/tamil-ie/media/media_files/uploads/2018/11/edappadi-palanisamy-about-sarkar-movie.jpg)
edappadi palanisamy about sarkar movie, எடப்பாடி பழனிசாமி
சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சர்கார் படம் பார்த்த தன்மானம் உள்ள கட்சிக்காரர்கள் கொதிக்கத்தான் செய்வார்கள் என கூறினார்.
தீபாவளி பண்டிகைக்கு ரிலீஸான சர்கார் திரைப்படம், வெளியாவதற்கு முன்பிருந்தே பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. இது என் கதை என்று வருண் தொடங்கிய வழக்கு முதல் அதிமுக வினர் கிளப்பிய பிரச்சனை வரை சர்ச்சைகளாகவே இப்படம் நிறைந்துள்ளது.
தமிழக அரசு கொண்டு வந்த இலவச பொருட்கள் வழங்கும் திட்டங்களை சர்கார் படம் தவறாக சித்தரித்துள்ளதாகவும் அதுபோன்ற காட்சிகள் உடனே நீக்க வேண்டும் என்றும் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதன் விளைவாக ஒரு சில காட்சிகளும் அப்படத்தில் இருந்து நீக்கப்பட்டது.
சர்கார் குறித்து எடப்பாடி பழனிசாமி பேட்டி
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் பழனிசாமி சர்கார் படம் குறித்து எழுந்த கேள்விகளுக்கு பேட்டியளித்தார். அப்பேட்டியில், “தாங்கள் மதிக்கும் தலைவர்களை இழிவாக பேசினால், தன்மானம் உள்ள கட்சிக்காரர்கள் கொதிக்கத்தான் செய்வார்கள். அதிமுகவினர் பேனர்களை கிழித்தார்கள் என்று கூறுவது தவறு. பொதுமக்களும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
பல நூறு கோடிக்கு இவர்கள் படம் எடுக்கிறார்கள். இதற்கு பணம் எங்கிருந்து வருகிறது?, ரூ.100 டிக்கெட்டை ரூ.1000க்கு விற்று, ரசிகர்களின் ரத்தத்தை உறிஞ்சிகிறார்கள்.
விலையில்லா பொருட்கள் கொடுத்ததால் தான் தமிழகத்தில் அதிக மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். தமிழகம் உயர்கல்வியில் 46.8% உயர்ந்துள்ளது. ஆடு, மாடு போன்றவற்றை இலவசமாக கொடுத்ததால், மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது. கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர்களுக்கு சேவையைப் பற்றி தெரியுமா?” என்று கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.