நாளுக்கு நாள் உயரும் கட்டுமான பொருட்களின் விலை உயர்வு அனைத்து தரப்பு மக்களையும் பாதிப்புக்கு உள்ளாக்குகின்றது. கட்டுமான பொருட்களின் விலையை நிர்ணயம் செய்ய அரசு தனி குழு அமைக்க வேண்டும் கோவையில் கட்டுமான பொறியாளர்கள் சங்கத்தினர் தமிழகஅரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.
கோவை மாவட்ட அனைத்து வகை கட்டுமான பொறியாளர்கள் சங்கத்தின் 2024 மற்றும் 2025"ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நிகழ்ச்சி இன்று கோவையில் ப்ரூக்பீல்ட்ஸ் வணிக வளாகத்தில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் புதிய தலைவராக பதவியேற்ற விஜயகுமார் கூறுகையில்,
காட்சியா ("CODCEA") என்ற இந்த அமைப்பின் மூன்றாம் ஆண்டு பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது, இத்துறையில் உள்ள பல்வேறு இடையூறுகள் மற்றும் பொறியாளர்களுக்கு ஏற்படும் இடையூறுகளை களைய வேண்டும் என துவங்கபட்ட இச்சங்கம் மூன்று ஆண்டுகளாக பல்வேறு சமூக பணிகளை முன்னெடுத்து உள்ளது. வருகின்ற "நவம்பர் மாதம் 22,23,24 ஆகிய மூன்று தேதிகளில்" கட்டுமான கண்காட்சியை கொடிசியா வளாகத்தில் நடத்த திட்டமிட்டுள்ளது.
கடந்த காலங்களில் கட்டுமான பொறியாளர்கள் சங்கத்தின் சார்பாக கட்டுமான பொருட்களான சிமெண்ட், கம்பி, செங்கல், மணல், உள்ளிட்ட அனைத்து பொருட்கள் நாளுக்குநாள் உயரும் விலை உயர்வை கன்டித்து பல்வேறு போராட்டம், மற்றும் ஆர்பாட்டங்களை நடத்தி, தமிழக முதல்வரின் தனி பிரிவுக்கு எடுத்து சென்று மனுவாக அளித்துள்ளோம்.
அந்த மனுவில் எங்களது சங்கத்தின் கோரிக்கையாக கட்டுமான மூல பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்வதை தடுக்க வேண்டும் ஒரு நிலையான விலையை அரசு நிர்ணயிக்க வேண்டு்ம் அதற்கு ஒரு குழு அமைத்து இதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தோம். இதற்க்கு அரசிடம் இருந்து நல்ல பதிலும் கிடைக்க பெற்றுள்ளது.
மேலும் கட்டுமான பணிகளுக்கு தேவையான உரிமங்களை பெற மாநகராட்சி நிர்வாகம் தற்போது அதிக அளவில் காலதாமதம் ஏற்படுத்தி வருகிறது, இந்த உரிமங்களை மாநகராட்சி நிர்வாகம் உடனுக்குடன் ஆய்வு செய்து வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம் என்று கூறியுள்ளார்.
இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பொது பணித்துறை தலைமை பொறியாளர் சிவலிங்கம் மற்றும் பொறியாளர் வெங்கடசுப்ரமணி ஆகியோர் புதிய தலைவராக விஜயகுமார் - துணைத் தலைவராக செவ்வேல், செயளாலராக ராஜரத்தினமும் மற்றும் பொருளாளராக மணிகண்டன் ஆகியோருக்கு, பதவிப்பிரமாணம் செய்து வைத்தனர்.
பி.ரஹ்மான் கோவை மாவட்டம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“