வள்ளுவர் கோட்டம் விநியோக நிலையத்திலிருந்து தண்ணீர் வழங்கும் குழாயில் ஏற்பட்ட வெடிப்பு ஏற்பட்டுள்ளதால், தென் சென்னையின் சில பகுதிகளில் 4 நாட்களாக குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளது.
சென்னையில், வள்ளுவர் கோட்டம் பகுதியில் உள்ள குடிநீர் விநியோக நிலையத்தில் தண்ணீர் வழங்கும் குழாயில் ஏற்பட்ட வெடிப்பு ஏற்பட்டுள்ளதால், தென்சென்னையின் சில பகுதிகளில், 4 நாட்களாக குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இன்று (ஏப்ரல் 4) மாலைக்குள் குழாய் நீர் விநியோகம் மீண்டும் தொடங்கும் என்று சென்னை பெருநகர நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குடிநீர் குழாய் வெடிப்பு காரணமாக சென்னையில், சூளைமேடு மற்றும் தி.நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த குடியிருப்பாளர்கள், சில நாட்களாக தங்கள் பகுதியில் குடிநீர் விநியோகம் இல்லை என்று தெரிவித்துள்ளனர். குறிப்பாக, தி.நகரில், ராமகிருஷ்ணா தெரு மற்றும் உண்ணாமலை அம்மாள் தெரு உள்ளிட்ட வடக்கு உஸ்மான் சாலையின் தெருக்களில், தினசரி குடிநீர் தேவைகளை நிர்வகிப்பது கடினமாக இருந்தது அப்பகுதியில் வசிக்கும் கூறியுள்ளனர்.
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நுங்கம்பாக்கத்தில் உள்ள உத்தமர் காந்தி சாலை-ஸ்டெர்லிங் சாலையில் குழாய் இணைப்புகளை மேற்கொள்ள ஏதுவாக மார்ச் 29 முதல் ஒரு நாள் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டது. ஆனால் தற்போதுவரை விநியோகம் மீண்டும் தொடங்கும் வரை பொதுமக்கள் குடிநீருக்காக காத்திருப்பது நீடித்து வருகிறது.
இது குறித்து சூளைமேட்டில் உள்ள கிருஷ்ணாபுரம் தெருவில் வசித்து வரும் மக்கள் கூறுகையில், இந்தப் பகுதி அடிக்கடி நீர் விநியோகத்தில் இடையூறுகளை ஏற்படுகிறது. கோடை காலத்தில் அதிகரித்து வரும் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய, பொதுமக்கள் பெரும்பாலும் போர்வெல்கள் மற்றும் டேங்கர் லாரிகளையே நம்பியுள்ளனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தண்ணீர் விநியோகம் குறித்த தகவல்களை வழங்கி, இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று கூறி வருகின்றனர்.
இதனிடையே, அரும்பாக்கத்தில் 100 அடி சாலையில் உள்ள பிரதான குழாயின் வெடிப்பு பகுதியை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், பழைய 10 மீட்டர் குழாயின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளதாகவும், சென்னை பெருநகர நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த குழாய் வெடிப்பு காரணமாக, ஆர்.ஏ. புரம், வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், தி. நகர் மற்றும் அசோக் நகரின் சில பகுதிகள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் குடிநீர் விநியோகத்தை பாதிக்கப்பட்டுள்ளது. மண்டலம் 9-ல் வசித்து வரும் மக்களுக்கு மட்டும் சுமார் 40 மில்லியன் லிட்டர் தண்ணீர் வழங்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை (இன்று) மாலைக்குள் குழாய் நீர் விநியோகம் சீராகிவிடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.