CM Stalin And PM Modi Meet Update : முதல்வர் ஆன பின் முதல்முறையாக வெளியாடு பயணம் மேற்கொண்டு திரும்பிய முதல்வர் ஸ்டாலின், தற்போது 4 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். அங்கு அவருக்கு தமிழக எம்பிக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
30 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது. அப்போது முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியிடம் அளித்த தமிழகத்தின் வளர்ச்சித்திட்டங்கள் தொடர்பாக கோரிக்கை மனுவை அளித்தார்.
அந்த மனுவில் குறிப்பிட்ப்பட்ட 14 கோரிக்கைகள் :
காவிரியின் குறுக்கே கர்நாடக மேகதாது அணைகட்டும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க கூடாது
பாக் வளைகுடாவில் இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை பாதுகாத்தல், மற்றும் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல
கட்சத்தீவை மீட்பது மற்றும் தமிழர்களின் பாரம்பரிய மீ்ன்பிடி உரிமையை மீட்டெடுப்பது
நிலக்கரி குறித்த விவகாரங்களில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு அதிக அளவிலாள நிலக்கரியை பெறுவதற்கான முன்னெடுப்புகள் மற்றும் கூடுதலான ரயில் தொடர்கள் ஒதுக்கீடு செய்ய கோருதல்
ரெய்கர் – புகழுர் உயர் மின் அழுத்த மின் தொடரமைப்பினை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த சொத்தாக அறிவித்தல்
மாநிலங்களுடன் மேல் வரிகள் மற்றும் கூடுதல் கட்டணம் மூலம் வரும் வருவாயைப் பகிர்ந்து கொள்வது.
ஜூன் 2022-க்குப் பின்பும் ஜி.எஸ்.டி. இழப்பீட்டை தொடர்ந்து வழங்குதல்.
மருத்துவ மாணவர் சேர்க்கை கொள்கை மற்றும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுக்கு (NEET) எதிர்ப்பு.
உக்ரைனில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் படிப்பு தடைபட்ட நிலையிலிருந்து இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் படிப்பைத் தொடர வழியைக் கண்டறிதல்.
பிரதம மந்திரி வேளாண்மை பயிர் பாதுகாப்புத் திட்டத்திற்கு (PMFBY) ஒன்றிய அரசின் பங்களிப்பை முந்தைய நிலைக்கு உயர்த்துதல்.
காலணி உற்பத்தியில் பிஎல்ஐ (PLI) திட்ட அறிமுகம்.
டிடிஐஎஸ் (DTIS) திட்டத்தில் தமிழ்நாடு பாதுகாப்பு தொழில்துறை வழித்தடத்திற்கு முன்னுரிமை ஒதுக்கீடு
தமிழ்நாட்டில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) ஆய்வுக்கூடம் அமைத்தல்
சேலம் எஃகு ஆலையின் மிகை நிலம் பாதுகாப்பு தொழில் பூங்காவிற்கு வழங்கப்படுதல்
மப்பேடுவில் மல்டி மாடல் லாஜிஸ்டிக் பார்க் (MMLP) வரை ரயில் பாதை அமைத்தல்.
தேசிய கல்வி கொள்கை -2020 என்பது மாநில சுயாட்சிக்கே எதிரானது. அதில் இடம்பெற்றுள்ள பல்வேறு அம்சங்களும் தமிழக மாணவர்கள் நலனுக்கு எதிரானது என்பதால், அந்தக் கொள்கை விலக்கிக்கொள்ளப்பட வேண்டும்.
சென்னை மெட்ரோ ரயில் திட்டம் - II- இந்திய அரசுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே 50:50 பங்கு அடிப்படையில் ஒப்புதல்.
பிற்படுத்தப்பட்டோர் நலன் 2022ல் ஹஜ் புனிதப் பயணத்திற்கான புறப்படும் இடமாக சென்னையை அறிவிக்கக் கோரிக்கை.
இலங்கை தமிழர் பிரச்சினை-ஈழத் தமிழர்களுக்கு சம உரிமையியல் மற்றும் அரசியல் உரிமைகள்.
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலையின் காரணமாக அல்லலுறும் இலங்கை தமிழர்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை தமிழக அரசின் சார்பில் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பாக.
தமிழ்நாட்டில் புதிய ரயில்வே திட்டங்கள் தேவை.
நியூட்ரினோ ஆய்வக (INO) திட்டத்தை கைவிடக் கோரிக்கை.
கூடங்குளம் அணுமின் திட்டம் – செலவழித்த அணு எரிபொருள் நீக்குதல் தொடர்பாக (SNF)
நரிக்குறவர்கள்/குருவிக்காரர்கள் சமூகங்களை தமிழ்நாட்டின் பட்டியல் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்தல்
உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமர் மோடியிடம் அளித்தார்.
முன்னதாக இலங்கையில் நிலவும் பொருளாதார நெருங்கடி தொடர்பாக இந்திய தூதரகத்தின் சார்பில் இலங்கை தமிழர்களுக்கு உதவ வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். மேலும் வரும் ஏப்ரல் 2-ந்தேதி டெல்லி பாஜக அலுவலகத்திற்கு அருகில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தை திறப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் டெல்லி சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.