Tamilnadu CM initiated Kaval Uthavi app facilities here: பொதுமக்கள் பாதுகாப்பிற்காக 60 வசதிகளுடன் கூடிய காவல் உதவி செயலியை தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழக அரசும் காவல்துறையும் பொதுமக்களின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்தி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக பெண்கள், குழந்தைகள், முதியவர்களின் பாதுக்காப்பிற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில் காவல் உதவி செயலியை தமிழ்நாடு காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதனை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இந்த செயலியில் 60-க்கும் மேற்பட்ட சிறப்பம்சங்கள் உள்ளன.
'அவசரம்' உதவி பொத்தான் – பொது மக்கள் குறிப்பாக பெண்கள் அவசர காலங்களில் சிவப்பு நிற 'அவசரம்' என்ற பொத்தானை அழுத்துவதன் மூலமாக, பயனாளர் விவரம், தற்போதைய இருப்பிட விவரம் மற்றும் வீடியோ, கட்டுப்பாட்டு அறையில் பெறப்பட்டு காவல் துறையின் அவசர சேவை வழங்கப்படும். அவசரகால அலைபேசி அழைப்பு வசதி (Dial-112/100/101) – பயனாளர்கள் அலைபேசியில் நேரடி புகார்களை தெரிவிக்க 'Dial-100' என்ற செயலி 'காவல் உதவி' செயலி மூலம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணிலிருந்து அழைப்பதால், பயனாளர் விவரம் மற்றும் தற்போதைய இருப்பிட விவரம் அறியப்பட்டு துரித சேவை வழங்கப்படும்.
அலைபேசி வழி / புகார் அளித்தல் (Mobile Based Complaint) – பயனாளர்கள், குறிப்பாக மகளிர், சிறார், முதியோர் ஆகியோர் அவசர கால புகார்களை, படங்கள்/ குறுகிய அளவிலான வீடியோவை பதிவேற்றம் செய்து, புகாரை பதிவு செய்யலாம். இருப்பிட விவர பரிமாற்ற சேவைவசதி (Location sharing) – பயணங்கள் மேற்கொள்ளும் போது, அவசர காலத்தில் பயனாளர்கள், Whatsapp / Google Map வாயிலாக, நேரடி இருப்பிட விவரங்களை நண்பர் அல்லது உறவினருடன் பரிமாறும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பயனாளர்களின் உறவினர் அல்லது நண்பர் வாயிலாக செல்லும் இருப்பிடம் அறியப்பட்டு, காவலர் விரைந்து செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: சென்னையில் சுகாதாரமான கழிப்பறைகள் எங்கே? “கக்கூஸ்” செயலியை வெளியிட்ட மாநகராட்சி
மேலும், காவல் நிலைய இருப்பிடம் மற்றும் நேரடி அழைப்பு வசதி (Police Station Locator), காவல் கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி விவரம் அறிதல் (Control Room Directory), இணைய வழி பொருளாதார குற்றம் தொடர்பான புகார்கள் (Cyber Financial Related Complaint), இதர அவசர / புகார் உதவி எண் அழைக்கும் வசதி (Other Emergency Helplines), அவசர கால அறிவிப்புகள் / இதர தகவல்கள் அறியும் வசதி (Alert / Notification messages), வாகன விவரம் அறிதல் (Vehicle Verification), போக்குவரத்து விதிமீறல் அபராதம் செலுத்தும் வசதி (E-Payment), தனிநபர் குறித்த சரிபார்ப்பு சேவை (Police Verification Services), தொலைந்த ஆவணங்கள் குறித்தபுகார் (Lost Document Report), CSR / FIR –குறித்த விவரம், காவல்துறையின் சமூக ஊடக சேவைகள் (Social Media Connect), காவல்துறையின் குடிமக்கள் சேவை செயலி (TN Police Citizen App) / 112 இந்தியா (112-India App) ஆகிய வசதிகளையும் இச்செயலி மூலம் பொதுமக்கள் பெற்று பயன்பெறலாம்.
இத்தகைய சிறப்பம்சங்களை கொண்ட காவல் உதவி செயலியை, கூகுள் பிளே ஸ்டோரில் Kaaval Uthavi என ஆங்கிலத்தில் டைப் செய்து தேடினால் பதிவிறக்கம் செய்து எளிதாக பயன்படுத்தலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.