Advertisment

அபூர்வா, அதுல்ய மிஸ்ரா... மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

தமிழகத்தில் 16 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

author-image
WebDesk
Dec 02, 2022 22:07 IST
TN Sec

தமிழ்நாடு சட்டசபை

தமிழகத்தில் 16 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

Advertisment

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி,

உயர்கல்வித்துறை கூடுதல் செயலாளராக பழனிச்சாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு கேபிள் டிவி நிர்வாக இயக்குனராக ஜான் லூயிஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அதுல்யா மிஸ்ரா இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் கூடுதல் தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வீட்டு வசதி மற்றும் நகர்புற மேலான்மைத்துறையின் முதன்மை செயலாளராக அபூர்வா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழக இயக்குனராக இருந்த நந்தகோபால், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல் தமிழ்நாடு வீட்டுவசதித்துறை செயலாளராக இருந்த ஹிதேஸ்குமார் மக்வானா டெல்லி தமிழ்நாடு இல்லத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். டி.என்.பிஎஸ்.சி தேர்வு கட்டுப்பாட்டாளராக இருந்த கிரண் குராலா பேரூராட்சிகள் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சமூக நலன் பெண்கள் நலவாரிய இயக்குனராக ஜதாக் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே வீட்டு வசதி வாரிய இயக்குனராக இருந்தவர்.

வேளான் மற்றும் விவாசாயிகள் துறை இயக்குனராக இருந்த ஆபிரகாம் தற்போது சமூக சீர்திருத்தத்துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். நகர்புற மேம்பாட்டு இயக்குனராக இருந்து வந்த செல்வராஜ் தமிழ்த்துறை மேம்பாடு மற்றும் தகவல்துறை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சாலை மேம்பாட்டுத்துறை திட்டம் 2-ல் இயக்குனராக இருந்த கணேசன், நகர்புற ஊரமைப்பு இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குனராக இருந்த அணில்மேஸ்ராம் பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நகர் புனரமைப்பு திட்ட இயக்குனராக இருந்த சரவண வேல்ராஜ், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மேலாண் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் தொழில்துறை சிறப்பு செயலாளராக லில்லி, நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், மருத்துவத்துறை பயிற்சி வாரியத்தில் இருந்த பூங்கொடி சகோசர்வநிர்வாக இயக்குனராக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment