அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் அமைப்பான ஜாக்டோ - ஜியோ அமைப்பின் மாநாடு சென்னை தீவுத்திடலில் இன்று நடைபெற்றது. வாழ்வாதாரம் நம்பிக்கை என்ற கருத்தை மையப்படுத்தி நடத்தப்பட் இந்த மாநாட்டில் 2020-ம் ஆண்டு தேசிய கல்வி கொள்கை, ஜிஎஸ்டி வரி விதிப்பு உள்ளிட்ட சிலவற்றை ரத்து செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் சிறப்புரையாற்றினர். அப்போது பேசிய அவர், நீங்கள் தீவுத்திடலில் கூடியுள்ளீர்கள். தனி தீவில் அல்ல. கோட்டையை உள்டக்கியதுதான் உங்கள் தீவு. நீங்கள் அரசு ஊழியர்கள் நான் மக்களின் ஊழியன். அரசையும் அரசியலையும் யாராலும் பிரிக்க முடியாது.
திமுக 6-வது முறையாக ஆட்சியை பிடித்ததற்கு அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் தான் முக்கிய காரணம். நீங்கள் அதிக எதிர்பார்ப்போடு வந்துள்ளீர்கள். அதை நிறைவேற்றும் இடத்தில் நாள் இருக்கிறேன். உங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று நாள் உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன்.
கடந்த அதிமுக ஆட்சியில் நீங்கள் போராடியபோது நடவடிக்கை எடுக்கப்பட்டது. திமுக அரசு ஆட்சிக்கு வந்ததும் அந்த நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட்டது. அதன்பிறகு தாமதமின்றி ஊதியம், அகவிலைப்படி உயர்வு கொடுத்துள்ளோம். இங்கு வரும்போதே உங்களின் கோரிக்கைகள் சிலவற்றை நிறைவேற்றும் கோப்புகளுக்கு கையெடுத்திட்டுவிட்டு தான் வந்திருக்கிறேன்.
தமிழகத்தில் பள்ளி கல்வித்துறை மறுசீரமைப்பு செய்யப்பட்டு வருகிறது. தற்காலிக பணியில் உள்ள 16 ஆயிரம் ஆசியர்கள் 60 வயது வரை பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மக்கள் நலனுக்கான அறிவிப்புகள் வந்துகொண்டேதான் இருக்கும். மகளிர் இலவச பேருந்து பயணத்திட்ட்திற்காக 1500 கோடி ரூபாய் செலவாகிறது. கூட்டுறவு கடன் தள்ளுபடி, காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கப்பட உள்ளது.
உங்கள் துறை அமைச்சர்களிடம் நேரடியாக கோரிக்கை வைக்கலாம். விரைவில் அவை நிறைவேற்றப்படும். வீண் போகாது. நாங்கள் சொன்தை மட்டுமல்லாமல் சொல்லாததையும் செய்கிறோம் உங்களால் உருவான அரசு உங்களுக்கு துணை நிற்கும் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“