவு எதுவும் இல்லை என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் பதிவுச் சட்டத்தின் கீழ் தேவாலய சொத்துக்கள் பாதுகாக்கப்படவில்லை என்று நீதிமன்றம் ஒப்புக்கொண்டாலும், ஆவணத்தை பதிவு செய்ய மறுத்த உத்தரவில் நீதிமன்றம் எந்த நியாயத்தையும் குறிப்பிடவில்லை. விற்பனைப் பத்திரம் மற்றும் செட்டில்மென்ட் பத்திரம் முறையாகப் பதிவு செய்யப்பட்டு, வருவாய்ப் பதிவேடுகளும் மாற்றியமைக்கப்பட்டதாக நீதிமன்றம் குறிப்பிட்டது.
எனவே, பதிவு செய்யும் அதிகாரியின் உத்தரவை ரத்து செய்வது பொருத்தமானது என்று நீதிமன்றம் கருதியது மற்றும் பதிவு செய்வதற்கான ஆவணத்தை மீண்டும் சமர்ப்பிக்க மனுதாரருக்கு உத்தரவிட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“