கோவையில் கருணாநிதி குடும்பத்தின் மற்றொரு துக்க நிகழ்வு: ஒரே நேரத்தில் ஸ்டாலின்- அழகிரி வருகை

Tamilnadu News Update : முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்திய நிலையில், அவருடன், உதயநிதி ஸ்டாலின், சகோதரி மு.க.செல்வி ஆகியோர் உடன் வந்திருந்தனர்.

CM Stalin And MK Azhagiri Same Home In Covai : திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் மகன் மு.க.தமிழரசு. தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினின் சகோதரரான இவர் தமிழ் சினிமாவி்ல் ஒரு சில படங்களை தயாரித்துள்ளார். இவரது மகன் அருள்நிதி தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ளார்.

இந்நிலையில், மு.க.தமிழரசுவின் மாமியார் ஜெயலட்சுமி நுரையீரல் மற்றும் மூச்சுப்பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை மரணமடைந்தார். அவரது உடல் அஞ்சலி செலுத்துவதற்காக கோவை வடவளளியில் வைக்கப்பட்டிருந்தது. கருணாநதியின் குடும்பத்தினர் அனைவரும் அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.  

அதனைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் காலை 10  கோவை சென்று அஞ்சலி செலுத்தினார். அதற்கு முன்னதாகவே அவரின் மூத்த சகோதரர் மு.க.அழகிரி ஜெயலட்சுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு அதன்பிறகு அங்கேயே இருந்தார். அதன்பிறகு அங்கு வந்த முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்திய நிலையில், அவருடன், உதயநிதி ஸ்டாலின், சகோதரி மு.க.செல்வி ஆகியோர் உடன் வந்திருந்தனர்.

மேலும் அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், முத்துச்சாமி, பெரியகருப்பன் முரசொலி செல்வம் உள்ளிட்டோருடன், ஐஜி சுதாகர், டிஐஜி முத்துச்சாமி, எஸ்பி, செல்வசாகத்தினம் உள்ளிட்டோரும் இருந்தனர். முதல்வர் அஞ்சலி செலுத்தும்போது அவரது அண்ணன் மு.க.அழகிரி அந்த வீட்டில் இருந்தார். இரவரும் ஒரே வீட்டில் இருந்தால் சந்திக்க நேரிடும்என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 45 நிமிடங்கள் வீட்டில் இருந்தும் முதல்வர் மு.க.அழகிரி சந்திப்பு நிகழ்வில்லை.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu cm stalin funeral for mother in law of mk tamilarasu in covai

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com