ஓபிஎஸ் புகார்… திமுக நிர்வாகியை தூக்கி எறிந்த ஸ்டாலின்!

Tamilnadu News Update : திமுக நிர்வாகி குற்ற செயல்களில் ஈடுபடுவதாக ஒ.பன்னீர்செல்வம் அளித்த புகாரின் பேரில் முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

CM Stalin Action For DMK Executive For OPS Statmant : சட்டச விரேதமான மணல் குவாரி குற்றச்சாட்டுகளில் ஈடுபட்ட திருச்சி மணப்பாறை கிழக்கு திமுக தொழிற்சங்க நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள திமுக அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது அனைவரின் பாராட்டையும் பெற்று வரும் நிலையில், தற்போது, சட்டவிரோத குற்றங்களில் ஈடுபட்ட கட்சி நிர்வாகியை கட்சியில் இருந்து நீக்கம் செய்துள்ளனர். இதற்கு முன்னதாக இந்த குற்ற சம்பவங்கள் குறித்து முன்னாள் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் விடுத்த அறிக்கையில், இந்த குற்றங்களில் ஈடுபட்டு வரும் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் சென்னை, திருச்சி மற்றும் புதுக்கோட்டை ஆகிய இடங்களிலும் இதே போல் ஒரு சில சம்பவங்கள் நடைபெற்று வருவதாக  பட்டியலிட்டிருந்த ஒ.பன்ன்ர்செல்வம், இந்த குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவது பெரும்பாலும் ஆளும் கட்சி செயற்பாட்டாளர்கள் என்றும், தங்களின் சட்டவிரோத செயல்களுக்கு ஆதரவாக செயல்படுமாறு அரசு அதிகாரிகளை மிரட்டி வருவதாகவும், குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து  சட்டவிரோத மணல் குவாரிக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்ட மணப்பாறை காவல்துறையினருக்கு  திமுக நிர்வாகிகள் மிரட்டல் விடுத்துள்ளதாக கூறிய அவர்,  மாநில சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில், மணப்பாறையில் சட்டவிரோத மணல் குவாரி குற்றச்சாட்டு தொடர்பாக சில நாட்களுக்கு முன்பு காவல்துறையினர் இரண்டு பேரை கைது செய்ததாகவும், அதன்பிறகு திமுக மணப்பாறை கிழக்கு ஒன்றியத்தின் பொறுப்பாளர் எஸ்.அரோக்கியாசாமியின் காவல்துறையினருக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததால், அவர்கள் விடுவிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். இந்நிலையில், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், வெளியிட்டுள்ள அறிக்கையில,  திமுக மனப்பாறை கிழக்கு ஒன்றியம் நிர்வாகி ஆரோக்கியாசாமி கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பதவிகளிலிருந்தும், தற்காலிகமாக செய்யப்படுவதாக அறிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu cm mk stalin action against dmk executive

Next Story
தமிழக விவசாயிகள் போராட்டம்… பயன்களும் கடக்க வேண்டிய தூரமும்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com