Chennai News Updates: காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் கண்டிக்கத்தக்கது - ஸ்டாலின்

Tamil Nadu News Update: இன்றைய செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

Tamil Nadu News Update: இன்றைய செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
MK Stalin

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

  • Jun 14, 2025 22:11 IST

    தமிழகத்தில் வரும் 16, 17ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு

    தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 16 மற்றும் 17ம் தேதிகளிலும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • Jun 14, 2025 21:57 IST

    ஜெகன்மூர்த்தியை கைது செய்ய முயற்சி - EPS கண்டனம்

    ஜெகன் மூர்த்தியை போலீசார் கைது செய்ய முயற்சித்தற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், "புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அன்புச் சகோதரர் ஜெகன்மூர்த்தியை ஸ்டாலின் மாடல் திமுக அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் அராஜகப் போக்கைக் கையாண்டு கைது செய்ய முயற்சிப்பதற்கு எனது கடும் கண்டனம். அஇஅதிமுக எப்போழுதும், எந்தக் குற்றத்தையும் ஆதரிக்கப் போவதில்லை. ஆனால் மதுரை, வி. சத்திரப்பட்டி காவல் நிலையத்தையே பாதுகாக்க திராணியற்ற முதலமைச்சர், எங்கள் கூட்டணிக் கட்சித் தலைவரை மிரட்டுவதற்காக மட்டும் 500-க்கும் மேற்பட்ட போலீசார் கொண்ட பட்டாலியனை ஏன் அனுப்ப வேண்டும்? என குறிப்பிட்டுள்ளார்.



  • Advertisment
  • Jun 14, 2025 21:51 IST

    9 போயிங் விமானங்களில் பாதுகாப்பு சோதனை நிறைவு

    9 போயிங் விமானங்களில் பாதுகாப்பு சோதனை நிறைவு என்று ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. மத்திய அரசு உத்தரவின்படி 9 போயிங் 787 விமானங்களில் பாதுகாப்பு சோதனை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது என்றும் எஞ்சிய 24 விமானங்களில் விரைவில் சோதனை முடிக்கப்படும் என்றும் ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.



  • Jun 14, 2025 21:47 IST

    சென்னையில் 6 விமானங்கள் ரத்து - பயணிகள் அவதி

    சென்னை விமான நிலையத்தில் இன்று இரவு நிர்வாக காரணங்களாலும், போதிய பயணிகள் இல்லாமலும் 6 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதால், பயணிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர். இன்று இரவு 9 மணிக்கு சென்னை - கோழிக்கோடு ஸ்பைஸ்ஜெட் தனியார் பயணிகள் விமானம், இரவு 8.35 மணிக்கு சென்னை - கொச்சி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம், மாலை 3 மணிக்கு சென்னை - சிவமுகா ஸ்பைஸ் ஜெட் தனியார் பயணிகள் விமானம் ஆகிய 3 புறப்பாடு விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன. 



  • Advertisment
    Advertisements
  • Jun 14, 2025 21:44 IST

    தமிழக கடலில் அமலில் இருந்த தடைக் காலம் இன்றுடன் நிறைவு

    தமிழக கடலில் அமலில் இருந்த 2 மாத மீன்பிடி தடைக்காலம் இன்று நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைகிறது. நாளை அதிகாலை முதல் தமிழக விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்கின்றனர். இதன்படி ராமேஸ்வரம் முதல் நாகை கோடியக்கரை வரையிலான பாக் ஜலசந்தி கடலில் மீன்பிடிக்க செல்லும் விசைப்படகு மீனவர்கள் நாளை மறுநாள் (ஜூன் 16) கடலுக்கு செல்கின்றனர். பாம்பன் முதல் குமரி வரையிலான மன்னார் வளைகுடா கடலில் மீன்பிடிக்கும் விசைப்படகுகள் நாளை (ஜூன் 15) முதல் கடலுக்கு செல்கின்றன.



  • Jun 14, 2025 21:43 IST

    319 உடல் பாகங்கள் டிஎன்ஏ சோதனைக்கு அனுப்பி வைப்பு

    அகமதாபாத் விமான விபத்தில் கருப்பு பெட்டியை மீட்டு விசாரணையை தீவிரப்படுத்திய நிலையில் விமான விபத்து பலி எண்ணிக்கை 274 ஆக உயர்ந்துள்ளது; மேலும் 319 உடல் பாகங்கள் டி.என்.ஏ. சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். 



  • Jun 14, 2025 21:40 IST

    உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்; இந்தியாவுக்கு தங்கம்

    உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ஜெர்மனியின் முனிச் நகரில் நடந்து வருகிறது. இதில், நேற்று நடந்த பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில், இந்திய வீராங்கனை சுருச்சி இந்தர்சிங் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். இன்று நடைபெற்ற கலப்பு அணி 10 மீ. ஏர் ரைபிள் பிரிவு போட்டியில், இந்தியாவைச் சேர்ந்த அர்ஜுன் பாபுட்டா-ஆர்யா போர்சே அணி தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளனர். அவர்கள் ஒலிம்பிக் பதக்கம் வென்ற சீனாவைச் சேர்ந்த ஷெங்க் லிஹாவ்-வாங்க் செபெய் அணியை 17-7 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றனர்.



  • Jun 14, 2025 21:37 IST

    மத்தியப் பிரதேசத்தில் 4 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை

    மத்தியபிரதேசத்தின் பாலாகாட் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு பதுங்கி இருந்த நக்சலைட்டுகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு பாதுகாப்புப் படையினர் பதிலடி கொடுத்தனர். தாக்குதலில் 4 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 



  • Jun 14, 2025 21:36 IST

    கேரளா: கண்டெய்னர்கள் கரை ஒதுங்க வாய்ப்பு - எச்சரிக்கை

    கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் அழிக்கல் கடற்கரை அருகே நடுக்கடலில் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று கப்பலின் ஒரு பகுதி தீப்பிடித்து எரிந்தது. கப்பலில் இருந்து கடலில் விழுந்த கண்டெய்னர்கள் கேரள கடற்கரையில் கரை ஒதுங்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கண்டெய்னர்கள் எர்ணாகுளம் மாவட்டத்தின் தெற்கு பகுதியிலும், ஆலப்புழா மற்றும் கொல்லம் மாவட்டத்தின் கடற்கரையிலும் கரை ஒதுங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கடலோர காவல்படையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



  • Jun 14, 2025 21:23 IST

    டி.என்.பி.எல்: திண்டுக்கல் அணிக்கு 151 ரன்கள் இலக்கு

    டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டிகள் சேலத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் 11-வது ஆட்டத்தில் மதுரை - திண்டுக்கல் அணிகள் இன்று மோதி வருகின்றன. திண்டுக்கல் அணியின் அபார பந்துவீச்சால் மதுரை அணி ரன்கள் குவிக்க திணறியது. அத்துடன், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாடியது. இறுதியில் மதுரை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக ரகுமான் 50 ரன்கள் எடுத்தார். சந்திரசேகர், பெரியசாமி ஆகியோர் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் அணி களமிறங்க உள்ளது.



  • Jun 14, 2025 21:21 IST

    ”கூட்டணியில் இருந்தும் வி.சி.க. பேரணிக்கு அனுமதி மறுப்பு”

    வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பிரம்மாண்ட எழுச்சிப் பேரணி நடைபெற்றது. திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் தொடங்கி, சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு பேரணி நடைபெற்றது. பேரணி நடத்துவதற்கு முதலில் அனுமதி இல்லை என்று சொல்லிவிட்டார்கள். நாம் ஆளுங்கட்சி கூட்டணியில் இருந்தும் நமக்கு பேரணி நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. அவ்வளவு நெருக்கடிகளையும் தாங்கிக்கொண்டு களத்தில் நிற்கும் இயக்கம்தான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறினார்.



  • Jun 14, 2025 20:49 IST

    மும்பை ரசாயன நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து

    சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில் உள்ள பைதான் எம்.ஐ.டி.சி.-யில் உள்ள ஒரு ரசாயன நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் பலரும் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று நிறுவனத்தில் தீ ஏற்பட்டது. இதனையடுத்து தீயாணது மளமளவென பரவத்தொடங்கியது. மாலை 5:50 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பல தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்ட பின்னர் இரவு 7:05 மணிக்குள் தீ அணைக்கப்பட்டது.



  • Jun 14, 2025 20:47 IST

    ”ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் பொறுப்பற்ற செயல்”

    ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் ஒரு பொறுப்பற்ற செயல் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில், ஈரான் மீது இஸ்ரேல் தொடுத்து வரும் தாக்குதல்கள் பெரும் போரை மூளச் செய்யும் பொறுப்பற்ற செயலாகும். ஏற்கெனவே காஸாவில் தொடர்ந்து குண்டுகளை வீசிப் பாலஸ்தீன மக்கள் அல்லலுற்று வரும் வேளையில் ஈரானின் இந்த வன்முறைப் பாதை கண்டிக்கத்தக்கது. உலக நாடுகள் அனைத்தும் இதனைக் கட்டுப்படுத்தவும், நீதிக்கும், பொருள்பொதிந்த பேச்சுவார்த்தைக்கும் வலியுறுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.



  • Jun 14, 2025 20:33 IST

    ”விமான விபத்திற்கு அரசு பொறுப்பேற்று இழப்பீடு வழங்க வேண்டும்”

    ஏர் இந்தியா விமான விபத்து சம்பவத்திற்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறினார். அகமதாபாத் சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், காயமடைந்தவர்களுக்கும் மத்திய அரசு உடனடியாக உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், இந்த விபத்துக்கான காரணங்களைக் கண்டறிந்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

     



  • Jun 14, 2025 20:16 IST

    காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து கார்கே ஆறுதல்

    அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமான விபத்து நடைபெற்ற பகுதியை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேரில் பார்வையிட்டார். தொடர்ந்து விமான விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். கார்கே உடன் கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார் உள்பட காங்கிரஸ் தலைவர்களும் சென்றனர்.



  • Jun 14, 2025 20:00 IST

    விமான விபத்து - 9 பேர் டி.என்.ஏ மூலம் அடையாளம் தெரிந்தது

    அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்த பயணிகளில் முதல் கட்டமாக 9 பேரின் உடல்கள் டி.என்.ஏ. பரிசோதனை மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளன. விபத்தைத் தொடர்ந்து, பல உடல்கள் அடையாளம் காண முடியாத நிலையில் இருந்ததால், இறந்தவர்களின் உறவினர்களிடமிருந்து டி.என்.ஏ. மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, உடல்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.  ஒரு பெண்ணின் உடல் ஏற்கனவே அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள உடல்களை ஒப்படைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 



  • Jun 14, 2025 19:53 IST

    ஈரோடு அருகே திடீரென தீப்பற்றி எரிந்த கார்

    ஈரோடு மாவட்டம் பவானி பழனியாண்டவர் கோவில் வீதி பகுதியை சேர்ந்தவர் புன்னியக்கொடி. இவர் ஒரு ஆம்னி காரை ஓட்டி வந்தார். இந்த நிலையில் மேட்டூர் பிரதான சாலையில் காரை நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து மதியம் சுமார் 3 மணியளவில் காரில் தீ ஏற்பட்டது. இதுகுறித்து உடனடியாக பவானி தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து தகவலறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சுமார் அரை மணி நேரம் போராடி தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.



  • Jun 14, 2025 19:52 IST

    டி.என்.பி.எல்: திண்டுக்கல் அணி பந்துவீச்சு தேர்வு

    டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் சேலத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் 11-வது ஆட்டத்தில் மதுரை - திண்டுக்கல் அணிகள் இன்று மோதி வருகின்றன. இந்த ஆட்டத்துக்கான டாஸ் போடப்பட்டது. இதில் திண்டுக்கல் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி, மதுரை அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.



  • Jun 14, 2025 19:40 IST

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திருச்சி பயணம்

    முதலமைச்சர் ஸ்டாலின் நாளை திருச்சி செல்கிறார். நாளை காலை 10.40 மணிக்கு முதல்வர் இல்லத்திலிருந்து புறப்பட்டு 11 மணிக்கு சென்னை விமான நிலையம் சென்று பின்பு 11.15 மணிக்கு பயணிகள் விமானத்தில் பயணம் செய்து 12.25 மணிக்கு திருச்சி விமான நிலையம் சென்று பின்பு அங்கிருந்து 12.45 மணிக்கு சாலை மார்க்கமாக புறப்பட்டு 1.45 மணிக்கு கல்லணை கெஸ்ட் ஹவுஸ் சென்று தங்குகிறார், பின்பு கல்லணை கெஸ்ட் ஹவுஸில் இருந்து புறப்பட்டு கல்லணை டேம் வந்து 6 மணிக்கு டேம் தண்ணீர் திறந்து வைத்த பின் 6.30 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் வந்து அங்கு கலைஞர் சிலையை திறந்து வைத்த பின் அங்கிருந்து புறப்பட்டு தஞ்சை சர்க்யூட் ஹவுஸ் சென்று இரவு தங்குகிறார்.



  • Jun 14, 2025 19:30 IST

    ”பொய் பிரசாரங்களை தி.மு.க. நிறுத்த வேண்டும்”

    நீட் தேர்வுக்கெதிரான பொய் பிரசாரங்களை திமுக இனியாவது நிறுத்த வேண்டும் என பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திமுக உள்ளிட்ட கட்சிகள் மேற்கொண்டு வரும் நீட் தேர்வுக்கெதிரான பொய் பிரசாரங்களை உடைத்து, ஒவ்வொரு ஆண்டும் தமிழக மாணவர்கள் நீட் தேர்வில் சாதித்துக் கொண்டிருப்பது பெருமைக்குரியது. திமுக அரசு, இனியாவது தனது பொய் பிரச்சாரங்களை நிறுத்திவிட்டு, அரசு மருத்துவக் கல்லூரிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.



  • Jun 14, 2025 19:28 IST

    ”கூட்டணி ஆட்சி; ஆனால் எடப்பாடிதான் முதலமைச்சர்”

    தமிழகத்தில் எங்களுடைய ஆட்சி கூட்டணி கட்சிகளின் ஆட்சியாக இருக்கும் என்றும் அதேநேரத்தில் எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் என்றும் பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். திருவாரூரில் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், இதனை கூறினார்.



  • Jun 14, 2025 19:22 IST

    வைகை அணையில் இருந்து நாளை முதல் தண்ணீர் திறப்பு

    பெரியாறு பிரதான கால்வாய் பாசன பகுதியின் கீழ் உள்ள இரு போக பாசன நிலங்களின் முதல் போக நெல் சாகுபடிக்காக வைகை அணையில் இருந்து நாளை (15-ந் தேதி) முதல் அக்டோபர் 12-ந் தேதி வரை தண்ணீர் திறக்க நீர்வளத்துறை உத்தரவிட்டுள்ளது. தண்ணீர் இருப்பு, நீர் வரத்தை பொறுத்து முதல் போக நெல் சாகுபடி பகுதிகளுக்கு வினாடிக்கு 900 கன அடி நீர் 45 நாட்களுக்கு முழுமையாகவும், 75 நாட்களுக்கு முறை வைத்தும் தண்ணீர் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



  • Jun 14, 2025 19:21 IST

    வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக திருச்சியில் வி.சி.க பேரணி

    வக்ஃபு திருத்தச் சட்டத்திற்கு எதிராக திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பிரம்மாண்ட எழுச்சிப் பேரணி நடைபெற்றது. திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் தொடங்கி, சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு பேரணி நடைபெற்றது. பேரணியின்போது வி.சி.க. தலைவர் திருமாவளவன் திறந்த வாகனத்தின் மீது பயணித்தார். அப்போது அவர் தொண்டர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார். வி.சி.க துணைப் பொதுச் செயலாளர்கள் எஸ்.எஸ்.பாலாஜி, வன்னியரசு உள்ளிட்டோர் களப்பணியில் ஈடுபட்டனர். 



  • Jun 14, 2025 19:20 IST

    சென்னை மீனம்பாக்கத்தில் சதமடித்த வெயில்

    தமிழ்நாட்டில் இன்று சென்னை மீனம்பாக்கம் பகுதியில் அதிகபட்சமாக 100.76 °F வெயில் அடித்துள்ளது. மேலும் நுங்கம்பாக்கம், மதுரை விமான நிலையம், தஞ்சை, வேலூர் ஆகிய பகுதிகளிலும் கடும் வெப்பநிலை இன்று பதிவாகியுள்ளது.



  • Jun 14, 2025 19:19 IST

    முதல்வர் வருகை: தஞ்சையில் 2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தருகிறார். இதனை முன்னிட்டு பாதுகாப்பு காரணம் கருதி நாளை (ஞாயிற்றுகிழமை), நாளைமறுநாள் (திங்கள்கிழமை) நள்ளிரவு 12 மணி வரை 2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது. எனவே, தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.



  • Jun 14, 2025 19:17 IST

    நாளை கல்லணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுகிறார் ஸ்டாலின்

    மேட்டூர் அணையை திறந்து விட்டது போல் கல்லணையில் இருந்தும் டெல்டா பாசனத்திற்கு தண்ணீரை நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க இருக்கிறார். முதலமைச்சர் வருகையை முன்னிட்டு கல்லணையில் தூய்மைப்படுத்தும் பணிகள், வண்ணம் பூசும் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.



  • Jun 14, 2025 19:15 IST

    இடைக்கால நிவாரணமாக ரூ.25 லட்சம் - ஏர் இந்தியா அறிவிப்பு

    அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.25 லட்சம் வழங்கப்படும் என ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. டாடா குழுமம் சார்பில் ஏற்கனவே ரூ. 1 கோடி அறிவிக்கப்பட்ட நிலையில், குடும்பத்தினரின் உடனடி தேவைகளுக்காக கூடுதலாக இத்தொகை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.



  • Jun 14, 2025 19:12 IST

    நாகை - இலங்கை கப்பல் சேவை வரும் 18ம் தேதி வரை நிறுத்தம்

    கடல் சீற்றம் மற்றும் சூறைக்காற்று காரணமாக நாகை, இலங்கை இடையிலான பன்னாட்டு பயணியர் கப்பல் சேவை, வரும் 18ம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மத்திய வங்க கடல் பகுதிகளில் வரும் 17ஆம் தேதி வரை, சூறைக்காற்று மணிக்கு 40 முதல் 60 கிலோ மீட்டர் வரை வீசுவதுடன், கடல் கொந்தளிப்பு ஏற்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இதன் காரணமாக நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு கப்பல் போக்குவரத்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது.

     



  • Jun 14, 2025 19:10 IST

    பா.ம.க நிர்வாகி மர்ம மரணம் - இளைஞரை சுட்டு பிடித்த போலீஸ்

    ராணிப்பேட்டை அருகே பாமக நிர்வாகி மர்மமாக உயிரிழந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட இளைஞரை போலீசார் காலில் சுட்டு பிடித்தனர். சக்கரவர்த்தி உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக எழுந்த புகாரின் பேரில் அரக்கோணம் டி.எஸ்.பி. தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் முன் விரோதம் காரணமாக சக்கரவர்த்தியை திட்டமிட்டு நாட்டு துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தது தெரியவந்துள்ளது



  • Jun 14, 2025 17:22 IST

    உலக டெஸ்ட் சாம்பியனானது தென்னாப்ரிக்கா

    ஆஸ்திரேலியாவை வீழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியனானது தென்னாப்ரிக்கா. 27 வருட சோகத்தை துடைத்தது கேப்டன் பவுமா தலைமையிலான தென்னாப்ரிக்க அணி. AUS 212 & 207 RSA 138 & 285/5 (83.4)



  • Jun 14, 2025 17:20 IST

    விமான விபத்து நிகழ்ந்த மருத்துவமனையின் டீன் பேட்டி

    விமான விபத்து புலனாய்வுப் பணியகம் விசாரணையைத் தொடங்கியது. 4 கட்டிடங்கள் காலி செய்யப்பட்டு மாணவர்களுக்கு தங்குமிடம் ஏற்பாடு செய்யப்பட்டது. 33 முதுகலை மாணவர்கள் வெவ்வேறு விடுதிகளுக்கு மாற்றப்பட்டனர்

    4 UNSG விடுதிகள் இடமாற்றம் செய்யப்பட்டன.

    - பிஜே மருத்துவக் கல்லூரியின் டீன் மீனாட்சி பரேஷ்



  • Jun 14, 2025 17:19 IST

    தென் ஆப்பிரிக்கா சாம்பியன்

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அணி சாம்பியன்



  • Jun 14, 2025 16:39 IST

    அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை

    இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்பட்டால் அமெரிக்கா, பிரிட்டன் ராணுவம் மீதும் தாக்குதல் நடத்துவோம். அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை.



  • Jun 14, 2025 16:38 IST

    அனைத்து விமானங்களிலும் பாதுகாப்பு சோதனை

    அனைத்து விமானங்களிலும் பாதுகாப்பு சோதனை அகமதாபாத் விபத்து எதிரொலியால் அனைத்து விமானங்களையும் பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தும் ஏர் இந்தியா நிறுவனம். மீதமுள்ள விமானங்களில் DGCA வழங்கிய காலக்கெடுவிற்குள் பாதுகாப்பு சோதனை முடிக்கப்படும்



  • Jun 14, 2025 16:35 IST

    காதல் விவகாரத்தில் சிக்கிய ஜெகன் மூர்த்தி

    திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இளைஞர், தேனியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து பதிவுத் திருமணம் செய்துள்ளார். பெண் வீட்டாருக்கு ஆதரவாக கூலிப்படையினர் மூலம் இளைஞரின் சகோதரனை புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி கடத்தியதாக புகார்

    இவ்விவகாரத்தில் பெண்ணின் தந்தை உள்பட 5 பேர் கைதாகியுள்ளனர்

    பூந்தமல்லியை அடுத்த ஆண்டர்சன்பேட்டையில் உள்ள ஜெகன் மூர்த்தி வீட்டில், அவரை கைது செய்ய கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்

    கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்



  • Jun 14, 2025 16:00 IST

    பிரதமரின் திட்டங்களுக்கு அதிகமாக படியளப்பது மாநில அரசு தான் - ஸ்டாலின்

    பிரதமரின் திட்டங்களுக்கு அதிகமாக படியளப்பது மாநில அரசு தான் என முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில், "பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும், ஸ்டிக்கரில் பிரதமரின் முகத்தையும் தாங்கிச் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கெல்லாம் அவர்களைக் காட்டிலும் அதிகமாகப் படியளப்பது மாநில அரசுதான்!

    படையப்பா படக் 'காமெடி' போல "மாப்பிள்ளை அவர்தான், ஆனால் அவர் போட்டிருக்கும் சட்டை என்னுடையது" எனச் சேலம் அரசு விழாவில் பேசியிருந்தேன். பேசினேன் என்பதைவிட பேச வேண்டிய நிலைக்கு மாண்புமிகு உள்துறை அமைச்சரின் அடிப்படையற்ற குற்றச்சாட்டால் தள்ளப்பட்டேன் என்றுதான் கூறவேண்டும்.

    அது The_Hindu நாளிதழில் செய்தியாகி, தரவுகளோடு விவரிக்கப்பட்டுள்ளது. இனியாவது, கண்ணாடி வீட்டில் இருந்துகொண்டு கல்லெறியும் பழக்கத்தை ஒன்றிய பா.ஜ.க. அரசு மாற்றிக்கொள்ள வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.



  • Jun 14, 2025 15:37 IST

    கன்னியாகுமரியில் தொடர் மழை - மின் உற்பத்தி நிலையம் அருகே மண் சரிவு

    கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இதன் விளைவாக, கோதையாறு மின் உற்பத்தி நிலையம் அருகே மண் சரிவு ஏற்பட்டது.



  • Jun 14, 2025 14:58 IST

    விமான விபத்து தொடர்பான விசாரணையை 3 மாதங்களில் முடிக்க உத்தரவு - அமைச்சர் ராம் மோகன் நாயுடு

    விமான விபத்து தொடர்பான விசாரணையை 3 மாதங்களில் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக, விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார். மேலும், கருப்பு பெட்டியில் உள்ள தகவல்கள் மூலம் விமான விபத்துக்கான உண்மையான காரணம் தெரிய வரும் என்றும், விபத்துக்கான காரணத்தை கண்டறிய சர்வதேச நிபுணர்களின் உதவியும் கோரப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



  • Jun 14, 2025 14:02 IST

    இயக்குநர் அட்லிக்கு டாக்டர் பட்டம் 

    சென்னை சத்யபாமா பல்கலை.யில் கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற திரைப்பட இயக்குநர் அட்லிக்கு வழங்கியது. 

     



  • Jun 14, 2025 14:02 IST

    நொறுக்கப்பட்ட காவல் நிலையம்; தடுத்து நிறுத்தி போலீஸ் - மதுரையில் ஆர்.பி.உதயகுமார் கைது 

    மதுரையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை, சத்திரப்பட்டி காவல் நிலையத்தை கொலை வழக்கில் தொடர்புடைய பிரபாகரன் என்பவர் சூறையாடியதாக புகார் எழுந்த நிலையில், நொறுக்கப்பட்ட காவல் நிலையத்தை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பார்வையிட சென்றார். அப்போது அவரை பாதி வழியிலேயே தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்துள்ளனர். ஆர்.பி.உதயகுமாரை கைது செய்ததால் தற்போது மதுரையில் பரபரப்பு நிலவுகிறது. 



  • Jun 14, 2025 14:00 IST

    ஆக்ஸியம் 4 குழு - ஜூன் 19 விண்வெளிக்கு பயணம்

    இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லாவை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அழைத்துச்செல்லும் ஆக்ஸியம்-4 திட்டமிடப்பட்டுளள்து. ஜூன் 19ம் தேதி ஆக்ஸியம்-4 குழு, பால்கன் 9 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படும் என அறிவிக்கப்படுள்ளது. 



  • Jun 14, 2025 13:47 IST

    நீலகிரிக்கு இன்றும் நாளையும் ரெட் அலர்ட்

    நீலகிரி மாவட்டத்திற்கு இன்றும், நாளையும் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கோவை, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துளளது. திருப்பூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.  



  • Jun 14, 2025 13:32 IST

    நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு 

    இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியாகின. நீட் தேர்வு முடிவுகளை neet.nta.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் மே 4ம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் சுமார் 23 லட்சம் மாணவர்கள், தமிழ்நாட்டில் 1.5 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர். அனைத்து தேர்வர்களுக்கும் மின்னஞ்சலில் மதிப்பெண் விவரம் அனுப்பப்பட்டதாக தேசிய தேர்வு முகமை தகவல் தெரிவித்துள்ளது.



  • Jun 14, 2025 13:05 IST

    தி.மு.க ஆட்சியில் காவல் நிலையத்திற்கே பாதுகாப்பு இல்லை - இ.பி.எஸ்  

    தமிழக எதிர்கட்சித் தலைவரும், அ.தி.மு.க பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "தி.மு.க ஆட்சியில் காவல் நிலையத்திற்கே பாதுகாப்பு இல்லை. காவல் நிலையத்தையே காக்க முடியாத இந்த பொம்மை முதல்வர், தமிழ்நாட்டு மக்களை எப்படி காக்கப் போகிறார்? மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள V. சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் நேற்று புகுந்த மர்மநபர்கள், காவல் நிலையத்தைத் தாக்கி, சூறையாடியதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இதனையடுத்து, எனது அறிவுறுத்தலின்படி, சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் திரு. ஆர்.பி. உதயகுமார் அவர்கள் அக்காவல் நிலையத்தை பார்வையிடச் சென்றபோது, அவர் ஸ்டாலின் மாடல் அரசின் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளதற்கு எனது கடும் கண்டனம்.

    ஸ்டாலின் ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை; மக்களைக் காக்க வேண்டிய காவல்துறைக்கு பாதுகாப்பு இல்லை; தற்போது உச்சத்தின் உச்சமாக காவல் நிலையத்திற்கே பாதுகாப்பு இல்லை. நான்காண்டு ஆட்சியின் சாதனைப் பட்டியலில் முதலில் சேர்க்க வேண்டிய சாதனை இது தான் மு.க ஸ்டாலின்  

    உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல் நிலையம் தாக்குதலுக்கு உள்ளாவது உங்களுக்கு வெட்கமாக இல்லையா பொம்மை முதல்வரே காவல் நிலையத்தையே காக்க முடியாத இந்த திமுக ஆட்சி, எப்படி மக்களைக் காக்கும்? வாய்ப்பே இல்லை. வி. சத்திரப்பட்டி காவல் நிலையத் தாக்குதலில் ஈடுபட்டோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன். எப்போதும் நான் சொல்வதை மீண்டும் தமிழ்நாட்டு மக்களுக்கு ஒருமுறை சொல்லிக்கொள்ள விழைகிறேன்- மக்களே, இந்த ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு" என்று அவர் தெரிவித்துள்ளார். 



  • Jun 14, 2025 13:05 IST

    கேரள கடற்கரையில் சரக்கு கப்பலில் தீ விபத்து

    மலேசியாவிலிருந்து மும்பை சென்ற இன்டர்-ஆசியா டெனாசிட்டி சரக்கு கப்பலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கேரள கடற்கரையிலிருந்து கடலோர காவல்படையினரால் தீ அணைக்கப்பட்டுள்ளதாக சரக்கு கப்பலின் கேப்டன் தகவல் தெரிவித்துள்ளார். 
     

     



  • Jun 14, 2025 12:38 IST

    அனைத்து வகையான பைக் டேக்சிகளுக்கும் தடை- ஐகோர்ட் அதிரடி

    கர்நாடகாவில் ஜூன் 16 முதல் ஓலா, உபர், ரேபிடோ உள்ளிட்ட அனைத்து வகையான பைக் டேக்சிகளுக்கும் தடை விதித்து மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடகா அரசு மோட்டார் வாகன சட்டத்தில் உரியச் சட்டத் திருத்தத்தை மேற்கொள்ளும் வரை தடை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Jun 14, 2025 12:28 IST

    18 மசோதாக்களில் 15-க்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் 

    தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட 18 மசோதாக்களில் 15க்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். பதிவுத் துறை தொடர்பான மசோதா குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பல்கலைக்கழகம் தொடர்பான 2 மசோதாக்கள் ஆளுநரிடம் நிலுவையில் உள்ளது.



  • Jun 14, 2025 11:34 IST

    ”தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் கூட்டணி”

    தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் கூட்டணி என்று அதிமுக மாஜி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வீடியோ வெளியிட்டுள்ளார். மேலும் அவர்,”தங்கள் இருப்பிடத்தை காட்டிக் கொள்ள சிலர் பேசுவதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது இல்லை. டெல்லிக்கு தலைமை பிரதமர் மோடி, தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் கூட்டணி. கூட்டணி விவகாரத்தில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை, குழப்பமும் இல்லை,”இவ்வாறு தெரிவித்தார்.



  • Jun 14, 2025 11:03 IST

    கொல்லங்குடி கருப்பாயி காலமானார்

    நாட்டுப்புற பாடகியும், நடிகையுமான கொல்லங்குடி கருப்பாயி (99) காலமானார் சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடியில் உள்ள இல்லத்தில் வயது மூப்பால் காலமானார் கருப்பாயி; கொல்லங்குடி கருப்பாயிக்கு 1993ஆம் ஆண்டு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கௌரவித்தது



  • Jun 14, 2025 10:56 IST

    மாம்பழம் விலை வீழ்ச்சி தொடர்பாக ஒன்றிய அமைச்சருக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம்

    மாம்பழம் விலை வீழ்ச்சி தொடர்பாக ஒன்றிய அமைச்சருக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில்,”மாம்பழம் விலை குவிண்டாலுக்கு ரூ.12,000லிருந்து ரூ.3,000ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒன்றிய அரசு தலையிட்டு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்,”இவ்வாறு தெரிவித்தார்.



Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: