தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூரில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தனி விமான மூலம் சென்னையில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு இன்று வந்தார். முதல்வர் திருச்சி வருகையை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், திருச்சி எம்பி திருநாவுக்கரசர், மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன், மாநகர காவல் ஆணையர் சத்யபிரியா மற்றும் திமுகவினர் பூச்செண்டு கொடுத்து முதல்வரை வரவேற்றனர்.
Advertisment
அப்போது திருச்சி கே.கே நகர் பகுதியை சேர்ந்த ஒய்வு பெற்ற ஆசிரியரும், திமுக பகுதி அவைத்தலைவருமான சுப்பிரமணியன் கோரிக்கை மனு ஒன்றை முதல்வரிடம் அளித்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் சுப்பிரமணியன் கூறுகையில்,
திருச்சி கே.கே. நகர் என்ற பெயரை கலைஞர் கருணாநிதி நகர் என்று முழுமையாக அழைக்கும் படி பெயர் பலகை வைக்க வேண்டும். மேலும், இப்பகுதியில் முதியவர்கள் அதிகம் இருப்பதால் பெரிய மருத்துவமனை கட்டித்தர வேண்டும். இங்குள்ள பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தியும் அடிப்படை பிரச்சனைகளை தீர்த்து வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை மனுவாக முதல்வரிடம் கொடுத்துள்ளேன் முதல்வரும், முதியவர் அளித்த கோரிக்கைக்கு உடனடி தீர்வு காணப்படும் எனத் கூறியதாக தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, திருச்சியில் இருந்து சாலை மார்க்கமாக தஞ்சாவூர் சென்ற முதல்வர் மேரிஸ் கார்னரில் உள்ள திமுக முன்னாள் அமைச்சர் மறைந்த எஸ்.என்.எம் உபயதுல்லா இல்லத்திற்குச் சென்று அவரது திருவுருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார். பின்னர் தஞ்சை சுற்றுலா மாளிகையில் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தியவர் மதிய உணவுக்கு பின் அங்கிருந்து திருவாரூர் சென்றார்.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/