Chennai News Live Updates: குள்ளநரித்தனமாக அரசு மீது குற்றம் சாட்டுகிறார் இ.பி.எஸ் -டிடிவி தினகரன்

Tamil Nadu Latest News Update: இன்றைய அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

Tamil Nadu Latest News Update: இன்றைய அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
eps ttv

Today Latest News Updates: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

சென்னை ஏரிகளின் நீர்நிலை விபரங்கள்: 

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 5 மாதங்களுக்குப் பிறகு நீர் இருப்பு 8 டி.எம்.சி. ஆக உயர்ந்துள்ளது. கிருஷ்ணா நதி நீர் வரத்து மற்றும் தென்மேற்குப் பருவமழையால் நீர் இருப்பு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம் மற்றும் கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11.757 டி.எம்.சி.யில் தற்போது 8.023 டி.எம்.சி. ஆக நீர் இருப்பு உள்ளது.

  • Oct 05, 2025 12:55 IST

    குள்ளநரித்தனமாக அரசு மீது குற்றம் சாட்டுகிறார் இ.பி.எஸ்-டிடிவி தினகரன்

    த.வெ.க-வை கூட்டணிக்கு வர வைக்க வேண்டும் என்பதற்காக கரூர் துயரத்திற்கு அரசுதான் காரணம் என குள்ளநரித்தனமாக குற்றச்சாட்டு முன்வைக்கிறார் எடப்பாடி பழனிசாமி என  டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.



  • Oct 05, 2025 12:24 IST

    விஜயின் பிரசார வாகன ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு

    இரு சக்கர வாகனம் மீது மோதியது தொடர்பாக வேலாயுதம் பாளையம் காவல் நிலையத்தார் வழக்குப்பதிவு செய்தனர். பி.என்.எஸ் பிரிவில் 281 மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் அல்லது மற்றவர்களுக்கு காயம் ஏற்படுத்தும் வகையில் அவசரமாக வாகனம் ஓட்டியதாக வழக்குப்பதிவு



  • Advertisment
    Advertisements
  • Oct 05, 2025 12:21 IST

    நடிகர் ரஜினிகாந்த் இமையமலை பயணம்

    நடிகர் ரஜினிகாந்த் ஒரு வார கால ஆன்மீகப் பயணமாக இமயமலை சென்றுள்ளார். ரிஷிகேஷ் ஆசிரமத்தில் இருந்து பத்ரிநாத் செல்லும் வழியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரல்.



  • Oct 05, 2025 12:20 IST

    எழுத்தாளர் சாரு நிவேதிதா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

    சென்னை அடையாறில் உள்ள எழுத்தாளர் சாரு நிவேதிதா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில் 8-க்கும் மேற்பட்ட வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். இதில் மிரட்டல் புரளி என்பது தெரிய வந்தது 



  • Oct 05, 2025 12:18 IST

    முன்ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் த.வெ.க பொதுச்செயலாளர் ஆனந்த் முறையீடு

    கரூரில் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவத்தில்  உயர்நீதிமன்ற மதுரை அமர்வு முன்ஜாமின் மறுத்த நிலையில் ஆனந்த், நிர்மல்குமார் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் முறையீடு



  • Oct 05, 2025 11:57 IST

    டார்ஜிலிங் அருகே கனமழை - பாலம் இடிந்த விபத்தில் 6 பேர் உயிரிழப்பு

    மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் அருகே மிரிக் பகுதியில் கனமழை வெள்ளத்தால் பாலம் இடிந்து விழுந்து 6 பேர் உயிரிழப்பு



  • Oct 05, 2025 11:24 IST

    கரூர் துயரம் - சிறப்பு புலனாய்வுக் குழுவில் கூடுதலாக 8 அதிகாரிகள் நியமனம்

    கரூர் துயர சம்பவம் குறித்து விசாரிக்க ஐஜி  அஸ்ரா கார்க் தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவில் கூடுதலாக 8 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 



  • Oct 05, 2025 10:51 IST

    கட்டுமான பணிகளுக்கு தடை - திருவண்ணாமலை கோயிலில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆய்வு

     திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் பகுதியில் கட்டுமானப் பணிகளுக்கு தடை விதிக்கப்பட்ட வழக்கில், உயர் நீதிமன்ற நீதிபதிகள் கோயில் பகுதியில் ஆய்வு செய்கின்றனர்.



  • Oct 05, 2025 10:47 IST

    சென்னையில் மாரத்தான் ஓடிய இளைஞர் பலி

    சென்னை, கோட்டூர்புரத்தில் மாரத்தான் ஓடிய, தனியார் வங்கியில் பணியாற்றிய பரமேஷ்(24)  வலிப்பு ஏற்பட்டு மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து கோட்டூர்புரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



  • Oct 05, 2025 10:17 IST

    இருமல் சிரப் விவகாரம் - மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி சஸ்பெண்ட்

    ராஜஸ்தானில் இருமல் சிரப் எடுத்துக்கொண்ட குழந்தைகள் பலியான சம்பவம் தொடர்பாக, ராஜஸ்தான் மாநில மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அரசின் ஒப்பந்த நிறுவனம் தயாரித்த சிரப் உட்கொண்ட குழந்தைகள் உயிரிழந்த நிலையில், மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி ராஜாராம் சர்மா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,



  • Oct 05, 2025 10:13 IST

    கரூர் துயர சம்பவம் - விஜய்யின் பிரசார பேருந்து ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு

    விஜய் பிரசார பேருந்தில் தொண்டர்களின் பைக் மோதிய விவகாரம் தொடர்பாக, விஜய்யின் பிரசார பேருந்து ஓட்டுநர் மீது மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனம் ஓட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கரூர் தவிட்டுப்பாளையம் சோதனைச்சாவடி அருகே விபத்து நடந்த‌து கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.



  • Oct 05, 2025 09:19 IST

    பீகார் தேர்தல் தேதி குறித்து தேர்தல் ஆணையத்திடம் அரசியல் கட்சிகள் கோரிக்கை

    பீகாரில் ஒன்று அல்லது 2 கட்டங்களாக மட்டுமே தேர்தல் நடத்த வேண்டும் என்று அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளன. மாநிலம் முழுவதும் வரும் 28-ந் தேதி வரை சத் பூஜை கொண்டாட்டங்கள் நடைபெறும் என்பதால், அதன்பிறகே சட்டசபை தேர்தலை நடத்த வேண்டும் எனவும் கூட்டத்தில் தெரிவித்துள்ளன,



  • Oct 05, 2025 09:17 IST

    மணிக்கு 7,400 கி.மீ.வேகம் - புதிய ஏவுகணை சோதனை முயற்சியில் டி.ஆர்.டி.ஓ

    ஒலியை விட 6 மடங்கு அதிக வேகத்தில் பறக்கக்கூடிய தவானி (Dhvani) என்ற புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணையை 2025 இறுதிக்குள் சோதனை செய்ய டி.ஆர்.டி.ஓ (DRDO) அமைப்பு திட்டமிட்டுள்ளது. மணிக்கு 7,400 கி.மீ.வேகத்தில் பறக்ககூடிய வகையில் உருவாக்கப்படும் இந்த ஏவுகணை இஸ்ரேலின், அயர்ஸ் டோம், அமெரிக்காவின் தாட் போன்ற அமைப்புகளால் கூட இடைமறித்து அழிப்பது மிகவும் கடினம் என்று கூறப்படுகிறது.



  • Oct 05, 2025 09:09 IST

    2 நாட்கள் அரசுமுறை பயணம் - இந்தியா வரும் பிரிட்டன் பிரதமர்

    2 நாட்கள் அரசுமுறை பயணமாக அரசுமுறை பயணமாக அக்.8ம் தேதி பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இந்தியா வருகிறார். இருநாட்டு உறவு, வர்த்தகம், தொழில்நுட்பம், உள்ளிட்ட விவாகரங்கள் குறித்து பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.



  • Oct 05, 2025 08:55 IST

    தி.மு.க தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு 45 சதவீதம் வாக்குகள் உள்ளன - கே.எஸ்.அழகிரி

    தமிழ்நாட்டில் தி.மு.க தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு 45 சதவீதம் வாக்குகள் உள்ளன. மேலும் கூடுதலாக எங்கள் அணியால் வெற்றி பெற முடியும். எங்கள் வாக்கு வங்கிக்கு இணையாக வேறு எந்த கட்சியும் தமிழ்நாட்டில் இல்லை என்று முன்னாள் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.



  • Oct 05, 2025 08:52 IST

    வண்டலூர் பூங்காவில் மாயமான சிங்கம்: பூங்கா அதிகாரிகள் விளக்கம்

    வண்டலூர் உயிரியல் பூங்காவில் 'லயன் சபாரி' பகுதியில் திறந்துவிடப்பட்ட‌ 'சேரு' என்ற புதிய சிங்கம் மாயமானது. சபாரி பகுதியில் திறந்து விடப்பட்ட புதிய சிங்கம் மீண்டும் உணவு உட்கொள்ள வராத‌தால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கடந்த 2 நாட்களாக சிங்கத்தைபூங்கா அதிகாரிகள் தேடி வந்த நிலையில், 'லயன் சபாரி' பகுதியில் சுற்றித்திரிவது தெரிய வந்துள்ளது.  மாயமான சிங்கம் பூங்காவில் உள்ள 'லயன் சபாரி' பகுதியில்தான் இருப்பதாகவும்,  வெளியே செல்லவில்லை எனவும் அது பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதால் சிங்கம் வெளியேற வாய்ப்பு இல்லை என பூங்கா அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.



  • Oct 05, 2025 08:19 IST

    மகளிர் உலகக்கோப்பை - இன்று இந்தியா vs பாக். மோதல்

    கொழும்புவில் இன்று நடைபெறும் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது. ஆசியக்கோப்பை தொடரில் இந்திய ஆடவர் அணி பாகிஸ்தான் வீரர்களுக்கு கைகொடுக்க மறுத்த நிலையில், மகளிர் அணியும் இதே நிலையை கடைப்பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



  • Oct 05, 2025 08:19 IST

    ஜப்பானின் முதல் பெண் பிரதமராகிறார் சனே தகைச்சி

    ஜப்பானின் முதல் பெண் பிரதமராக, முன்னாள் அமைச்சர் சனே தகைச்சி (Sanae Takaichi) பதவியேற்க உள்ளார். ஆளும் லிபரெல் டெமாக்ரடிக் கட்சி பெரும்பான்மையை இழந்ததால், புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு வரும் 15-ம் தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



  • Oct 05, 2025 08:18 IST

    படைகளை திரும்ப‌ப் பெற இஸ்ரேல் ஒப்புதல்

    காசாவின் ஒருசில பகுதிகளில் இருந்து படைகளை திரும்ப‌ப் பெற இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது. காசா அமைதி திட்டத்தை ஹமாஸ் நடைமுறைப்படுத்திய உடனே காசாவில் போர் நிறுத்தம் அமலுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.



  • Oct 05, 2025 08:18 IST

    நடிகை சொர்ணமால்யா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

    சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகை சொர்ணமால்யா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - சோதனையில் புரளி என தகவல் வெளியாகியுள்ளது.



  • Oct 05, 2025 08:17 IST

    பீகாரில் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை - பிரதமர் அறிவிப்பு

    பீகாரில், 5 லட்சம் பட்டதாரிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அடுத்த 2 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படும் இந்த திட்டத்துடன் இலவசமாக திறமை வளர்ப்பு பயிற்சியும் வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.



  • Oct 05, 2025 07:27 IST

    இந்தியாவின் எல்லைப்புறச் சாலைகள் அமைப்பு - புதிய கின்னஸ் சாதனை!

    லடாக்கின் மிக்-லாவில் கடல் மட்டத்தில் இருந்து 19,400 அடி உயரத்தில், உலகின் உயரமான இடத்தில் வாகனம் ஓட்டக்கூடிய சாலைகள் அமைத்து பி.ஆர்.ஓ அமைப்பு சாதனை படைத்துள்ளது, இதன் மூலம் கடந்த 2021-ம் ஆண்டு உம்லிங்-லா பகுதியில், 19,024 அடி உயரத்தில் சாலை அமைத்த தங்கள் சொந்த கின்னஸ் சாதனையை பி.ஆர்.ஓ அமைப்பு முறியடித்துள்ளது.



  • Oct 05, 2025 07:23 IST

    உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி - இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம்

    2025 உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்கள் ஷாட் புட்
    F57 பிரிவில், சோமன் ராணா வெள்ளிப் பதக்கம் வென்றார். உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் பெண்கள் கிளப் த்ரோ F51 போட்டியில், ஏக்தா பியான் வெள்ளிப் பதக்கம் வென்றார்



  • Oct 05, 2025 07:22 IST

    காசாவில் தாக்குதலை தற்காலிகமாக நிறுத்திய இஸ்ரேல்

    டிரம்ப் விதித்த கெடு இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், பணயக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் அமைப்பு ஏற்றுக்கொண்டது. அமைதிப் பேச்சுவார்த்தைக்காக, காசாவில் தற்காலிகமாக தாக்குதலை நிறுத்துவதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவித்துள்ளார்



  • Oct 05, 2025 07:21 IST

    ஃபார்ஸ்ட்டேக் அல்லாத பயனர்களுக்கு கூடுதல் கட்டணம் - விதிகளில் புதிய மாற்றம்

    ஃபார்ஸ்ட்டேக் (FASTag) இல்லாமல் கட்டண மையத்திற்குள் நுழையும் வாகனங்களுக்கான கட்டண வசூலில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, .பாஸ்ட்டேக் இல்லாத வாகன ஓட்டிகள் பணமாக செலுத்தினால் கட்டணத்தை விட கூடுதலாக ஒரு மடங்கு வசூலிக்கப்படும் நிலையில் யூபிஐ (UPI) மூலம் செலுத்தினால் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது



Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: