முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடற்பயிற்சி செய்வதில் மிகவும் ஈடுபாடு கொண்டவர். தேர்தல் நேரத்தில் பிரச்சாரங்களுக்கு இடையில் சைக்கிளிங் செல்வதையும், உடற்பயிற்சி செய்வதையும் வழக்கமாக வைத்திருந்தார் . அவர் சைக்கிளிங் செல்லும் வீடியோவும் அப்போது வைரலானது. தேர்தல் பிரச்சாரத்தின்போதும் பல கிராமங்களுக்கு நடைபயிற்சி சென்று மக்களை சந்தித்தார்.
தற்போது முதல்வரான பிறகும் எவ்வளவு வேலைகள் இருந்தாலும் காலை மற்றும் மாலை வேளைகளில் உடற்பயிற்சி செய்கிறார். தனது வீட்டில் அமைக்கப்பட்டுள்ள உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சியாளர் ஒருவரது வழிகாட்டுதலில் தினந்தோறும் எளிய முறையிலான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
அவர் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ தற்போது கவனத்தை ஈர்த்து வருகிறது. 68 வயதிலும் உடற்பயிற்சி செய்து வருவதாலேயே இன்னும் இளமையாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கிறார் சிஎம்..
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil