/tamil-ie/media/media_files/uploads/2021/04/muthalvar.jpg)
Tamilnadu CM Palanisamy Meet Ministers In His Home : தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ந் தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், தனது சொந்த ஊரில் உள்ள முதல்வர் பழனிச்சாமியை அமைச்சர்கள் சிலர் சந்தித்து பேசியுள்ளனர்.
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் கடந்த 6-ந் தேதி நடைபெற்றது. ஒரே கட்டமாக நடைபெற்ற இந்த தேர்தலில் 70 சதவீதத்திற்கு மேலாக வாக்குகள் பதிவானது. இதனைத் தொடர்ந்து வரும் மே மாதம் 2-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது. இந்த தேர்தலில் 5 முதல்வர் வேட்பாளர்கள் போட்டியிட்டாலும், அதிமுகவின் முதல்வர் பழனிச்சாமி, திமுக தலைவர் ஸ்டாலின் இடையே கடும் பொட்டி நிலவி வருகிறது.
இதில் தேர்தலுக்கு முன்பாக வெளியான கருத்துக்கணிப்புகள் இரு கட்சிகளுக்கு சாதகமாக எதிராகவும் இருந்த நிலையில், அனைத்து கட்சிகளும் வரும் மே 2-ந் தேதி வாக்கு எண்ணிக்கைக்காக காத்திருக்கின்றனர். இந்நிலையில், கடந்த 6-ந் தேதி தனது வாக்கை பதிவு செய்வதற்காக தனது சொந்த ஊருக்கு சென்ற முதல்வர் பழனிச்சாமி, தற்போது சேலம் சூரமங்கலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது வீட்டில் தங்கியுள்ளார். தொடர்ந்து நேற்று காலை வீட்டில் இருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அமைச்சர்கள் எம்.சி.சம்பத், ஆர்.பி.உதயகுமார், கே.சி.வீரமணி ஆகியோர் சந்தித்து பேசினர்.
சட்டசபை நடந்து முடிந்த ஒரு சில நாட்களில் நிகழ்ந்த இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்த்தாக கருதப்படுகிறது மேலும் நேற்று முன்தினம் மாலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசியுள்ளார். மேலும், ஈரோடு மாவட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் யுவராஜா மற்றும் சேலம் மேற்கு தொகுதியில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் அருள் ஆகியோரும் மரியாதை நிமித்தமாக முதல்வரை சந்தித்து பேசியுள்ளனர்.
இது ஒருபுறம் இருக்க தேனியில் தனது சொந்த ஊரில் உள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மாமியார் இறந்துவிட்ட நிலையில், துக்கம் விசாரிக்க இன்று (வெள்ளிக்கிழமை) முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இருந்து கார் மூலம் தேனிக்கு புறப்பட்டு சென்றார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us