/tamil-ie/media/media_files/uploads/2022/03/TN-Assembly-1.jpg)
சம்பவத்தன்று கஞ்சா போதையில் இருந்த விக்னேஷ் வர மறுத்து போலீசாரை கத்தியால் தாக்க முயன்றுள்ளார் என சென்னையில் விசாரணைக் கைதி விக்னேஷ் மரணம் தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
காலை உணவு சாப்பிட்ட பின் விக்னேஷுக்கு வலிப்பு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, விக்னேஷ் மரணம் தொடர்பாக சட்டசபையில் அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தது.
அதைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் இவ்வாறு விளக்கம் அளித்தார். சென்னை மாநகர காவல்துறையில் இரவு வழக்கமாக மேற்கொள்ள கூடிய வாகன சோதனையின் போது சென்னை பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ்,சுரேஷ் வந்த ஆட்டோவை கெல்லிஸ் அருகே காவல்துறையினர் நிறுத்தினர்.
கஞ்சா போதையில் இருந்த அவர்களை போலீசார் விசாரணை நடத்தினர்.அப்போது வாகனத்தையும்,அவர்களை சோதனை செய்தனர். சோதனையில் கஞ்சா,மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.பின்னர் அவர்களை காவல்நிலையத்திற்கு வருமாறு அழைத்தனர்.
அப்போது விக்னேஷ் என்பவர் காவல்நிலையத்திற்கு வர மறுத்திருக்கிறார்.மறுத்தது மட்டுமில்லாமல் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் காவல்துறையினர் குத்த முயற்சித்துள்ளார்.
இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்தனர். ஆட்டோவில் இருந்த கஞ்சா மற்றும் மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கும் பதிவு செய்தனர்.
கடந்த 19 ஆம் தேதி அவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. அப்போது விக்னேசுக்கு வாந்தி மயக்கம்,வலிப்பு ஏற்பட்டுள்ளது.
ஓமந்தூரார் அரசினர் வளாகத்தில் கருணாநிதிக்கு சிலை: சட்டசபையில் ஸ்டாலின் அறிவிப்பு
உடனே அவர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அவரை பரிசோததித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதை தொடர்ந்து இறப்பின் மீது சந்தேகம் என வழக்குப்பதிவு செய்து மாஜிஸ்திரேட் விசாரணை நடைபெற்று வருகிறது.
உயிரிழந்த விக்னேஷின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும், சுரேஷின் உயர்சிகிச்சை செலவை அரசே ஏற்கும் என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.