Chennai News Updates: அனுமதி கிடைத்ததும் சந்திக்க வருவேன் - கரூர் மக்களுக்கு விஜய் உறுதி

Tamil Nadu Latest News Update: இன்றைய அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

Tamil Nadu Latest News Update: இன்றைய அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
vijay karur video

அனுமதி கிடைத்ததும் சந்திக்க வருவேன் - கரூர் மக்களுக்கு விஜய் உறுதி

Today Latest News Updates - பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment
  • Oct 18, 2025 22:06 IST

    ஏசி பயணிகளுக்கு புதிய போர்வை திட்டம் தொடக்கம்

    ஏசி பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்கு, தற்போது வழங்கப்படும் வெள்ளை நிற போர்வைக்குப் பதிலாக ராஜஸ்தானின் பாரம்பரிய 'சங்கனேரி' போர்வைகளை வழங்கும் திட்டத்தை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தொடங்கி வைத்தார். பயணிகளுக்கு வழங்கப்படும் போர்வைகள் சரியாக சுத்தம் செய்யப்படுவதில்லை என்ற புகார்களுக்கு மத்தியில், இத்திட்டம் சோதனை முறையாக ஜெய்ப்பூர்-அசர்வா எக்ஸ்பிரஸ் ரயிலில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.



  • Oct 18, 2025 21:49 IST

    புரோ கபடி லீக்: டெல்லியை வீழ்த்தி பெங்களூரு வெற்றி

    12 அணிகள் இடையிலான 12-வது புரோ கபடி லீக் தொடர் டெல்லியில் நடந்து வருகிறது. இதில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் - தபாங் டெல்லி அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் அணி 33-23 என்ற புள்ளி கணக்கில் தபாங் டெல்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

     



  • Advertisment
    Advertisements
  • Oct 18, 2025 21:41 IST

    அனுமதி கிடைத்ததும் சந்திக்க வருவேன் - விஜய் உறுதி

    கரூரில், ஏற்பட்ட தாங்க முடியாத வேதனையான நிகழ்வில் நம் குடும்ப உறவுகளை இழந்து தவிக்கிறோம். கடினமான சூழலில் உங்களுக்கு ஆறுதலாகவும், ஆதரவாகவும் எல்லா வகையிலும் இருப்போம். கடினமான தருணத்தை கடந்து வருவோம், அனுமதி கிடைத்ததும் சந்திக்க வருவேன் என்று கரூர் கூட்ட நெரிசலால் பாதிக்கப்பட்டவர்களிடம் த.வெ.க. தலைவர் விஜய் உறுதியளித்துள்ளார்.



  • Oct 18, 2025 21:16 IST

    தீபாவளி: கோயம்பேட்டில் போலீஸ் தீவிர கண்காணிப்பு

    குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில் கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் 500க்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு செய்யப்படுகிறது. சொந்த ஊருக்கு சென்று மீண்டும் 21ம்தேதி வருவார்கள் என்பதால் 23ம்தேதி வரை போலீசார் பாதுகாப்பில் இருப்பர். அனைத்து மார்க்கெட்டிலும் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். கூட்ட நெரிசலில் குற்றச் சம்பவங்கள் நடந்தால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம். 



  • Oct 18, 2025 21:04 IST

    "24 மணி நேரமும் மருத்துவர்கள் பணியில் இருக்க வேண்டும்"

    தீபாவளி பண்டிகையன்று மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அசம்பாவிதம் நடந்தால் dphepi@nic.in மின்னஞ்சலுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று மருத்துவ அதிகாரிகளுக்கு மாநில பொதுசுகாதாரத் துறை அதிகாரிகள் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.



  • Oct 18, 2025 21:01 IST

    தீபாவளி பண்டிகை: அகல் விளக்கில் ஒளிர்ந்த டெல்லி

    தீபாவளி பண்டிகையையொட்டி, டெல்லி அரசு சார்பில் ஒன்றரை லட்சம் விளக்குகள் ஏற்றி, தியா விளக்கு திருவிழா கொண்டாடப்பட்டது. கர்தவ்யா பாத் (Kartavya Path) பகுதியில் முதலமைச்சர் ரேகா குப்தா, அமைச்சர்கள் பங்கேற்று விளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.



  • Oct 18, 2025 20:57 IST

    மராட்டியம்: பள்ளத்தாக்கில் வாகனம் கவிழ்ந்து 8 பேர் பலி

    மராட்டியத்தின் நந்தர்பார் மாவட்டத்திற்கு உட்பட்ட சந்த்ஷைலி மலைத்தொடர் பகுதியில் வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, மலை பகுதியில் திடீரென பள்ளத்தாக்கிற்குள் வாகனம் கவிழ்ந்தது. சம்பவம் பற்றி அறிந்ததும், உள்ளூர்வாசிகளும் போலீசாரும் உடனடியாக தேடுதல் மற்றும் மீட்பு பணிக்கு சென்றனர். இந்த விபத்தில் சிக்கி 8 பேர் பலியானார்கள். பலர் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.



  • Oct 18, 2025 20:14 IST

    தீபாவளி: மாநிலம் முழுவதும் 1,353 ஆம்புலன்ஸ்கள் தயார்

    தீபாவளி பண்டிகையை ஒட்டி மாநிலம் முழுவதும் 1,353 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன. அனைத்து 108 ஆம்புலன்ஸ்களிலும் தீக்காயத்துக்கான சிறப்பு சிகிச்சை பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. மாநில, தேசிய நெடுஞ்சாலை என போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதிகளில் 120 ஆம்புலன்ஸ்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.



  • Oct 18, 2025 20:06 IST

    கரூர் துயரம்- நிவாரண நிதி செலுத்தப்பட்டது

    கரூர்பரப்புரைகூட்டத்தில்உயிரிழந்தவர்கள்குடும்பத்திற்குவிஜய்அறிவித்தரூ.20 லட்சம்நிவாரணத்தொகை, 39 பேரதுகுடும்பத்தினரின்வங்கிக்கணக்கில்செலுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 2 பேரின்குடும்பத்தினரில்யாருக்குதொகைவழங்குவதுஎன்பதில்சிக்கல்உள்ளதால்இன்னும்செலுத்தப்படவில்லைஎனதகவல்வெளியாகியுள்ளது.

     



  • Oct 18, 2025 19:20 IST

    பராமரிப்புப் பணி: மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்

    தண்டவாள பராமரிப்புப் பணிகள் காரணமாக மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும் இடைவெளியில் 20-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பராமரிப்பு பணி காலம் அக்.20 முதல் 24-ம் தேதி வரை காலை 5 மணி முதல் 6 மணி வரை மெட்ரோ ரெயில்கள் காலை 5 மணி முதல் 6:30 மணி வரை வழக்கமான 7 நிமிட இடைவெளிக்கு பதிலாக 14 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். காலை 6:30 மணிக்குப் பிறகு, மெட்ரோ ரயில் சேவைகள் வழக்கம்போல் எவ்வித மாற்றமுமின்றி இயங்கும். இந்த மாற்றங்கள் பச்சை வழித்தடம் மற்றும் நீல வழித்தடங்களில் பராமரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் பகுதிகளுக்கு மட்டுமே பொருந்தும்.



  • Oct 18, 2025 19:14 IST

    டெல்லி: எம்.பி.க்களுக்கான குடியிருப்பில் திடீர் தீ விபத்து

    டெல்லியில் பீஷாம்பார் தாஸ் மார்க் பகுதியில் பிரம்மபுத்திரா என்ற பெயரில் எம்.பி.க்களுக்கான குடியிருப்பு கட்டிடம் ஒன்று உள்ளது. நாடாளுமன்ற மேலவையின் எம்.பி.க்கள் வசிக்க கூடிய இந்த கட்டிடத்தில் இன்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், கட்டிடம் கடுமையாக பாதிக்கப்பட்டது.



  • Oct 18, 2025 18:47 IST

    வங்கதேசத்தில் டாக்கா விமான நிலையத்தில் தீ விபத்து

    வங்கதேசத்தில் டாக்கா விமான நிலையத்தில் தீ விபத்து, சரக்கு முனையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. டாக்கா விமான நிலையத்தில் அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.



  • Oct 18, 2025 18:13 IST

    சென்னை தீவுத் திடலில் பட்டாசு வாங்க குவிந்த மக்கள்

    தீபாவளி பண்டிகையையொட்டி​ சென்னை தீவுத்திடலில் அமைக்கப்பட்டுள்ள பட்டாசு கடைகளில் ஏராளமான பொதுமக்கள் குடும்பத்துடன் பட்டாசுகள் வாங்கி வருகிறார்கள்...



  • Oct 18, 2025 17:32 IST

    தீபாவளி பண்டிகை: முன்னெச்சரிக்கை ஏற்பாடு தீவிரம்

    தீபாவளியை ஒட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தமிழ்நாடு முழுவதும் 1,353 அவசரகால 108 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பட்டாசு வெடிக்கும்போது விபத்து ஏற்பட்டால், பாதிக்கப்பட்டவர்களை 4 நிமிடத்தில் மீட்க மக்கள் நல்வாழ்வுத் துறை ஏற்பாடு செய்துள்ளது.



  • Oct 18, 2025 17:30 IST

    ஜி.எஸ்.டி குறைப்பு: கார், பைக், டிவி விற்பனை உயர்வு

    பண்டிகை காலத்தில் அத்தியாவசியப் பொருட்களுக்கு வழங்கப்பட்ட வரிச் சலுகையின் பலன்கள் முழுமையாக மக்களைச் சென்றடைந்துள்ளன. செப்டம்பர் மாதம் 9 நாட்களில் மட்டும் கார், பைக், டிவி, ஏசி விற்பனை இருமடங்காக உயர்ந்துள்ளதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.



  • Oct 18, 2025 17:29 IST

    கரூர் துயரம்: உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தவெக சார்பில் நிதி உதவி

    ரூர் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் தலா ரூ. 20 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த நிதி, பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக் கணக்கு மூலம் நேரடியாகப் பணம் வரவு வைக்கப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கிறது.



  • Oct 18, 2025 17:28 IST

    தெற்கு மத்திய வங்கக்கடலில் புதிய தாழ்வுப் பகுதி

    - தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன்

    அக்டோபர் 21-ஆம் தேதி தெற்கு மத்திய வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும். இது மேலும் வலுவடைந்து, தாழ்வு மண்டலமாக அக்டோபர் 23-ல் வட தமிழகக் கடலோரப் பகுதியை வந்தடையும்.

    இதனால், அக்டோபர் 22 முதல் 25 வரை வட மாவட்டங்களில் பருவமழை தீவிரமடையும்.



  • Oct 18, 2025 16:56 IST

    பாமக சமூக ஊடகக் குழுவினருக்கு மிரட்டல்: ராமதாஸ்

    பாமக சமூக ஊடகக் குழுவினருக்கு ஒரு கூட்டம் தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.

    வந்தவாசி மாம்பட்டு பாமக சமூக ஊடகப் பிரிவு நிர்வாகி சந்தோஷ்குமார் செல்போனைப் பறித்து, சமூக ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் சோழங்குமாருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

    இதுபோன்ற நிகழ்வுகள் இனி நடைபெறாதவாறு காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    - ராமதாஸ்



  • Oct 18, 2025 16:37 IST

    தீபாவளி விடுமுறைக்குப் பிறகு ரேஷன் பொருட்கள்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு!

    தீபாவளிப் பண்டிகைக் காக விடப்பட்ட விடுமுறைகள் முடிந்த பிறகு, மக்கள் நவம்பர் மாதத்திற்கான ரேஷன் பொருட்களையும் பெற்றுக் கொள்ளலாம் என்று கூட்டுறவுத் துறை அறிவித்துள்ளது.

    பருவமழை தொடங்கிவிட்டதால், மக்கள் நவம்பர் மாதப் பொருட்களை அக்டோபரிலேயே (இப்போது) பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது.

    இன்று (அக்டோபர் 18) சில இடங்களில் இயந்திரக் கோளாறு காரணமாக உணவுப் பொருட்கள் வழங்க முடியவில்லை என்று புகார்கள் வந்தன. இந்தக் குறையைப் போக்கும் விதமாகவே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.



  • Oct 18, 2025 16:36 IST

    தங்கம் விலை மீண்டும் ரூ. 400 உயர்வு

    இன்று காலை நேரத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 2,000 குறைந்திருந்தது. ஆனால், மாலை வர்த்தகத்தில் விலை மீண்டும் ரூ. 400 உயர்ந்துள்ளது.

    இன்றைய நிலவரம்:

    ஒரு கிராம் தங்கம் விலை: ரூ. 12,000

    ஒரு சவரன் (8 கிராம்) தங்கம் விலை: ரூ. 96,000

    ஒரு கிராம் வெள்ளி விலை: ரூ. 190



  • Oct 18, 2025 16:26 IST

    தீபாவளி ஷாப்பிங்: குரோம்பேட்டையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் ஆர்வத்துடன் புத்தாடைகள் வாங்கக் கிளம்பியதால், குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

    துணிக்கடைகள் மற்றும் வணிக வளாகங்களில் கூட்டம் அலைமோதுவதால், வாகனப் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.



  • Oct 18, 2025 16:25 IST

    மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்

    பராமரிப்புப் பணிகள் காரணமாக, மெட்ரோ ரயில் இயக்கப்படும் நேர இடைவெளியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    அக்டோபர் 20 முதல் 24 ஆம் தேதி வரை (5 நாட்களுக்கு).

    இந்த நாட்களில், காலை 5 மணி முதல் 6.30 மணி வரை, மெட்ரோ ரயில்கள் 14 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் இந்த மாற்றம் செய்யப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.



  • Oct 18, 2025 16:23 IST

    பாஜக சென்னை மாவட்டப் பொறுப்பாளர்கள் அறிவிப்பு

    குஷ்பு (மாநில துணைத் தலைவர்) - ஆயிரம் விளக்கு தொகுதிக்குப் பொறுப்பாளர்.

    கரு.நாகராஜன் (மாநில துணைத் தலைவர்) - மயிலாப்பூர் தொகுதிக்குப் பொறுப்பாளர்.

    ஷெல்வி (ஆன்மிக மற்றும் கோயில் மேம்பாட்டுப் பிரிவு மாநில அமைப்பாளர்) - சைதாப்பேட்டை தொகுதிக்குப் பொறுப்பாளர்.



  • Oct 18, 2025 16:21 IST

    அரியலூரில் அமைச்சர் சிவசங்கர் பேட்டி

    "திராவிடம் என்றாலே என்னவென்று தெரியாது எனச் சொன்ன எதிர்க்கட்சித் தலைவர் K.பழனிசாமி, திராவிட மாடலுக்கு அவர்தான் உதாரணம் எனச் சொல்வது எவ்வளவு பெரிய கேவலமான கூத்து. திராவிடத்திற்கும் அவருக்கும் சம்பந்தமில்லை"

    - அரியலூரில் அமைச்சர் சிவசங்கர் பேட்டி



  • Oct 18, 2025 15:34 IST

    அப்சரா ரெட்டிக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு - உத்தரவு ரத்து 

    அ.தி.மு.க செய்தி தொடர்பாளர் திருநங்கை அப்சரா ரெட்டிக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. அப்சரா ரெட்டிக்கு ரூ.50 லட்சம் வழங்க யூடியூபர் மைக்கேல் பிரவீனுக்கு பிறப்பித்த ஆணையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. மான நஷ்டஈடு கோரி அப்சரா ரெட்டி தொடர்ந்த வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • Oct 18, 2025 15:28 IST

    ஆபரேஷன் சிந்தூர் வெறும் டிரைலர்தான் - ராஜ்நாத் சிங் பேச்சு 

    உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் பிரமோஸ் ஏரோஸ்பெஸ் ஆலை உள்ளது. இந்த ஆலையில் பிரமோஸ் ஏவுகணைகள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, இந்த ஆலையில் பிரமோஸ் ஏவுகணைகளின் முதல் தொகுப்பு வெற்றிகரமாக தயாரிக்கப்பட்டது. இந்த ஏவுகணைகள் பாதுகாப்புப்படையில் இணைக்கப்பட உள்ளன.

    இந்நிலையில், பிரமோஸ் ஏரோஸ்பெஸ் ஆலை பிரமோஸ் ஏவுகணைகளின் முதல் தொகுப்பு தயாரிக்கப்பட்டு பாதுகாப்புப்படைக்கு கொடுக்கப்படும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில், பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் , உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கலந்துகொண்டனர்.

    நிகழ்ச்சியில் பேசிய ராஜ்நாத் சிங், "பாதுகாப்புப்படையின் முக்கிய அங்கமாக பிரமோஸ் மாறிவிட்டது. நாட்டின் கனவுகளை நனவாக்கும் வலிமையை பிரமோஸ் ஏவுகணை கொண்டுள்ளது. பாகிஸ்தானின் அனைத்து பகுதிகளும் பிரமோஸ் ஏவுகணையின் தாக்குதல் வட்டத்திற்குள்ளேயே உள்ளன. ஆபரேஷன் சிந்தூரின்போது நடந்தது வெறும் டிரைலர்தான்" என்று அவர் கூறியுள்ளார். 



