11 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ள தமிழக அரசு, 4 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பதவ உயர்வு வழங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசின் உள்துறை செயலாளர் தீரஜ்குமார் பிறப்பித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு (2026) சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காவல்துறையில் அவ்வப்போது பணி மாற்றம் தொடர்பான உத்தரவுகள் உட்பட அரசு உயர் அதிகாரிகள் மாற்றங்கள் குறித்து அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழகத்தில் 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசின் உள்துறை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
/indian-express-tamil/media/media_files/2025/02/24/tamilnadu-ips-officers3-350165.webp)
அதன்படி, கோயம்பேடு காவல் துணை ஆணையராக அதிவீரபாண்டியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சேலம் வடக்கு துணை ஆணையராக இருந்த பிருந்தா ஐபிஎஸ், தமிழ்நாடு சிறப்புப்படை துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் தெற்கு துணை ஆணையராக தீபா சத்யன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையல், மாநில குற்ற ஆவண காப்பக ஏடிஜிபி ஆக ஆயுஷ் மணி திவாரி ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
/indian-express-tamil/media/media_files/2025/02/24/tamilnadu-ips-officers-287423.webp)
சென்னை ஆயுதப்படை ஏடிஜிபியாக எச்.எம்.ஜெயராம் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை கோயம்பேடு துணை ஆணையராக இருந்த சுப்புலட்சுமி நிர்வாக பிரிவு துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், மாநில சைபர் கிரைம் எஸ்.பி-யாக இருந்த அசோக்குமார் பட்டாலியன் எஸ்.பியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆவடி மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையராக சங்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
/indian-express-tamil/media/media_files/2025/02/24/tamilnadu-ips-officers2-497964.webp)
அதேபோல், தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு ஏ.எஸ்.பி ஷானாஸ் ஐபிஎஸ், சென்னை சைபர் கிரைம் பிரிவில் எஸ்.பியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஏ.எஸ்.பி உதயகுமார் ஐபிஎஸ், கோவை தெற்கு துணை ஆணையராக பதவி உயர்வுடன் நியமிக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரம் ஏ.எஸ்.பி சிவராமன் ஐபிஎஸ், சேலம் வடக்கு துணை ஆணையராக பதவி உயர்வுடன் நியமிக்கப்பட்டுள்ள நிலையில்,.திண்டுக்கல் டவுன் ஏ.எஸ்.பி சிபின், எஸ்.பியாக பதவி உயர்த்தப்பட்டு, திருச்சி வடக்கு துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.