/indian-express-tamil/media/media_files/2025/05/27/76Z70G1gCpjKhsRmLNo5.jpg)
திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் மு.க. ஸ்டாலின் மே 31ம் தேதி மதுரை வருகிறார். ஜூன் 1ம் தேதி உத்தங்குடியில் நடைபெறும் கூட்டத்திற்கு முன்னதாக, இரு நாள் ரோடு ஷோவும், திட்டங்களைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.
முதல்வர், மே 31ல் விமானம் மூலம் மதுரை வந்தவுடன், வில்லாபுரம், ஹவுசிங் போர்டு, ஜெய்ஹிந்த்புரம், சோலை அழகுபுரம், ஜீவா நகர், சுந்தரராஜபுரம், டி.வி.எஸ். பாலம், பைபாஸ் ரோடு, பெத்தானியாபுரம் சிக்னல், ஆரப்பாளையம் கிராஸ் ரோடு வழியாக செல்லும் ரோடு ஷோவில் கலந்துகொள்கிறார்.
இதன்போது, முன்னாள் மேயர் முத்து வெண்கல சிலை திறந்து வைக்கப்படும். மேலும், ஜெய்ஹிந்த்புரம் வீரமாகாளியம்மன் கோயில் வாசலில், முன்னாள் அமைச்சர் மூர்த்தி சார்பில் ரூ.50 லட்சத்தில் கட்டப்பட்ட நிரந்தர மெகா பந்தலும், டி.வி.எஸ். நகர் பாலம் ஜெய்ஹிந்த்புரம் பிரிவும் திறக்கப்படவுள்ளன. அந்த இரவு, முதல்வர் அழகர்கோவில் சாலையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் தங்குகிறார்.
மறுநாள் (ஜூன் 1) காலை மீண்டும் ரோடு ஷோ நடைபெற உள்ளது. இந்த ரோடு ஷோ, மாட்டுத்தாவணி ஆர்ச்சிலிருந்து தொடங்கி, உத்தங்குடி வரை நடைபெற இருக்கிறது. இரு நாள் நிகழ்ச்சிகளிலும், மதுரை தெற்கு, மத்திய, மேற்கு, திருப்பரங்குன்றம், வடக்கு, கிழக்கு ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள மக்களை நேரில் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஏற்பாடுகளை அமைச்சர் மூர்த்தி தலைமையில் மாவட்ட திமுக செயலாளர்கள் தளபதி, மணிமாறன் ஆகியோர் முன்னெடுத்து வருகின்றனர். ரோடு ஷோவின் போது இருபுறமும் திரண்டு மக்கள் வரவேற்க இருக்கின்றனர்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.