சென்னையில் எப்போது நாம் ஒன்றாக சைக்கிள் ஓட்டுவோம் என்று ராகுல்காந்தி எழுப்பிய கேள்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறித்துள்ள பதில் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், காங்கிரஸ் மற்றும் திமுக தொண்டர்கள் மத்தியில் ஆராவாரத்தை உண்டாக்கியுள்ளது.
தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்காக தொழில்முனைவோர்களுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் வெளிநாடு சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு வருகிறார். இதில் இன்று சென்னையில் ₹200 கோடியில் ஆர்.டி மற்றும் பொறியியல் மைய விரிவாக்கத்திற்காக ஈட்டனுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், சிகாக்கோவில் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் 500 வேலை வாய்ப்புகளை உருவாக்கியது.
மேலும் இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவில் அஷ்யூரன்ட்டின் முதல் உலகளாவிய திறன் மையம், விரைவில் சென்னைக்கு வரவுள்ளது என்று மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிந்தார். இந்த பதிவுகள் தமிழகத்தில் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராகுல்காந்தி, சகோதரரே சென்னையில் நமது சைக்கிள் பயணம் எப்போது என்று கேட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலினை டேக் செய்து ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.
ராகுல்காந்தியின் இந்த பதிவு இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், வெளிநாடு சென்றாலும் சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் முதல்வர் ஸ்டாலின் ராகுல்காந்தி கேள்விக்கு உடனாடியான பதில் அளித்துள்ளார். அவர் தனது பதிலில், உங்களுக்கு ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் நீங்கள் சென்னைக்கு வரலாம். ஒன்றாக சென்னையை சைக்கிளில் சுற்றி பார்ப்போம். சைக்கிள் ஓட்டிய பிறகு என் வீட்டில் சுவையான மதிய உணவை ருசிப்போம்.
உங்களுக்கு கொடுக்க வேண்டிய ஸ்வீட் பாக்ஸ் என்னிடம் உள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். கலைஞர் நூற்றாண்டு விழா நாணயம் வெளியீட்டு விழாவின்போது ராகுல்காந்திக்கு அழைப்பு விடுக்காதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பா.ஜக. – தி.மு.க இடையே மறைமுக கூட்டணி உருவாகியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் பலரும் தங்களது விமர்சனங்களை கொடுத்திருந்தனர். தற்போது இந்த விமர்சனங்களுக்கு மு.க.ஸ்டாலின் – ராகுல்காந்தி இருவரும் இணைந்து முற்றுப்புள்ளி வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“