உங்கள் புகார்களை நேரடியாக முதல்வருக்கே தெரிவிக்கலாம்; துவங்கியது இணைய வழி சேவை

New Website For Grievence : தமிழகத்தில் மக்கள் முதல்வரிடம் புகார் மனு அளிக்க புதிய இணையதள வசதி தொடங்கப்பட்டு்ளளது.

தமிழகத்தில் பொதுமக்கள் தங்களது புகார்களை எளிமையாக தெரிவிக்க புதிதாக இணையதள வசதி தொடங்கப்பட்டுள்ளது

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில’ திமுக தலைமயிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி அதிகபட்ச இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. இந்த தேர்தல் வெற்றிக்காக கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்பே தளது பிரச்சாரத்தை தொடங்கிய திமுக தலைவர் ஸ்டாலின், மக்களிடம் புகார் மனுக்களை பெற்றார். தான் ஆட்சிக்கு வந்ததும் உங்கள் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் என்ற திட்டத்தின் மூலம் உங்கள் புகார் மனுக்கள் குறித்து 100 நாட்களுக்குள் முடிவெடுக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து கடந்த மே 7-ந் தேதி முதல்வராக பதவியேற்ற ஸ்டாலின் மக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் உங்கள் தொகுதியில் முதல்வர் என்ற துறையை உருவாக்கப்பட்டு அதற்கு சிறப்பு அதிகாரியாக ஷில்பா பிரபாகர் சதீஷ் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டு பெறப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது அதன்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பொதுமக்கள் புகார் அளிக்க முதலமைச்சரின் தனிப்பிரிவு இணையதளம் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.

அதன்படி   http://cmcell.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பொதுமக்கள் புகார்களை அளிக்கலாம். மேலும் மக்கள் தங்கள் புகார் மீதான நடவடிக்கைகள் குறித்து http://cmcell.tn.gov.in/login.php என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu cm cell compliant new website for grievence

Next Story
வீட்டுத் தனிமையில் வாழ்வது அவ்வளவு எளிதல்ல… அன்றாட நிகழ்வுகளை அழகான ஓவியங்களாக மாற்றிய இளைஞர்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com