ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிட்ட வீரபாண்டிய கட்டப்பொம்மன் நினைவு நாளில், அவருக்கு புகழாரம் சூட்டும் வகையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டுள்ளார்.
/indian-express-tamil/media/post_attachments/36002ffa-32a.jpg)
சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 234 ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கங்களில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுதொடர்பாக ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”ஆங்கிலேய ஆட்சிக்கெதிராகத் தமிழ்நாட்டில் தோன்றிய புரட்சிச் சுடர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் நினைவு நாள்! அந்நியரின் ஆதிக்கம் பொறுக்காமல், நெஞ்சை நிமிர்த்திப் போரிட்ட அவரது புகழ், தென்னாட்டின் வீரம் செறிந்த வரலாற்றுப் பக்கங்களில் எந்நாளும் ஒளிவீசும்!” என்று பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“