Tamilnadu Chennai weather forecast latest updates: தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக வானிலை நிலவரம் தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
25.07.2022
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதையும் படியுங்கள்: சென்னையில் இன்று எந்த ஏரியாவில் மின் தடை?
26.07.2022
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தின் வட கடலோரப் பகுதிகளில் உள்ள மாவட்டங்கள், அதனை ஒட்டிள்ள உள் மாவட்டங்கள், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
27.07.2022
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென் தமிழகம், திருப்பூர், கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
28.07.2022
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கனமழை எச்சரிக்கை:
26.07.2022: வட கடலோர தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்கள், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
27.07.2022: தென் தமிழகம், திருப்பூர், கோயம்புத்தூர் நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை:
25.07.2022 முதல் 28.07.2022: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை ஓரிரு இடங்களில் பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணிநேரத்திற்கு: வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும். லேசான அல்லது மிதமான மழையுடன் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை சுமார் 33˚C மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை சுமார் 25-26˚C ஆக இருக்கலாம்.
அடுத்த 48 மணிநேரத்திற்கு: வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். லேசான அல்லது மிதமான மழையுடன் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை சுமார் 35˚C மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை சுமார் 26-27˚C ஆக இருக்கலாம்.
இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil