சென்னை மாங்காட்டில் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்த தலைமை செயலாளர் இறையன்பு, பணிகள் முடிந்தும் மழைநீர் தேங்கினால் அனைவரும் சஸ்பெண்ட் ஆகிவிடுவீர்கள் என அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
பருவமழை தொடங்க உள்ள நிலையில் தமிழகத்தில் மழைநீர் கால்வாய்களை விரைவில் முடிக்கவேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன் அடிப்படையில், தமிழக தலைமை செயலாளர் இறையன்பு அக்டோபர் 29ஆம் தேதி காலை குன்றத்தூர் அருகில் உள்ள மாங்காடு நகராட்சியில் நடைபெற்று வரும் மழைநீர் கால்வாய் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
சுமார் பல கோடி மதிப்பில் நடைபெற்றுவரும் இந்த பணிகள் குறித்து தலைமை செயலாளர் விசாரித்தார். மாங்காட்டில் உள்ள ஓம்சக்தி நகரில் நடைபெற்று வரும் மழைநீர் கால்வாய்ப் பணிகளை ஆய்வு செய்தவர், கடந்த ஆண்டுகளில் மழை பெய்தபோது எங்கெல்லாம் மழைநீர் தேங்கியது என்று விசாரித்தார். மேலும், தற்போது கட்டப்பட்டுள்ள மழைநீர் கால்வாயால் நீர் தேங்காமல் இருக்குமா என்று உறுதி செய்துகொண்டார்.
இதை தொடர்ந்து, பணிகளை விரைந்து முடிக்கவேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil