ஒரே நாடு ஒரே தேர்தல் முன்மொழிவு பா.ஜ.க.,வின் ஈகோவை திருப்திபடுத்தும் நடவடிக்கைதான், ஆனால் அவர்களால் அதை ஒருபோதும் செயல்படுத்த முடியாது என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வழிவகை செய்யும் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' முன்மொழிவுக்கு பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்ட ஒப்புதலுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன.
அந்தவகையில் தி.மு.க தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினும் ஒரே நாடு ஒரே தேர்தல் முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது;
”ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நடைமுறைக்கு மாறான ஒரு கருத்தாகும், இது இந்தியாவின் பலதரப்பட்ட தேர்தல் முறையின் சிக்கல்களை புறக்கணித்து கூட்டாட்சியை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. தேர்தல் சுழற்சிகள், பிராந்திய பிரச்சினைகள் மற்றும் நிர்வாக முன்னுரிமைகள் ஆகியவற்றில் உள்ள பரந்த வேறுபாடுகளைக் கருத்தில் கொண்டு, இது நடைமுறை ரீதியாக சாத்தியமற்றது.
எதார்த்தத்துக்கு முரணாக அனைத்து மாநில அரசுகளின் ஆட்சிக்காலத்தையும் ஒரே வரிசையில் கொண்டு வருவது என்பது இயல்பாக நடக்கும் அரசு நிர்வாகத்துக்கு இடைஞ்சலை ஏற்படுத்தும்.
இந்த முழு முன்மொழிவும் பா.ஜ.க.,வின் ஈகோவை திருப்திபடுத்தும் நடவடிக்கைதான், ஆனால் அவர்களால் அதை ஒருபோதும் செயல்படுத்த முடியாது. இந்தியாவின் ஜனநாயகத்தை ஒரு கட்சியின் பேராசைக்கு ஏற்ப வளைக்க முடியாது. இந்த திசைதிருப்பல் தந்திரங்களில் சக்தியை வீணாக்காமல், வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு மற்றும் மாநிலங்களுக்கு வளங்களை சமமாக விநியோகித்தல் போன்ற அழுத்தமான பிரச்சினைகளை மத்திய அரசு தீர்க்க வேண்டும்.” இவ்வாறு ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
#OneNationOneElection is an impractical proposition that ignores the complexities of India's diverse electoral system and undermines federalism. It is logistically unfeasible, given the vast differences in election cycles, regional issues, and governance priorities.
— M.K.Stalin (@mkstalin) September 19, 2024
It will…
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.