Chennai Marina Tamil News : சென்னை மெரினா காமராஜர் சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வலிமை மிக்க சுறா சிலை தற்போது மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
சென்னை மாநகராட்சியின் முக்கிய பகுதிகளில் மக்களிடையே கழிவுநீர் மறுசுழற்சி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மெரினா கடற்கரையில் இந்த சுறா சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சாரத்தின் பகுதியாக உலோக கழிவுகள் குறித்த கண்காட்சி இந்த ஆண்டு தொடக்கதில் சென்னை திருவான்மியூரில் உள்ள நகராட்சிப் பள்ளி ஒன்றில் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து மெரினா காமராஜர் சாலையில் கடல் உயிரினங்களின் சின்னங்கள் அமைக்கும் பணி கடந்த செவ்வாய் கிழமை (ஜூலை 20) தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக மெரினா கடற்கரைக்கு அருகில் தற்போது மூன்று கடல்வாழ் உயரினங்களின் சின்னங்கள் வைத்துள்ளதாக தேனாம்பேட்டை நகராட்சி பொறியாளர் கூறியுள்ளார்
உலோக கழிவுப் பொருந்திய சிலையை வடிவமைத்து வரும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சிற்பி சீனிவாசராவ், இந்த சிலைகளை வடிவமைத்து வருகிறார். இவரது பல சிலைகள் பல தரப்பட்ட தெற்கு மாநிலங்களில் வைக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த இவர் சுமார் ஏழு வருடங்களுக்கு மேலாக தனது குழுவுடன் இணைந்து வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைக் கழிவுகள் மூலம் சிலைகள் வடிவமைத்து வருகிறார்.
ஒரு வருட முன்பு நகராட்சி நிறுவனம் எழுத்து வடிவ சிலையான நம்ம சென்னை என்னும் வாசகத்தை மெரினா கடற்கரையில் நிறுவப்பட்டது. தற்போது முக்கிய இடமாகவும் பரவலாக மக்கள் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் இடமாகவும் மாறியுள்ளது. அதே போல் இந்த சிலை மெரினாவிற்கு கூடுதல் அழகு சேர்க்கும் என்று மாநகராட்சி அதிகாரிகள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil