Advertisment

டாஸ்மாக் கடையை உடைத்து குவாட்டர் பாட்டிலை திருடிய வாலிபர்: சுற்றி வளைத்த சிதம்பரம் போலீஸ்

கடந்த ஜனவரி 15-ந் தேதி அன்று,டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூபாய் 12000 மதிப்புள்ள 180 ml அளவு கொண்ட 48 மதுபாட்டில்களை ஒருவர் திருடி சென்றுள்ளார்.

author-image
WebDesk
New Update
Tasmac Ns

சிதம்பரம் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து 48 குவாட்டர் பாட்டிலை திருடி சென்ற வாலிபரை சிதம்பரம் இன்ஸ்பெக்டர் அமுதா சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தார்

Advertisment

சிதம்பரம் தாலுகா காவல் நிலைய சரகம் பரமேஸ்வரநல்லூர் பகுதியில், கடந்த ஜனவரி 15-ந் தேதி அன்று,டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூபாய் 12000 மதிப்புள்ள 180 ml அளவு கொண்ட 48 மதுபாட்டில்களை ஒருவர் திருடி சென்றுள்ளார். இது குறித்து அளித்த புகாரின் அடிப்படையில், சிதம்பரம் தாலுகா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. காவல் ஆய்வாளர் அமுதா குற்றவாளியை தேடி வந்தார்

இது தொடர்பாக விசாரணை நடத்தியதில், டாஸ்மாக் கடையில் திருடிய வாலிபர், ஆனந்தராஜ் வயது 24 த/பெ வைத்திலிங்கம், பாட்டை தெரு, கருங்குழி, குறிஞ்சிப்பாடி, கடலூர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட ஆனந்தராஜ் மீது  கடலூர் முதுநகர், புவனகிரி, சீர்காழி,சிறுபாக்கம், ஸ்ரீமுஷ்ணம், சோழத்தரம், வடலூர், முசிறி ஆகிய காவல் நிலையங்களில் 8 திருட்டு வழக்குகள் உள்ளது.

இவரின் குற்ற செயலை கட்டுப்படுத்தும் பொருட்டு கடலூர் மாவட்ட காவல் எஸ் பி ஜெயக்குமார்  பரிந்துரையின் பேரில் கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஓராண்டு காலம் குண்டர் தடுப்பு காவலில் வைக்க ஆணையிட்டதின்பேரில் ஆனந்தராஜ் குண்டர் தடுப்பு காவலில் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Advertisment
Advertisement

செய்தி: பாபு ராஜேந்திரன்

Chidambaram
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment