Advertisment

நீதிபதி சி.டி செல்வம் தலைமையில் போலீஸ் ஆணையம்: ஸ்டாலின் உத்தரவு

Tamilnadu News Update : தமிழக காவல்துறை குற்றங்களை தடுக்கும் துறையாகவும்,  தண்டனை பெற்றுத்தரும் துறையாக மட்டும் இல்லாமல், குற்றங்கள் நடக்காத சூழ்நிலையை உருவாக்கும் துறையாக செயல்பட வேண்டும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
நீதிபதி சி.டி செல்வம் தலைமையில் போலீஸ் ஆணையம்: ஸ்டாலின் உத்தரவு

Tamilnadu Police Commission Formed : சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சி.டி.செல்வம் தலைமையில், புதிய காவல் ஆணையம் அமைத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Advertisment

காவலர்கள் மற்றும் பொதுமக்களிடையே உறவை மேம்படுத்தவும், காவல்துறை பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டும், அவர்களுக்கு தேவையான திட்டங்களை புதிய முயற்சியின் மூலம் பரிந்துரைக்கும் நோக்கத்துடன் காவல் ஆணையம் ஒன்று அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.  இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சி.டி.செல்வம் தலைமையில், புதிய காவல் ஆணையம் அமைப்பதற்பு முதல்வர் ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார்.

தமிழக காவல்துறை குற்றங்களை தடுக்கும் துறையாகவும்,  தண்டனை பெற்றுத்தரும் துறையாக மட்டும் இல்லாமல், குற்றங்கள் நடக்காத சூழ்நிலையை உருவாக்கும் துறையாக செயல்பட வேண்டும் என்று கலைஞரின் வழியில் செயல்பட்டு வரும் இந்த அரசு, உறுதியாக உள்ளது என்று இந்த அறிக்கையின் மூலம் முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே மாநிலத்தின் ஒட்டுமொத்த வளம் மற்றும் பொருளாதார வளர்ச்சி, அமைதியான சூழல், சமூக நல்லினக்கத்தை பாதுகாத்தல் போன்ற பல்வேறு பணிகளில் காவல்துறையினர் தங்களது முயற்சியை தோய்வில்லாமல் செய்துகொண்டிருக்கிறது என்று கூறியுள்ளார்.

இதன் காரணமாக காவல்துறையின் பணிகள் மேலும் சிறக்க பல்வேறு திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. அதன் அடிப்படையில் தான் காவலர் பொதுமக்களிடையே நல்லுறவை மேம்படுத்துவதற்காக முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையிலான அரசு 1969, 1989, மற்றும் 2006 என 3 முறை காவல் ஆணையம் அமைத்து அவற்றின் பரிந்துரைகளை பெற்று காவல்துறையின் செயல்பாடுகளை  மேம்படுத்துவதற்காக அவ்வப்போது நடவடிக்கைகளை மேற்கொண்டது.

இதன் தொடர்ச்சியாக தற்போது திமுகவின் 2021-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் அறிக்கையில், மீண்டும் திமுக ஆட்சி அமைந்து 4-வது முறையாக காவல் ஆணையம் அமைத்து ஒரு கால வரையறைக்குள் அதன் பரிந்துரைகளை பெற்று நடைமுறைப்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தது. இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமான கடந்த 13.09.2021 அன்று சட்டப்பேரவையில்,

காவல்துறை மானிய கோரிக்கை தொடர்பான விவாரத்திற்கு பதிலளித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், காவலர் பொதுமக்களிடையே நல்லுறவை மேம்படுத்தவும், காவல்துறை பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டும், அவர்களுக்கு தேவையான திட்டங்கள் மற்றும் பயிற்சி முறைகளையும், பரிந்துரைக்கும் நோக்கத்துடன் காவல் ஆணையம் ஒன்று மீண்டும் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக தற்போது தமிழகத்தில் காவல் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது .

இந்த ஆணையத்தில் தலைவராக சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சி.டி.செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து .கா. அலாவுதீன் (ஐஏஎஸ் அதிகாரி, ஒய்வு),  முனைவர் .கே இராதாகிருஷ்ணன் (ஐபிஎஸ் அதிகாரி, ஒய்வு),  மனநல மருத்துவர்.சி.இராமசுப்பிரமணியம், முன்னாள் பேராசிரியர் முனைவர் நளினி ராவ் ஆகியோரை உறுப்பினர்களாகவும், காவல் துறை குற்றப்புலனாய்வு) கூடுதல் இயக்குநர் திரு. மகேஷ்குமார் அகர்வால் அவர்களை உறுப்பினர்-செயலராகவும் நியமனம் செய்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Cm Mk Stalin Police
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment