பேபி அணையில் மரங்களை வெட்ட அனுமதி கொடுத்த கேரளா அரசுக்கு நன்றி : முதல்வர் ஸ்டாலின் கடிதம்

Tamilnadu News : முல்லை பெரியாறு அணைக்கு கீழ் உள்ள பேபி அணையில் உள்ள 15 மரங்களை வெட்ட அனுமதி கொடுத்த கேரளா அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

CM Stalin Letter To Kerala CM For Mullai Periyar Dam : முல்லைப் பெரியாறு அணையில் உள்ள பேபி அணைக்கு கீழே உள்ள பதினைந்து மரங்களை வெட்டுவதற்கு கேரள வனத்துறை அனுமதி வழங்கியுள்ள நிலையில், இந்த நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனுக்கு, கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், முல்லைப் பெரியாறு அணையில் உள்ள பேபி அணைக்கு கீழே உள்ள பதினைந்து மரங்களை வெட்டுவதற்கு கேரள வனத் துறை அனுமதி வழங்கியுள்ளது குறித்து நீர்வளத் துறை அதிகாரிகள் மூலம் தமக்கு தகவல் கிடைத்துள்ளது. பேபி அணை மற்றும் மண் அணையை வலுப்படுத்த இந்த நீண்ட கால கோரிக்கை மிகவும் முக்கியமானது.

இந்த அனுமதியை வழங்கியமைக்காக கேரள அரசுக்கும் கேரள முதல்வர் அவர்களுக்கும், தமது அரசு சார்பிலும், தமிழகத்தின் தென் மாவட்ட மக்கள் சார்பிலும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது இரு மாநில மக்களுக்கும் நீண்ட காலத்திற்குப் பயனளிக்கும் வகையிலும், அவர்களுக்கிடையே நல்லுறவு மேலும் வலுப்பட வழிவகுக்கும் என்றும் நம்புகிறேன்

முல்லைப் பெரியாறு அணையை மேலும் வலுப்படுத்துவதற்கும், தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள தமிழகத்தின் உறுதிப்பாட்டை தான் மீண்டும் வலியுறுத்துவதாகவும், தமிழகத்தின் சார்பில் வந்துள்ள முக்கியமான கோரிக்கைகளையும் விரைவுபடுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் நீண்டகாலமாக நிலுவையில் இருந்த மரங்கள் வெட்டுவதற்கான அனுமதியை வழங்கிய கேரள முதலமைச்சர் அவர்களுக்கும், கேரள அரசுக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்வதாகத் குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu cm stalin letter to kerala cm for mullai periyar dam issue

Next Story
டிஎன்பிஎஸ்சி புதிய உறுப்பினர்கள் நியமனத்தை ரத்து செய்க: ராமதாஸ்ramadoss
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express