சென்னை சென்ரலில் இருந்து புறப்பட இருந்த புறநகர் ரயில்கள், தாமதமாகப புறப்பட்டதால், பணி முடிந்து வீடு திரும்பிய பயணிகள் பலரும் கடும் அவதிக்குள்ளாகினர்.
சென்னை சென்ரல் ரயில் நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கும், சென்னை நகரத்திற்கும் ரயில் போக்குவரத்து சேவை இடைவிடாமல் செயல்பட்டு வருகிறது. ஒரு சிலமுறை தவிர்க்க முடியா சில காரணங்களால் திடீரென ரயில் சேவை தாமதமாக தொடங்குவது அவ்வப்போது நடந்து வருகிறது. அந்த வகையில் சென்னை சென்ரலில் இருந்து அரக்கோணம், திருவள்ளூர் மார்கமாக செல்லும் புறநகர் ரயில் 45 நிமிடங்கள் தாமதமாகியுள்ளது.
இந்த தாமதம் காரணமாக பணி முடிந்து வீட்டுக்கு செல்லும் பயணிகள் கடும் அவதிக்குள்ளான நிலையில், சென்னை சென்ரல் ரயில் நிலையம், முழுவதும் பயணிகள் கூட்டத்தினால் அலைமோதியது. ரயில்கள் தாமதத்தினால், பயணிகள் பலரும் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனிடையே சிக்னல் கோளாறு காரணமாக ரயில்கள் தாமதமாக புறப்பட்டதாக தகவல் வெளியானது. சென்னை கடற்கரை, தாம்பரம் செங்கல்பட்டு, சென்னை சென்ட்ரல், ஆவடி, திருவள்ளூர் வழித்தடங்களில் மின்சார ரயில்கள் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.