  • Oct 18, 2025 15:17 IST

    தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் முன்கூட்டியே உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி

    தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி முன்கூட்டியே உருவாக வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அக்.23ம் தேதிக்கு பிறகு உருவாகும் என கூறியிருந்த நிலையில் தற்போது 21ம் தேதியே உருவாக வாய்ப்பு என வானிலை ஆய்வு கணித்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் நெல்லை, குமரி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூர், திருப்பூர், நாமக்கல், ஈரோடு, சேலம், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 20 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.



  • Oct 18, 2025 14:51 IST

    சென்னையில் இயல்பை விட 26% கூடுதலாக பெய்த வடகிழக்கு பருவமழை 

    சென்னையில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 26% கூடுதலாக மழை பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இயல்பாக 103.8 மி.மீ. மழை பொழியும் நிலையில் இதுவரை 131.2 மி.மீ. மழை பெய்துள்ளது.

     



  • Oct 18, 2025 14:50 IST

    விஜய் தலைமையில் புதிய கூட்டணி அமைய வாய்ப்பு - டி.டி.வி தினகரன்

    த.வெ.க தலைவர் விஜய் தலைமையில் புதிய கூட்டணி உருவாகும். எந்தகட்சிகள் அந்த கூட்டணியில் இடம் பெறும் என்பது விரைவில் தெரியும். தேர்தல் நெருக்கத்தில் எதிர்பாராத கூட்டணிகள் உருவாகவும் வாய்ப்பு உள்ளது என்று டி.டி.வி தினகரன் கூறியுள்ளார். இது தொடர்பாக மேலும் அவர் பேசுகையில், தி.மு.க, என்.டி.ஏ, விஜய் கூட்டணி, சீமான் என 4 முனை போட்டி இருக்கும். அதே நேரத்தில் விஜய் கூட்டணியை ஏற்க எடப்பாடி பழனிசாமி முயற்சிக்கிறாரோ என்று சந்தேகம் உள்ளது” என்று கூறினார்.



  • Oct 18, 2025 14:05 IST

    "கார், ஏசி, டிவி விற்பனை அதிகரிப்பு” - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

    ஜிஎஸ்டி வரி குறைப்பின் பலன் மக்களுக்கு நேரடியாக சென்றுள்ளது ஜிஎஸ்டி குறைப்பால் கார், ஏசி, வாஷிங் மெஷின், டிவி ஆகியவற்றின் விற்பனை அதிகரிப்பு என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். 



  • Oct 18, 2025 13:53 IST

    தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் முன்கூட்டியே உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி

    தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி முன்கூட்டியே உருவாக வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அக்.23ம் தேதிக்கு பிறகு உருவாகும் என கூறியிருந்த நிலையில் தற்போது 21ம் தேதியே உருவாக வாய்ப்பு என வானிலை ஆய்வு கணித்துள்ளது.



  • Oct 18, 2025 13:52 IST

    என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி முன்னெடுப்புக்காக வரும் 28ம் தேதி திமுக நிர்வாகிகளுக்கு பயிற்சி

    என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி முன்னெடுப்புக்காக வரும் 28ம் தேதி திமுக நிர்வாகிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற தலைப்பில் திமுக புதிய முன்னெடுப்பு தொடங்கியுள்ளது. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் திமுக வெற்றியை உறுதி செய்யும் வகையில் புதிய முன்னெடுப்பு என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.



  • Oct 18, 2025 13:26 IST

    சபரிமலையில் புதிய மேல்சாந்திகள் தேர்வு

    சபரிமலை, மாளிகைபுரம் கோயில்களுக்கு புதிய மேல்சாந்திகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பாரம்பரிய குலுக்கல் முறையில் சபரிமலை மேல்சாந்தியாக இ.டி.பிரசாத் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டார்



  • Oct 18, 2025 13:18 IST

    இதைவிட பாசிசம் ஏதும் இருக்க முடியாது - வானதி சீனிவாசன்

    “இதுவரை தீபாவளிக்கு வாழ்த்து சொல்ல மறுத்தவர்கள், இப்போது, “தீபாவளி வாழ்த்து சொல்லுங்கள்” என்று கேட்கக்கூட அனுமதி மறுக்கிறார்கள். உலகெங்கும் வாழும் 100 கோடிக்கும் அதிகமான மக்கள் கொண்டாடும் தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்து சொல்லுங்கள் என்று பேசியதைக்கூட அவைக் குறிப்பிலிருந்து நீக்குகிறார்கள்; இதைவிட பாசிசம் ஏதும் இருக்க முடியாது” என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். 



  • Oct 18, 2025 13:05 IST

    மக்கள் தங்களது தகவல்களைப் பகிர்ந்து ஏமாற வேண்டாம்: காவல்துறை எச்சரிக்கை

    தீபாவளி நெருங்கும் நிலையில், பரிசுக் கூப்பன் விழுந்திருக்கிறது, பரிசு கிடைத்திருக்கிறது என்ற பெயரில் அதிகளவில் சைபர் மோசடி புகார்கள் பெறப்படுவதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. போலியான ஈ-கமெர்ஸ் இணையதளங்கள், சமூக வலைதள பக்கங்களில் வரும் விளம்பரங்களை பார்த்து ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.



  • Oct 18, 2025 12:29 IST

    சென்னை வளசரவாக்கம் 11வது மண்டலத்தில் 5 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி

    சென்னை வளசரவாக்கம் 11வது மண்டலத்தில் 5 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதியாகி உள்ளது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 5 பேரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வளசரவாக்கம் 11வது மண்டலத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாநகராட்சிக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.



  • Oct 18, 2025 12:02 IST

    “ஊழல்வாதிகள் பாஜகவின் கூட்டணிக்கு வந்த பின்பு, வாஷிங் மெஷினில் வெளுப்பது எப்படி? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி

    “ஊழல்வாதிகள் பாஜகவின் கூட்டணிக்கு வந்த பின்பு, வாஷிங் மெஷினில் வெளுப்பது எப்படி? என பாஜக அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டின் முக்கியமான திட்டங்களுக்கும், சட்டங்களுக்கும் இந்தியிலும் சமஸ்கிருதத்திலும் மட்டுமே பெயரிடப்படுவது என்ன மாதிரியான ஆணவம்?” எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.



  • Oct 18, 2025 11:39 IST

    ஆளுநரை வைத்து குழப்பம் விளைவிக்க முயற்சி - ஸ்டாலின் பதிவு

    எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களை வைத்துக் குழப்பம் விளைவித்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்?  நாட்டின் முக்கியமான திட்டங்களுக்கு இந்தியிலும், சமஸ்கிருதத்திலும் மட்டுமே பெயரிடப்படுவது என்ன மாதிரியான ஆணவம்? பா.ஜ.க-வின் தேர்தல் வெற்றிக்காக மக்களின் வாக்குகளைப் பறிக்கும் வாக்குத் திருட்டை ஆதரிப்பது ஏன்? கீழடி அறிக்கையைத் தடுக்க குட்டிக்கரணங்கள் போடுவது ஏன்?  என்று பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு எழுப்பிய கேள்விகளை சமூக வலைதளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பகிர்ந்துள்ளார்.



  • Oct 18, 2025 11:02 IST

    டெங்கு காய்ச்சல் - சென்னையில் 5 பேருக்கு பாதிப்பு உறுதி

    சென்னை வளசரவாக்கம் பகுதியில் 5 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வளசரவாக்கம் மண்டலத்தில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மாநகராட்சிக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



  • Oct 18, 2025 10:21 IST

    இ.பி.எஸ் கொடுத்த அல்வாவால்தான் அ.தி.மு.க பல கோணங்களில் சென்று கொண்டிருக்கிறது - சேகர் பாபு

    எடப்பாடி பழனிசாமி கொடுத்த அல்வாவால்தான் அ.தி.மு.க பல கோணங்களில் சென்று கொண்டிருக்கிறது. அவர் கொடுத்த அல்வாவால் செங்கோட்டையன் போன்றவர்கள் பிரிந்து நின்று எதிர் கருத்துக்களை சொல்லி கொண்டிருக்கிறார்கள். அல்வாவும் உணவு தான், தேவைப்படும் இடத்தில் அதையும் முதலமைச்சர் பரிமாறுவார் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.



  • Oct 18, 2025 10:01 IST

    காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட டெம்போ ட்ராவலர்

    கேரளாவின் இடுக்கியில் நேற்றிரவு பெய்த கனமழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டெம்போ ட்ராவலர் வாகனம் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் அதிர்ச்சியடைந்தனர். நல்லவேளையாக வாகனத்தில் யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.



  • Oct 18, 2025 09:59 IST

    பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு, 42 சதவீதம் இட ஒதுக்கீடு கோரி தெலுங்கானாவில் பந்த்

    தெலுங்கானாவில் உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு, 42 சதவீதம் இட ஒதுக்கீடு கேட்டு, மாநிலம் முழுவதும் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது. இடஒதுக்கீட்டை தேர்தல் வாக்குறுதியாக நிறைவேற்றுவதாக, கடந்த செப்டம்பர் மாதம் அரசு வெளியிட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில். அக்டோபர் 9-ந் தேதி தெலுங்கானா உயர்நீதிமன்றம் இதற்கு இடைக்கால தடை விதித்தது.



  • Oct 18, 2025 09:52 IST

    பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் - ஆப்கானில் 3 கிரிக்கெட் வீரர்கள் உட்பட 8 பேர் மரணம்

    ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதலில், 3 கிரிக்கெட் வீரர்கள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இலங்கை பாகிஸ்தான் உடனான முத்தரவு தொடரில் இருந்து ஆப்கானிஸ்தான் விலகியுள்ளது.



  • Oct 18, 2025 09:28 IST

    அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது

    அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.



  • Oct 18, 2025 09:27 IST

    சரக்கு லாரி சாலையின் தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்து விபத்து

    சேலத்தில் இருந்து சென்னைக்கு மரப்பலகைகள் ஏற்றி வந்த சரக்கு லாரி, தாம்பரம் அடுத்த படப்பை மேம்பாலம் அருகே தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. தகவல் அறிந்த போலீசார் லாரியை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஓட்டுநர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டுள்ளார்.



  • Oct 18, 2025 08:34 IST

    தீபாவளி பண்டிகை முன்னிட்டு சொந்த ஊர் புறப்பட்ட திருப்பூர் தொழிலாளர்கள்

    தீபாவளி தொடர் விடுமுறையைக் கொண்டாட திருப்பூர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டனர், 95% நிறுவனங்களில் தீபாவளி போனஸ் வழங்கப்பட்டு இன்று முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் பலரும் புறப்பட்டனர். இதனால் கோவை - சென்னை இன்டர்சிட்டி ரயிலில் அதிக அளவிலான கூட்டம் காணப்பட்டது. வழக்கமாக 2 நிமிடங்கள் மட்டுமே நின்று செல்லும் ரயில், இன்று சுமார் 10 நிமிடங்கள் நின்றது.



  • Oct 18, 2025 08:27 IST

    இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியா டெல்லியில் இன்று பிரதமர் மோடியுடன் சந்திப்பு

    3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியா டெல்லியில் இன்று பிரதமர் மோடியை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பில், இரு நாட்டு உறவு, தமிழ்நாட்டு மீனவர்கள் நலன், கல்வி உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.



  • Oct 18, 2025 08:24 IST

    கும்மிடிப்பூண்டியில் 16 செ.மீ. மழை

    திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கும்மிடிப்பூண்டியில் 16 செ.மீ மழை கொட்டித் தீர்த்துள்ளது. பொன்னேரியில் 14 செ.மீ, தாமரைப்பாக்கம், 5 செ.மீ, சோழவரம் 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திற்கு நேற்று மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் கணித்த நிலையில் 2 இடங்களில் மிக கனமழை பதிவாகியுள்ளது.



  • Oct 18, 2025 08:22 IST

    வைகை ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு

    வைகை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்தது. இதனால் தேனி வருசநாடு பகுதியில் வைகை ஆற்றில் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வருசநாடு-கண்டமனூர் பகுதியில் வேளாண் நிலங்களுக்குள் வெள்ளம் புகுந்த‌து சாலையில் வெள்ளநீர் புகுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.



  • Oct 18, 2025 08:19 IST

    8 போர்களை நிறுத்திய எனக்கு நோபல் பரிசு தராதது பற்றி கவலைப்படவில்லை - ட்ரம்ப்

    இந்தியா, பாகிஸ்தான் இடையேயான போரை நிறுத்தியது நான் தான். 8 போர்களை நிறுத்திய எனக்கு நோபல் பரிசு தராதது பற்றி கவலைப்படவில்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்,



Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: