Advertisment

இந்திய முதல்வர்கள் பட்டியலில் ஸ்டாலினுக்கு 3-வது இடம்: இந்தியா டுடே கருத்துக் கணிப்பு

மோடி செல்வாக்கு பெற்ற தலைவராக இருந்தாலும் பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்களின் நிலை வீழ்ச்சியை சந்தித்துள்ளனர்

author-image
WebDesk
New Update
mk stalin, முக ஸ்டாலின், உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள், முக்கிய செய்திகள், தலைப்பு செய்திகள், செய்திகள்

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், தொற்று பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு மாநிலங்களில் புதிய கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்து இதற்கிடையே உத்திரபிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், கோவா, உத்திரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடு, மற்றும் 5 மாநில சட்டசபை தேர்தல் குறித்து மக்களின் மனநிலை எப்படி உள்ளது என்பதை கண்டறியும் வகையில் இந்தியா டுடே நடத்திய கருத்துக்கணிப்பு தொடர்பான முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்தியாவில் மிகவும் செல்வாக்கு பெற்ற தலைவராக பிரதமர் மோடி உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மோடி செல்வாக்கு பெற்ற தலைவராக இருந்தாலும் பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்களின் நிலை வீழ்ச்சியை சந்தித்துள்ள நிலையில், பல மாநிலங்களில் எதிர்கட்சி முதல்வர்களின் செல்வாக்கு உயர்ந்துள்ளதாக இந்த கருத்தக்கணிப்பின் முடிவுகள் தெரிவித்துள்ளது.  

இந்த கருத்தக்கணிப்பில் வாக்களித்த சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களில் 58 சதவீதம்பேர் ஆட்சியாளர்கள் மீது திருப்தி தெரிவித்துள்ளனர். 63 சதவீதம் பேர் பிரதமர் மோடி சிறப்பாக ஆட்சி செய்து வருவதாகவும் கூறியுள்ளனர். இதில் இந்தியாவில் உள்ள பெரிய மாநிலங்களில் ஒன்றான உத்திரபிரதேசத்தில் 75 சதவீதம்பேர் மோடிக்கு ஆதரவு அளித்துள்ளனர். அடுத்து கோவாவில் 67 சதவீதம் பேரும்,  மணிப்பூரில் 63 சதவீதம்பேரும், உத்திரகாணட் 59 மற்றும் பஞ்சாப்பில் 39 சதவீதம் பேரும் ஆதரவு அளித்துள்ளனர்.

மாநில முதல்வர்கள் பட்டியலில், ஒடிசா மாநிலத்தின் மூல்வர் நவீன் பட்நாயக், 71 சதவீதம் ஆதரவு பெற்று முதலிடத்திலும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 69.9 சதவீதம் ஆதரவு பெற்று 2-வது இடத்திலும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், 67.5 சதவீதம் ஆதரவு பெற்று 3-வது இடத்திலும் உள்ளனர். தொடர்ந்து மராட்டிய முதல்வர் (67.8 சதவீதம்) கேரளா முதல்வர் பினராய் விஜயன் (61.1 சதவீதம்) டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் (57 சதவீதம்) அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். ஆனால் பாஜன ஆளும் இமாச்சல பிரதேசம், கர்நாடகா மற்றும் பீகார் மாநில முதல்வர்கள் குறைந்த சதவீத (35-40) வாக்குகளே பெற்றுள்ளனர். அதிலும் கோவா பாஜக முதல்வருக்கு 27 சதவீதம் ஆதரவே கிடைத்துள்ளது.

பாஜக முதல்வர் வீழ்ச்சியை சந்தித்தாலும், பிரதமர் மோடி செல்வாக்கில் முன்னணியில் இருப்பதால், இப்போது தேர்தல் வைத்தாலும் பாஜக 296 இடங்களில் வெற்றி பெறும் என்று கூறப்படுகிறது இதில் காங்கிரஸ கட்சிக்கு கூடுதலாக 10 இடங்களை கைப்பற்ற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருந்தாலும் மறுபுறும், விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட பல பிரச்சனையை எடுத்து கூறி மக்கள் பிரதமர் மோடி மீது அதிருப்தியையும் கூறியுள்ளனர்.

விவசாயிகள் பிரச்சனை மற்றும் கொரோனா தொற்றை எதிர்கொள்ளும் விஷயத்தில் பிரதமர் மோடி மீது மக்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாகவும், நாட்டு மக்களில் 64 சதவீதம் பேர் தங்களது பொருளாதார நிலை குறித்து வேதனை தெரிவித்துள்ளாகவும், பிரதமர் மோடி ஆட்சியில் தொழிலதிபர்கள் தான் லாபம் பெற்றுள்ளதாகவும் 47.7 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.

பிரதமர் பதவிக்கு தகுதியுள்ள நபர் என்ற வகையில் பிரதமர் மோடிக்கு 52.5 சதவீதம் பேரும், ராகுல்காந்திக்கு 6.8 சதவீதம் பேரும் ஆதரவு அளித்துள்ளனர். இதில் கடந்த ஆகஸ்ட் மாதத்துடள் ஒப்பிடுகையில் பிரதமர் மோடியின் செல்வாக்கு இரு மடங்காக (ஆகஸ்ட் மாதம் 24 சதவீதம்) அதிகரித்துள்ள நிலையில், (10 சதவீதம்) ராகுல்காந்தியின் செல்வாக்கு சரிந்துள்ளது.  அதிலும் பிரியங்கா பிரமர் பதவிக்கு பொருத்தமாக இருப்பார் என்று 3.3 சதவீதம் பேரும் மேற்கு வங்க முதல்வ மம்தா பானர்ஜிக்கு 2.6 சதவீதம் பேரும், ஆதரவு அளித்துள்ளனர்.

பாஜகவை எதிர்கொள்ளும் தகுதியுள்ள தலைவராக மம்தாவுக்கு 17 சதவீதம் பேரும்,அரவிந்த கெஜ்ரிவாலுக்கு 16 சதவீதம் பேரும், ராகுல்காந்திக்கு 11 சதவீதம் பேரும் ஆதரவு அளித்துள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

Tamilnadu Mk Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment