சென்னை சித்தரஞ்சன் சாலையில் வசிக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு இல்லத்துக்கு மாற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ந் தேதி 16-வது சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் முடிவுகள் கடந்ம மே 2-ந் தேதி நடைபெற்று அன்றைய தினமே முடிவுகளும் அறிவிக்கப்பட்டது. வாக்குப்பதிவக்கும் தேர்தல் முடிவுக்கும் இடைப்பட்ட ஒரு மாத காலத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பல அதிரடியான முடிகளை செயல்படுத்த தொடங்கினார். அமைச்சரைவை பட்டியல் தயார் செய்வது, பதவியேற்பு விழாவிற்கு ஏற்பாடு செய்வது பல பணிகளை மேற்கொண்டார்.
கண்டிப்பாகஈந்த தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று உறுதியாக நம்பிய ஸ்டாலின், இந்த பணிகளை மேற்கொண்டு வரவதாக அப்போதைய செய்திகள் வெளியானது. அதற்கு ஏற்றால்போல் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற திமுக கூட்டணியில் மு.க.ஸ்டாலின் முதல் முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். தேர்தல் முடிவு வெளியாவதற்கு முன்பே முதல்வரானால் ஸ்டாலின் தனது சொந்த வீட்டில் தங்குவாரா அல்லது அரசு வீட்டில் தங்குவாரா என்பது குறித்து பல கேள்விகள் எழுந்தது. அந்த கேள்விகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக முதல்வர் ஸ்டாலின் தற்போது வேறு வீடு பார்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை சித்தரஞ்சன் சாலையில் வசிக்கும் முதல்வர் ஸ்டாலின் தான் முதல்வராவதற்கு முன்பு, சித்தரஞ்சன் சாலையில் சித்ரஞ்சன் ரோடு - ஆழ்வார்பேட்டை சென்று எல்டாம்ஸ் ரோடு வழியாக அண்ணா அறிவாலயத்திற்கு செல்வார். ஆனால் தற்போது முதல்வராக உள்ள ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்திற்கு, செல்லும் ரூட்டை மாற்றியுள்ள ஸ்டாலின், டிடிகே சாலை வழியாக கதீட்ரல் ரோட்டில் அண்ணா மேம்பாலம் வழியாக அண்ணா அறிவாலயம் செல்கிறார்.
முன்பு சென்றதை விட தற்போது செல்லும் வழி 4 கிலோ மீட்டர் அதிகம் உள்ளது. முதல்வர் ஸ்டாலின் செல்லும் பாதை என்றால் பாதுக்காப்பு காரணமாக சாலையோர கடைகளை அகற்றிவிடுவது வழக்கம். இதனால்தான் அவர் ரூட்டை மாற்றியுள்ளார். எல்டாம்ஸ் ரோட்டில், சாலையோர கடை வைத்திருக்கும் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்பதால் ஸ்டாலின் இந்த முடிவை எடுத்ததாக திமுக முக்கிய பிரமுகர்கள் கூறுகன்றனர்.
இதனைத் தொடர்ந்து தற்போது முதல்வர் ஸ்டாலின தனது வீட்டை மாற்ற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர், தங்களது வீடுகளிலேயே முதல்வர் பதவிக்கான சந்திப்புகளை தொடர்ந்து வந்தனர். ஆனால் அடுத்து முதல்வர் பதவியேற்ற முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் அமைச்சராக இருந்தபோது பயன்படுத்திய அரசு இல்லத்தையே முதல்வர் பதவிக்கான பணிகளுக்காக பயன்படுத்தி வந்தார்.
தற்போது தேர்தலில் தோல்வியடைந்து எதிர்கட்சி தலைவராக உள்ள அவர், மீண்டும் அதே வீட்டில் வசித்து வருகிறார். மேலும் ஏற்கனவே துணை முதல்வராக இருந்த ஸ்டாலின் கிரீன்வேஸ் சாலையில் உள்ள குறிஞ்சி இல்லத்தில் தங்கினார். தொடர்ந்து கடந்த ஆட்சியில் சட்டத்துறை அமைச்சராக இருந்த சி.வி.சண்முகம் அதே வீட்டில் தங்கியிருந்த நிலையில், தற்போது முன்னாள் சபாநாயகர் தனபால் அந்த வீட்டில் வசித்து வருகிறார். அவர் அந்த வீட்டில் வசிக்க அதிகாரம் இல்லை என்பதால், வீட்டை காலி செய்ய அவர் இரு மாதங்கள் அவகாசம் கேட்டிருப்பதாக கூறப்படுகிறது.
அவர் வீட்டை காலி செய்தபின் முதல்வர் ஸ்டாலின் இந்த வீட்டில் குடியேற உள்ளாக கூறப்படுகிறது. அரசு இல்லம் மற்றும் ஸ்டாலினின் தற்போதைய இல்லம் என இரண்டிலும் கட்சி மற்றும் முதல்வர் பதவிக்கான சநதிப்பு நிகழ்த்த வசதிகள் உள்ளது என்றாலும், கொரோனா பெருந்தொற்று காலத்தில் தினமும் பலர் வந்துசெல்வதால் பாதுகாப்பு கருதி ஸ்டாலின் குறிஞ்சி இல்லத்துக்கு மாற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil