Advertisment

சென்னையில் வி.பி சிங் சிலை: அகிலேஷ் முன்னிலையில் திறந்து வைத்த ஸ்டாலின்

சென்னை மாநில கல்லுரியில் நடைபெற்ற வி.பி.சிங் சிலை திறப்பு விழாவில், உத்திரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றிருந்தார்.

author-image
WebDesk
New Update
VP Singh

முன்னாள் பிரதமர் வி.பி. சிங் சிலை திறப்பு விழா

இந்தியாவின் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் நினைவு நாளை முன்னிட்டு சென்னை மாநில கல்லூரியில் அவரின் முழு உருவ சிலை திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன், சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கலந்துகெண்டார்.

Advertisment

சுதந்திர இந்தியாவில் 1989-90  காலக்கட்டத்தில் பிரதமராக பதவி வகித்தவர் வி.பி.சிங். கடந்த 2008-ம் ஆண்டு இவர் மரமடைந்தார். தான் பதவியில் இருந்த காலக்கட்டத்தில் காவிரி நதிநீர் தீப்பாயம், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு, 27 சதவீத இட ஒதுக்கீடு உறுதி செய்தது, உள்ளிட்ட பல வரலாற்று சிறப்பு மிக்க திட்டங்களை கொடுத்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களை கவுரவிக்கும் விதமாக அவரின் 15-வது நினைவு தினமான இன்று சென்னையில் அவரது திருவுருவ சிலை திறக்கப்பட்டது.

தமிழகத்தின் சர்பில் சென்னை மாநில கல்லூரியில் வி.பி.சிங் திருவுருவ52 லட்சம் செலவில் அமைக்கப்பட்டது. வி.பி.சிங் நினைவு தினத்தை முன்னிட்டு இந்த சிலை இன்று திறக்கப்பட்டது. சென்னை மாநில கல்லுரியில் நடைபெற்ற இந்த விழாவில், உத்திரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றிருந்தார். மேலும் வி.பி.சிங் மனைவி, சீத்தாக்குமாரி, மகன்கள், அஜய் சிங், அபய் சிங் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அகிலேஷ் யாதவ் ஆகிய இருவரும் வி.பி.சிங் திருவுருவ சிலையை திறந்து வைத்தனர். 600 கிலோ எடை, சுமார் 8.5 அடி உயர பீடத்தில், 9.5 அடி உயரம் கொண்டதாக இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை அமைந்துள்ள கல்வெட்டில் வி.பி.சிங்கின் கருத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் அவரின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து கலைவாணர் அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் அகிலேஷ் யாதவ் மற்றும் வி.பி.சிங் மகன் அஜய் சிங் உள்ளிட்டோர் உரையாற்றினர்.

தொடர்ந்து இந்த விழாவில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்,

வி.பி.சிங் முயற்சியால்தான் பிற்படுத்தப்பட்ட மக்கள் ஓரளவு முன்னேறி இருக்கிறார்கள். ஒன்றிய அரசின் துறை செயலாளர்கள் 89 பேரில் 85 பேரும், ஒன்றிய அரசின் கூடுதல் செயலாளர்கள் 93 பேரில் 88 பேரும் உயர்ஜாதியினர். மத்திய பல்கலைக் கழகங்களில் இதுவரை இடஒதுக்கீடே இல்லை. நீதிமன்றங்களில் 2018 முதல் 2023 வரை நியமிக்கப்பட்ட 604 நீதிபதிகளில் 74 பேர் மட்டுமே பிற்படுத்தப்பட்டவர்கள்.

அரசு துறைகளில் பதவி உயர்வின்போது இடஒதுக்கீடு அமல்படுத்தப்படுவதில்லை. மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பை ஒன்றிய அரசு நடத்த வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், பட்டியலின, பழங்குடியின மற்றும் சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீடு முழுமையாக, முறையாக வழங்கப்பட வேண்டும். வி.பி.சிங் மறையலாம். ஆனால் அவர் ஏற்றி வைத்த சமூகநீதி தீபம் என்றும் அணையாது. தமிழ்நாடு என்றும் அவரை மறக்காது என்று பேசியுள்ளார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Mk Stalin Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment