Tamilnadu CM Stalin gym work out videos goes viral: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் எப்போதும் உடல் நலனுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறார். பரபரப்பான அரசுப் பணிகள் மற்றும் அரசியல் பணிகளுக்கு இடையிலும் காலை மற்றும் மாலை வேளைகளில் தவறாமல் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக கடைப்பிடித்து வருகிறார்.
மேலும் அடிக்கடி சைக்கிள் பயணமும் மேற்கொண்டு வருகிறார். சென்னையிலிருந்து மாமல்லபுரம் வரை சைக்கிள் பயணம் செய்து வருகிறார். இவ்வாறு சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் போது, பொதுமக்களைச் சந்தித்து, அவர்களையும் உற்சாகப்படுத்தி வருகிறார். தொடர்ந்து தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை வெளியிட்டு, மக்களையும் அவ்வாறு செய்யும்படி முதல்வர் ஸ்டாலின் தூண்டுகிறார்.
சமீபத்தில் தொல்காப்பியர் பூங்காவில் நடைப்பயிற்சி சென்ற முதல்வர் ஸ்டாலின், பின்னர் அதுதொடர்பான படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தார். அந்த பதிவில், ”நாம் ஒவ்வொருவரும் நமது பணியில் செலுத்தும் கவனத்தில் சிறு அளவேனும் நம் உடல்நலத்தைப் பேணுவதிலும் செலுத்தவேண்டும். சுவர் இருந்தால்தான் சித்திரம் தீட்ட முடியும். உடல்நலனும் உள்ளநலனும்தான் உண்மையான செல்வங்கள், என்று பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், முதல்வரின் புதிய உடற்பயிற்சி வீடியோ ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திமுக எம்.பி வில்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோக்களைப் பகிர்ந்துள்ளார்.
நமது மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஆரோக்கியமே செல்வம் என்று எப்போதும் பிரச்சாரம் செய்து, உங்கள் உடல்நலத்தை மேம்படுத்தக்கூடிய வழக்கமான உடல் செயல்பாடு அல்லது உடற்பயிற்சியை அறிவுறுத்தி வருகிறார்; இது உங்களை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும்; வகை 2 நீரிழிவு நோய், புற்றுநோய் மற்றும் இருதய நோய்கள் போன்ற பல நோய்களை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்கும். இது உடனடி அல்லது நீண்ட கால பலன்களைக் கொண்டிருக்கலாம். அவரது பிஸி ஷெட்யூல் தவிர மாண்புமிகு தமிழக முதல்வர், அவர் எங்கு சென்றாலும் இதை கவனமாக பின்பற்றுகிறார்! என்று பதிவிட்டுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.